சங்கர் குஹா நியோகி 1943 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 அன்று ஜல்பைகுரியில் பிறந்தார் . ஓர் இளைஞராக வேலைக்காக எஃகு நகரமான பிலாய்க்கு வந்தவர் அங்கு எஃகுத் தொழிலாளர்களின் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார் . முன்பு மத்தியப் பிரதேசத்தின் பகுதியாக இருந்த சட்டிஸ்கார் கிராமப் புறங்களுக்கும் அவர் சென்றுவரத் தொடங்கினார் . தல்லிராஜாரா சுரங்கங்களிலிருந்து இரும்புத் தாதுவை எடுப்பதற்கு கிராமப்புறத் தொழிலாளர்கள் ( அவர்களில் பெரும்பாலானவர்கள் பழங்குடி மக்கள் ) ஒப்பந்த முறையில் சுரண்டப்பட்டு வந்ததை அறிந்தார் ; எஃகு ஆலை நிரந்தரத் தொழிலாளர்களைவிட அந்தக் கிராமப்புற ஒப்பந்தத் தொழிலாளர்கள் பெருமளவுக்குத் துன்புற்று வந்ததை உணர்ந்து கொண்டார் . அவர்களை ஒன்று திரட்டுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டார் . அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆஷா என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டிருந்த அவருக்கு அப்போது வயது முப்பத்தியிரண்டு . நியோகி தொடக்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் ( மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் ) வழியில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார் . ஆனால்...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்