போராட்டங்களில் என்ன அடையாளப் போராட்டங்கள் ? போராட்டங்களைப் பொருளாதாரப் போராட்டங்களாகக் குறுக்கிவிடுவதும் , சீர்திருத்தக் கோரிக்கைகளுக்கானவையாக மாற்றீடு செய்வதும் , தெளிவான அரசியல் போராட்டங்களாக அதைப் பரிணமிக்க விடாமல் பார்த்துக் கொள்வதும், பெயரளவுக்கு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதுடன் திருப்தி அடைவதும் தான் அடையாளப் போராட்டங்கள் . இவை ஆளும் வர்க்கத்தை எதிர்ப்பது போல் போக்குக் காட்டி , அதை ஆதரிக்கும் அடையாளப் போராட்டமாக வடிவமெடுத்து வர்க்க எதிர்ப்புச் சாரத்தைப் பேரிழப்புக்கு உள்ளாக்கும் . மிகத் தெளிவாகத் தெரியும் வர்க்க அரசியலைக் கைவிட்டுவிட்டு ஆளும் வர்க்கத்திற்கு எதிராக என்ன வகையான போராட்டத்தை முன்னெடுத்தாலும் , அவை வர்க்கக் காட்டிக் கொடுத்தல்களுக்கு தான் இட்டுச் செல்லும் . தொலைநோக்கோடு கூடிய , தத்துவார்த்த அடித்தளத்தோடு இணைந்த , அதிகார மாற்றத்திற்கான பொருளாதாரப் போராட்டங்களும் , அரசியல் , கலாச்சாரப் போராட்டங்களும் தான் வர்க்கப் போராட்டங்கள் . வர்க்க உணர்வோடு கூடிய இந்தப் போராட்டங்கள் பொருளாதாரப் போராட்டத்தோடு நின்றுவிடாமல் வர்க்க அதிகாரத்திற்காக நீள்கிறது . ஆளும் வர்க்கத்துக்கு எதிரா
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்