Skip to main content

Posts

உண்மையான ஜனநாயகத்தைப் படைப்பதை நோக்கி மக்கள் போராட்டம் விரிவடைய வேண்டும்!

  இந்தியாவில் உள்ள முதலாளிய ஜனநாயகத்தில் மக்களுக்கு வாக்களிக்கும் உரிமை. பேச்சுரிமை , எழுத்துரிமை , கூட்டம் கூடும் உரிமை எனப் பல உரிமைகள் அடிப்படை உரிமைகளாக அரசியல் அமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவற்றில் பேச்சுரிமை , எழுத்துரிமை , கூட்டம் கூடும் உரிமை போன்றவை எல்லாம் ஏட்டளவிலேயே உள்ளன ; அவை நடைமுறையில் அதிகார வர்க்கத்தின் தயவிலேயே உள்ளன. இவற்றில் வாக்களிக்கும் உரிமை மட்டும் இது நாள் வரையிலும் கட்டுப்படுத்தப்படாமலும் பறிக்கப்படாமலும் இருந்து வந்தது. இன்று அந்த உரிமையும் ஆட்சியாளர்களால் பறிக்கப்பட்டுள்ளது.   சிறப்புத் தீவிரத் திருத்தம் ( Special Intensive Revision) என்ற பெயரில் நாடு முழுவதும் 13 கோடி மக்களின் வாக்குரிமையை இந்தியத் தேர்தல் ஆணையம் பறித்துள்ளது. ஆளும் கட்சியான பாஜக வின் விசுவாசமான ஏஜண்டாக இருந்து , மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளில் முக்கியமான ஒன்றான வாக்குரிமையைப் பறித்து ஜனநாயக விரோதியாக , மக்கள் விரோதியாக , தேசத் துரோகியாக மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு , கையும் களவுமாகப் பிடிபட்டு நிற்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் . இந்த மக்கள் வ...
Recent posts

அரசு என்றால் என்ன? அதன் பாத்திரம் என்ன?

  அரசு இருக்கும் வரை சுதந்திரம் இருக்காது ; சுதந்திரம் இருக்கும் போது அரசு இருக்காது - லெனின் நாம் வர்க்கப் போராட்டத்தில் ஈடுபடும்போது , அமைப்பை எதிர்த்துப் போராடும் போது , முதலாளித்துவ அமைப்பை அச்சுறுத்தும் போது , நாம் அரசு அதிகாரத்தை எதிர்கொள்கிறோம் . காவல்துறைதான் நமது ஆர்ப்பாட்டங்களை நெருக்கமாகக் கவனித்துக்கொள்கிறது . நாம் அவர்களுக்கு ஏற்ற வகையில் நடக்காவிட்டால் அல்லது போர்க்குணத்துடன் இருந்தால் நம்மைக் கைது செய்கிறது . நீதிமன்றங்கள் காலநிலை மாற்றம் தொடர்பான செயல்வீரர்களை சிறைக்கு அனுப்பி வைக்கின்றன . எளிய இளைஞர்கள் போதைப் பொருள் வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறைகளில் அடைத்து வைக்கப்படுகின்றனர் . இந்தச் சட்டங்களை நிர்வகிக்கும் அரசாங்க அதிகார வர்க்கங்களால் அடிமைப்படுத்தப்படுகிறோம் அரசின் இயல்பையும் தோற்றங்களையும் புரிந்து கொள்வதுதான் முக்கியமானது. முதலாளித்துவத்தின் கீழ் நமது வாழ்க்கை வர்க்கம் மற்றும் வர்க்க வேறுபாடுகளால் வடிவமைக்கப்படுகிறது . “ நிலவும் சமுதாயத்தின் இது வரையிலான வரலாறு வர்க்கப்...