அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வழி செய்யும் வகையில் தமிழக சட்டசபையில் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து ஏகமனதாக கடந்த செப்டம்பர் மாதம் 15ந் தேதி ஒரு சட்டத்தை நிறைவேற்றின. அந்தச் சட்டம் ஆளுநரின் ஒப்புதலு க்காக உடனே அனுப்பியும் வைக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் அந்தச் சட்டத்திற்கு ஆளுநர் இந்நாள் வரை ஒப்புதல் அளிக்கவில்லை ; இன்னும் மூன்று, நான்கு வாரங்கள் அவகாசம் கேட்டார். இது இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தையே கேலிக்கு உள்ளாக்கும் செயலாகும் ஆளுநரின் செயலைக் கண்டித்து எதிர்க் கட்சிகள் அனைத்தும் போராடி வந்தன. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வோ ஆளுநரின் எதேச்சதிகாரச் செயலைக் கண்டிக்கத் துணிச்சல் இல்லாமல், ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கும் வரை மருத்துவப் படிப்புக்கான கலந்தாலோசனையை நடத்த மாட்டோம் எனக் கோழைத்தனமாக அறிவித்தது. இந்த நிலையில் திடீரென நேற்று (29.10.2020) அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு ஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்தும் வகையில் தமிழக அரசு அரசாணை ஒன்றைப் ப
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்