உத்திரகாண்ட் மாநிலம் சார் தாம் (நான்கு மதத் தல) தேசிய நெடுஞ்சாலை (Char Dham National Highway Project) திட்டத்தின் ஒரு பகுதியாக உத்திரகாசி மாவட்டத்தில் கட்டப்பட்டு வரும் பர்கோட் சில்கியாரா சுரங்கப்பாதை இடிந்ததில் அதில் பணியாற்றி வந்த 41 தொழிலாளர்கள் நவம்பர் 12 ஆம் தேதியன்று அதிகாலை 5.30 மணி அளவில் சிக்கிக் கொண்டனர். 17 நாட்கள் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பிறகு அவர்கள் மீட்டெடுக்கப்பட்டனர். இமயமலை பகுதியில் அமைந்துள்ள கேதர்நாத், பத்ரிநாத், யமுனோத்ரி, கங்கோத்ரி ஆகிய நான்கு மதத் தலங்களை இணைக்க கூடிய நான்கு மதத் தல தேசிய நெடுஞ்சாலை திட்டம் 2016இல் திட்டமிடப்பட்டது. 12000 கோடி மதிப்பிலான 889 கி.மீ நீளமுள்ள இந்த நெடுஞ்சாலை திட்டம் இமயமலை பகுதியில் விரிந்த சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப் பாதைகள் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கத் திட்டமிடப்பட்டது. இந்தத் திட்டத்தின் தொடக்கத்திலிருந்தே புவியியல் மற்றும் சுற்றுச்சூழல் விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை. பர்கோட் - சில்கியாரா சுரங்கப் பாதையானது 13 மீட்டர் அகலமும், 9 மீட்டர் உயரமும் கொண்டது. 4.5 கி.மீ தொலைவு கொண்ட இந்த இருவழி சுரங்கப் ப
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்