Skip to main content

Posts

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ரவுடித்தனம்!

  வெனிசுலாவின் தலைவர் நிக்கோலாஸ் மது ரோ  போதைப் பொருளை அமெரிக்காவிற்குக் கடத்தும் கும்பலின் தலைவராக உள்ளார் எனக் கூறியும் அவர் பயங்கரவாதக் கும்பலுக்குத் தலைவராக உள்ளார் எனக் கூறியும் கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவின் ட்ரம்ப் வெனிசுலாவைத் தம் கப்பற்படையைக் கொண்டு முற்றுகை இட்டிருந்தார். வெனிசுலாவிலிருந்து வெளியேறும் படகுகளைப் போதைப் பொருட்களைக் கடத்துவதாகக் கூறி விமானப் படைகளைக் கொண்டு தகர்த்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வந்தார். வெனிசுலாவிலிருந்து வெளி நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு செல்லும் கப்பல்களைக் கடற்கொள்ளைக்காரனைப் போலக் கைப்பற்றித் தன் நாட்டிற்குக் கொண்டு சென்றார். இந்த நிலையில் ஜனவரி 3 ந்தேதி அதிகாலை சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகளின் சபையின் விதிகளையும் மீறி, வெனிசுலாவின் இறையாண்மையையும் மீறி அமெரிக்க விமானப்படை அந்த நாட்டுத் தலைநகர் காரகஸ் மீது திடீர்த் தாக்குதலைத் தொடுத்து மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரசையும் கைது செய்து அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றுள்ளது. இந்த அநீதியான செயலை அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன. உண்மையில் மதுரோ போதைப் பொரு...
Recent posts

தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக மாற்றும் புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள்!

  இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள ஊதிய சட்டத் தொகுப்பு (The Code On Wages, 2019) , தொழில் உறவுகள் சட்டத் தொகுப்பு ( The Industrial Relations Code, 2020) , பணியிடப் பாதுகாப்பு, சுகாதாரம், மற்றும் பணிநிலைமைகள் சட்டத்தொகுப்பு (The Occupational Safety, Health and Working Conditions Code, 2020) , சமூகப் பாதுகாப்பு சட்டத் தொகுப்பு (The Code on Social Security, 2020) ஆகிய நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகள் தொழிலாளர்களுக்குச் சமூகப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டாலும், இந்த சட்டத் தொகுப்பு கோடிக்கணக்கான தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் அடிப்படை உரிமைகளைத் தகர்க்கும் நோக்குடனும், தொழிலாளர்களை மேலும் கடுமையாகச் சுரண்டி முதலாளி வர்க்கத்தின் இலாபத்தைப் பெருக்கும் நோக்குடனும் உருவாக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் தொழிலாளர் சட்டங்களும் தொழிலாளர்களின் நலன்களைக் காக்கக் கூடியதாக இல்லை. எனினும், கடந்த காலங்களில் தொழிலாளி வர்க்கம் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகப் போராடிப் பெற்ற குறைந்தபட்ச உரிமைகளும் கூட சட்டத் திருத்தங்களின் மூலம் இல்லாமல் செ...

இலாப வெறி முதலாளியத்திற்கு முடிவு கட்டும்!

  2005ல் கொண்டு வரப்பட்ட ‘மாகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்திற்குப்’ பதிலாக ‘வளர்ந்த இந்தியாவிற்கான ஊரக வேலை வாய்ப்பு மற்றும் வாழ்வாதாரத்திற்கான உத்திரவாதம் அளிக்கும் திட்டம் (Viksik Bharath Gurantee for Rozgar and Ajeevika Mission Gramin)’ என்னும் சட்டத்தை அவசர அவசரமாக டிசம்பர் 18 ந்தேதி எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புகளுக்கு இடையில் பாஜக ஒன்றிய அரசு பாராளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. 2005ல் கொண்டு வரப்பட்ட திட்டம் மகாத்மா காந்தி தேசியஊரக வேலை வாய்ப்புத் திட்டம் வேலைக்கான உரிமை என்ற கொள்கை அடிப்படையில் கொண்டு வரப்பட்டது என்று கூறப்பட்டாலும் முதலாளியப் பொருளாதார அமைப்பின் நெருக்கடியைக் குறைப்பதற்காகக் கொண்டு வரப்பட்ட ஒரு திட்டம் என்பதுதான் உண்மையாகும். கடந்த நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகளிலிருந்து முதலாளிய ஆளும் வர்க்கம் கடைப்பிடித்து வரும் புதிய தாராளவாதக் கொள்கை சமூகத்தில் கடுமையான பொருளாதார ஏற்றத் தாழ்வை உருவாக்கக் கூடியதாக உள்ளது. பொருளாதார வளர்ச்சி என்பது மக்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்காத வளர்ச்சியாக உள்ளது. ஏனென்றால் மூலதனச் செறிவு கொண்ட தொழிற்சாலைகள...

செவிலியர்கள் போராட்டமும், செவி சாய்க்காத திமுக அரசும்!

  கொரோனா முதல் மழைக்காலம் , விபத்து , மகப்பேறு வரை வாழ்க்கையின் எல்லா எல்லைகளிலும் உயிர் காக்கும் முன் வரிசைப் பணியாளர்கள் செவிலியர்கள் . அவர்கள் தினமும் நோயாளியின் உயிருக்கும் மரணத்துக்கும் நடுவே நின்று வேலை செய்கிறார்கள் . ஆனால் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் , வேலைஉறுதி , நலன்கள் , மரியாதை – இவற்றைப் பார்த்தால் அவர்களின் மீதான சுரண்டலும், ஒடுக்குமுறையும் தெளிவாக வெளிப்படுகின்றது தமிழகத்தில் ஆயிரக்கணக்கான செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையிலும், தொகுப்பூதியம் அடிப்படையிலும் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வருகின்றனர் . 8 முதல் 10 ஆண்டுகள் வரை நிரந்தரம் இல்லாமல் , குறைந்த சம்பளத்தில் , அதிகப் பணிச்சுமையோடு அரசு மருத்துவமனைகளில் சேவை செய்து வருக்கின்றனர் . விரிவடைந்த அரசு மருத்துவக் கல்லூரிகள் , புதிய மருத்துவமனைகள் , மல்டி – ஸ்பெஷாலிட்டி மையங்கள் – எல்லாவற்றிற்கும் முதுகெலும்பாக இருப்பது இந்தச் செவிலியர்களே ; ஆனால் அவர்கள் வாழ்க்கை மட்டும் நிச்சயமற்றதாகவே உள்ளது . பணி நிரந்தரம் செய்வதாகக் கூறி மாறி மாறி மாநில அரசின் ஆட்சிக் கட்டில...