Skip to main content

நவம்பர் சோசலிசப் புரட்சியின் படிப்பினையிலிருந்து கற்போம்!


ரசியாவில் ஜார் மன்னனைத் தூக்கி எறிந்த 1917 பிப்ரவரி முதலாளியப் புரட்சிக்குப் பிறகு  லெனின் தனது புகழ் பெற்ற  ஏப்ரல் ஆய்வுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்:



”ரசியாவில் இப்போதுள்ள சூழ்நிலையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த நாடு புரட்சியின் முதல் கட்டத்திலிருந்து இரண்டாவது கட்டத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது என்பதாகும். முதல் கட்டம், பாட்டாளி வர்க்கத்துக்குப் போதுமான வர்க்க உணர்வும் அமைப்பும் இல்லாமையினால் முதலாளி வர்க்கத்தின் கைகளில் அதிகாரத்தை வழங்கியது. இரண்டாவது கட்டம், பாட்டாளி வர்க்கத்தின் கையிலும் உழவர் வர்க்கத்தின் மிகவும் வறிய பிரிவினரின் கையிலும் அதிகாரத்தை         வழங்க வேண்டும்.”
(லெனின்  தொகுப்பு நூல்.24 பக்.22 )



ஓராண்டுக்குப் பிறகு நவம்பர் புரட்சியைத் திரும்பிப் பார்த்த லெனின் பின்வருமாறு எழுதினார்:


 நமது கருத்தின் சரியான தன்மையை புரட்சி மேற்கொண்ட பாதை உறுதி செய்திருக்கிறது. முதலாவது, ’அனைத்து’ உழவர்களையும் ஒருங்கிணைத்து முடியரசுக்கும் நிலவுடைமையாளர்களுக்கும் மத்தியகாலத்தன்மைக்கும் எதிராக நடத்திய போராட்டம்; இந்த அளவுக்கு முதலாளிய வர்க்க ஜனநாயகப் போக்குடையதாக புரட்சி அமைந்திருந்தது. பிறகு கிராமப் பணக்காரர்கள், குலாக்குகள், கொள்ளை இலாபக்காரர்கள் ஆகியோரை உள்ளடக்கிய முதலாளியத்துக்கு எதிராக ஏழை உழவர்கள், அரைப் பாட்டாளிகள் மற்றும் சுரண்டப்பட்ட அனைவரையும் ஒன்றிணைத்து நடத்திய போராட்டம்; இந்த அளவுக்கு புரட்சி ஒரு சோசலிசப் போக்குடையதாக அமைகிறது. முதல் கட்டத்துக்கும் இரண்டாவது கட்டத்துக்கும் இடையில் ஒரு செயற்கையான சீனச் சுவரை எழுப்ப முயல்வதும் பாட்டாளி வர்க்கத்தின் ஆயத்த நிலைமை, பாட்டாளி வர்க்கம் ஏழை உழவர்களோடு  கொண்டிருந்த ஐக்கியத்தின் அளவு என்பதை விடுத்து வேறு எதனைக் கொண்டும் இவ்விரண்டையும் பிரித்துப் பார்க்க முயல்வதும் மார்க்சியத்தை அபாயகரமான வழியில் சிதைப்பதாகும்; அதைக் கொச்சைப்படுத்துவதாகும்; அதற்குப் பதிலாக மிதவாதத்தைக் கொண்டு வருவதாகும்.          
-(லெனின்,தொகுப்பு நூல்..28,பக்.300)


Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...