Skip to main content

Posts

Showing posts from October, 2022

பாசிசம் வீழ்த்தப்பட வேண்டும்!

  1932 ஆகஸ்டு 30 ஆம் தேதியன்று நாசிச சக்திகள் வளர்ந்து வரும் சூழலில் , கிளாரா ஜெட்கின் ( ஜெர்மன் மார்க்சிஸ்ட் , ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர் ) அவர்களால் ரீச்ஸ்டாக்கின் ( ஜெர்மனியின் பாராளுமன்றம் ) கடைசி அமர்வானது தொடங்கி வைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் மூத்த உறுப்பினர் என்ற முறையில் ,   ஜெட்கின் அதன் தலைவராகத்   தொடக்க உரையாற்றும்   உரிமையைக்   கொண்டிருந்தார் . அவர் தனது உரையைப் பாசிச அபாயத்தை நொறுக்கவும் , முதலாளித்துவ அரசைத் தூக்கியெறியவும் , சோசலிசப் புரட்சியை நோக்கி முன்னேறவும் அனைத்து உழைக்கும் மக்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்றுபட வேண்டும் என அழைப்பு விடுக்கப் பயன்படுத்திக் கொண்டார் . ஏனெனில் இது ( ரீச்ஸ்டாக் )   நாசிச சக்திகளின் வளர்ச்சிக்கு உடந்தையாகவும் , ஜெர்மனியின் அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதாகவும் , பெரும் மந்த நிலைமையின் பயங்கரங்களை எதிர்கொள்ளும்   ஆற்றலற்றதாகவும் இருந்தது. ஏறக்குறைய பார்வையற்ற நிலையில், நடக்க இயலாத நிலை இருந்த போதிலும் ( அவரை மேடைக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது ), அவரைப் படுகொலை செய்வதற்கான நா...

எது வளர்ச்சி?

  உலகப் பெரும் பணக்காரர் பட்டியலில் எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் (2014 ல் ) 642- வது இடத்திலிருந்த அதானி தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்திருப்பதாக த் தரவுகள் தெரிவிக்கின்றன . அவர் சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் உலக பணக்காரர்கள் 80 பேரை ப் பின்னுக்குத் தள்ளி முன்னேறியிருக்கிறார் . அவரது வருமானம் நாளொன்றுக்கு 1612 கோடி . தற்போது திடீரென்று - அதிக ச் சொத்துக்கள் கொண்ட வெளிநாடு வாழ் இந்தியராக அவரது சகோதரர் பெயரும் பட்டியலுக்கு வந்திருக்கிறது . இன்னும் கூட ப் பல பினாமிகள் பெயரில் சொத்துக்கள் பகிரப்பட்டிருக்கும் . அதற்கு வேறுவேறு காரணங்களும் , கண்ணோட்டங்களும் கூட இருக்கலாம் . இவ்வளவுக்குப் பின்னரும் கூட முன்னேறி உலக அளவில் இரண்டாம் இடம் பிடிக்கிறார் எனில் என்ன ஒரு முன்னேற்றம் ! இது சாதாரண வளர்ச்சியல்ல ; அசுர வளர்ச்சி . அம்பானியின் வளர்ச்சியும் ஒன்றும் சளைத்ததல்ல . அவரது வளர்ச்சி எந்தப் பின்னணியும் இல்லாமல் திடீர் பிரவாகம் என்கிறார்கள் அம்பானியின் அடிப்பொடிகள் . நான்கு லட்சம் சதுர அடிகளில் இருபத்து ஏழு தளங்களில் எண்ணற்ற அறைகள் , நீச்சல் குளங்கள் , ஹெலிபேட் , கோவில் , திரைய...