Skip to main content

Posts

Showing posts from September, 2021

தொழிலாளர்களை கொத்தடிமைகளாக்கும் கிக் (GIG) பொருளாதாரம்!

கிக்( GIG) பொருளாதாரம் என்பது குறுகிய கால , நிச்சயமற்ற தன்மையதான வேலைப் பிரிவினையை அடிப்படையாகக் கொண்டது. குறுகிய காலத்திற்கு மட்டுமே பணிக்கு அமர்த்தி , தான் விரும்பும் பொழுது அமர்த்தவும் , துரத்தவும் ( HIRE and FIRE) கூடிய நிரந்தரத் தன்மையற்ற வேலைமுறையைக் கொண்டு தொழிலாளர்களை வரைமுறையின்றிச் சுரண்டக் கட்டமைக்கப்பட்டு வரும் இந்த வேலை முறை இன்று பரவலாக அதிகரித்து வருகிறது. கிக் வேலைமுறையில் இருக்கும் வேலைகள் தற்காலிகமானவையோ , பருவகாலங்களைச் சார்ந்ததோ அல்ல , தொடர்ச்சியான வேலைகளை அளிக்கும் சாத்தியங்களைக் கொண்டவையாகும். வேலைகள் நீடித்த தன்மையைக் கொண்டதாக இருந்தாலும் , அதில் பணியாற்றும் தொழிலாளர்கள் தற்காலிக நிலையிலேயே வைக்கப்பட்டு சுரண்டப்படுகின்றனர் இந்த வேலை முறையில் வேலை நேரமானது மிக குறுகியதாகவோ அல்லது மிக நீண்டதாகவோ இருக்கக் கூடும். இது வேலையின் அளவு அடிப்படையில் ஊதிய முறையைக் கொண்டுள்ளது. எனினும் வேலையானது தொடர்ச்சியாகக் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. முதலாளிகள் வேலை வழங்கும்பொழுது முடித்துத் தர வேண்டும் , மற்ற நேரங்களில் வேலைக்காகக் காத்திருக்க வேண்டும். இந