Skip to main content

Posts

Showing posts from July, 2022

அரசு – உடைபடும் பிம்பம்

அரசு என்பது எல்லோருக்கும் பொதுவானது ; தொழிலாளர்கள் , விவசாயிகள் , வணிகர்கள், முதலாளிகள், அரசு ஊழியர்கள் இவர்கள் எல்லோருக்கும் மேலானது ; அந்தந்த நாட்டின் அரசுகள் தான் எல்லாவற்றையும் , எல்லோரையும் கட்டுப்படுத்தி எதுவும் வரம்பு மீறாமல் சமூகத்தை இயல்பு நிலையில் வழி நடத்துகின்றது ; வெளியிலிருந்து வரும் பொருட்களையும் , மூலதனத்தையும் நிர்வகித்துச் சொந்த நாட்டு இறையாண்மையைப் பேணுகிறது. இதற்காகவே இறக்குமதி , ஏற்றுமதித் தீர்வைகள் மூலம் உள்நாட்டு உற்பத்தி , வினியோகத்தில் சமன்பாட்டை உருவாக்குகிறது ; நாடுகளுக்கிடையேயான உறவைப் பேணி ஒத்திசைவான சூழலை உருவாக்குகிறது ; இயற்கை வளங்களையும் , சுற்றுச்சூழலையும் நெறியாள்கை செய்து சமூகப் பாதுகாப்புக்கு அரணாக நிற்கிறது ; அரசு நிர்வகிக்கும் அனைத்துத் துறைகளின் சொத்துக்களும் மக்கள் அனைவரின் உடைமை எனும் பொருளில் பொதுச் சொத்துக்கள் எனப்படுகிறது .   மேற்குறிப்பிட்ட கருத்துக்கள் அனைத்தும் மக்களின் பொதுப்புத்தியில் உறைந்துபோன கருத்துக்கள் . உண்மையில் அரசு இப்படித்தான் இருக்கிறதா ? எல்லோருக்குமாகத் தான் அரசு இயங்குகிறதா ? அரசின் நீதி , நிர்வாகத் துறை

வரலாற்றின் திருப்புமுனையில் இலங்கை

“...புரட்சியின் முதலாவதும், முதன்மையானதும், அடிப்படையானதுமான அடையாளம் என்னவென்றால் அரசு அதிகாரம் ஒரு வர்க்கத்திடமிருந்து இன்னொரு வர்க்கத்திடம் செல்வதாகும். கறாரான அறிவியல் சார்ந்தும், நடைமுறை அரசியல் சார்ந்தும் புரட்சி என்ற வார்த்தையின் பொருள் இதுதான்.”                                          -- லெனின், ஏப்ரல் ஆய்வுரை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடமிருந்து 1948ல் சுதந்திரம்   பெற்ற இலங்கை கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று பொருளாதார நெருக்கடியிலும் அரசியல் நெருக்கடியிலும் சிக்குண்டு உள்ளது. உணவுப் பொருட்களின் கடுமையான விலையேற்றங்கள், சமையலுக்கான எரிவாயு உருளைகள் பற்றாக்குறை, பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருள்கள் இல்லாமை. மின்சாரத் தட்டுப்பாடு, மருந்துகள் கிடைக்காமை என வாழ்க்கைக்கு இன்றியமையாத அனைத்துப் பொருட்களும் கிடைக்காத நிலையில் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்து ஆட்சியாளர்களை எதிர்த்து மக்கள் பெரும் போராட்டங்களைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். இலங்கை முதலாளிகளும் பன்னாட்டு முதலாளிகளும் சேர்ந்து இலங்கையின் வளத்தையும் மக்களையும் ஒட்டச் சுரண்டி ஓட்டாண்டியாக்கி விட்டனர்; மக்களை வ