Skip to main content

Posts

Showing posts from February, 2025

முதலாளிகளுக்கும் உயர் நடுத்தர வர்க்கத்தினருக்கும் சலுகைகள், மக்கள் நலத் திட்டச் செலவுகளில் வெட்டு - இதுதான் இந்திய அரசின் நிதிநிலை அறிக்கை

  பிப்ரவரி 1 ஆம் தேதியன்று விக்சித் பாரத் ( வளர்ந்த இந்தியா ) எனும் கவர்ச்சிகரமான முழக்கதுடன் 2025 - 26 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா  சீ தாராமன் தாக்கல் செய்தார் . இந்திய அரசின் பட்ஜெட் என்பது உத்தேசமான ஒதுக்கீடுகள் தானே தவிர அவை அப்படியே நடைமுறையில் நிறைவேற்றப்படுவதில்லை . இவற்றில் சில வகையினங்களுக்கு முழுமையாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதில்லை , சிலவற்றில் ஒதுக்கீடு செய்ததைக் கூடப் பயன்படுத்துவதில்லை. பெரும்பாலானவற்றில் இந்தத் திட்ட மதிப்பீடுகள் மீண்டும் மறுமதிப்பீடு செய்யபட்டு மாற்றியமைக்கப்படுகின்றன . எனினும் , வரும் நிதியாண்டில் இந்திய அரசின் பாதை எத்தகைய திசை வழியை நோக்கிச் செல்கின்றது என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும் . அனைவருக்குமான வளர்ச்சி என்ற பெயரில் சில சில்லறைச் சீர்த்திருத்தங்களைப் பட்ஜெட்டில் அறிவிக்கும் அரசு , எப்பொழுதும் முதலாளிகளின் நலனைப் பாதுகாக்கும் வகையில்தான் நிதி நிலை அறிக்கையைத் தயார் செய்கின்றது . ஆட்சியிலிருக்கும் கட்சி இது எளிய மக்களுக்கான...