Skip to main content

Posts

Showing posts from November, 2022

இட ஒதுக்கீடு – எளிய மக்களின் எட்டாக் கனி!

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் பெறப்பட்ட மத்திய அரசின் புள்ளிவிபரங்கள் அதிகார வர்க்கத்தில்   சாதிகளின் பிரதிநிதித்துவம் சமகாலத்தில் எந்த அளவில் இருக்கிறது என்பதை ஆதாரபூர்வமாக தெரிவிக்கின்றன . மத்திய அரசு நிறுவனங்களின் அதிகாரிகளில் முற்பட்ட வகுப்பினரின் பிரதிநிதித்துவம் பின்வரும் பட்டியல் வழியாக அறியமுடிகிறது . இந்திய மேலாண்மை நிறுவனம் (IIM)….99% மத்திய பல்கலைக்கழகங்கள் 40- ல் ….95% தேசிய வங்கி இயக்குனர்கள் 484 பேரில் …100% இரயில்வேத் துறை ….69% / நிதி ஆயோக்கில் …74% மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை உள்ளிட்ட 71 துறைகளில் ..63% குடியரசு தலைவர் மற்றும் துணைத்தலைவர் அலுவலகம் …75% மத்திய அமைச்சரவை செயலகத்தில் …63% --- இப்படிப் பொதுவாக மத்திய அரசில் இவர்கள் வகிக்கும் பங்கு என்பது 63% முதல் 90% வரை நீள்கிறது .  ஒரு தனிப்பட்ட சாதியாக பிராமணர்களின் பங்கு என்னவாக இருக்கிறது என்று பார்ப்போம் . இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளில் …(IAS) 72% மாநில தலைமைச் செயலாளர்களில் ……73% / துணை செயலாளர்கள் ..62% உச்ச நீதிமன்