தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023இல் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட 12 மணிநேர வேலைநாள் சட்டத்திருத்ததை தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பின்னர், தமிழக அரசு இந்தச் சட்டத்தின் மீதான மேல் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இது தமிழக தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பிற்கு கிடைத்த வெற்றியாகும். எனினும், இந்த சட்டத்திருத்ததை திரும்ப பெறுவதாக தமிழக அரசு அறிவிக்கவில்லை, அடுத்த கட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக மட்டுமே அறிவித்துள்ளது. மீண்டும் இதன் மீதான மேல் நடவடிக்கைகள் எப்பொழுது வேண்டுமானாலும் முன்னெடுக்கப்படலாம். எனவே இந்த சட்டத்திருத்ததை தமிழக அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும். இது மட்டுமல்லாமல், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புதிய தொழிலாளர் சட்டங்களுக்கான தமிழக அரசின் விதிமுறைகளில் வேலைநாளை எட்டு மணி நேரம் என்பதற்கு பதிலாக 12 மணி நேரம் என வரையறை செய்துள்ளது. இந்திய அரசு தொழிலை இலகுவாக நடத்துதல் என்ற பெயரில் முதலாளி வர்க்கத்தின் சுரண்டல் நலனை பாதுகாக்கும் வண்ணம், தொழிலாளர்களின் உரிமைகளை
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்