Skip to main content

Posts

Showing posts from January, 2021

தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவதில் முதலாளிகளின் கைத்தடியாக அரசு!

     கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் நரசபுரத்தில் , தைவான் நாட்டை சேர்ந்த விஸ்ட்ரான் எனும் நிறுவனம் அமைந்துள்ளது . இந்த நிறுவனமானது அமெரிக்காவைச்   சேர்ந்த ஆப்பிள் செல்போன் நிறுவனத்திற்கான பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது . இதில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியக் குறைப்பு செய்ததாலும், ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாலும் , மிகைப்பணி நேரத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து 12 மணி நேரம் வேலை செய்யத் தொழிலாளர்கள் நிர் ப்பந்தம் செய்யப்பட்டதாலும் டிசம்பர் 12 அன்று தொழிலாளர்கள் நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டனர் . அந்தப் போராட்டமானது ஆலையை நொறுக்குமளவிற்குத் தீவிரமானது . இதனையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டதோடு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக   160 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .      ஐபோன் உற்பத்தியில் முதன்மையாக விளங்கும் ஆப்பிள் நிறுவனமானது தானே நேரடி உற்பத்தியில் முழுவதுமாக ஈடுபடாமல் முகவ