Skip to main content

எரிமலையின் மீது ஓர் அடிக்கல் நாட்டு விழா

 
பார்ப்பனர்கள் வேதங்கள் ஓத, சங்கப் பரிவாரங்கள் மகிழ்ச்சியில் திளைக்க, முப்பத்து முக்கோடி தேவர்களும் தேவலோகத்திலிருந்து பூ மாரி பொழிய, ஆகஸ்ட் 5 அன்று இந்த நாட்டின் பிரதமர் மோடி தனது திருக்கரங்களால் வெள்ளியாலான செங்கல்லை எடுத்துத் தர அயோத்தியில் இராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது
 
 
முப்பத்து முக்கோடி தேவர்களும் பூ மாரி பொழிந்ததை நீ கண்டாயா? என்று சிலர் கோபமாகக் கேட்கலாம். அதை நம்ப மறுக்கலாம். ஆனால் சங்கப் பரிவாரங்களும் பா..கட்சியினரும் அவர்களுடைய ஊதுகுழல்களான முதலாளிய ஊடகங்களும் இந்த நிகழ்ச்சியைஇந்திய மக்கள் நூற்று முப்பது கோடிப் பேரின் கனவு இன்று நிறைவேறியது. இது இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சிஎன்று திரும்பத்திரும்ப பரப்புரை செய்து கொண்டிருந்தபோது அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டோம்
 
இராமர் கோயில் நூற்று முப்பது கோடி மக்களின் கனவாக இருந்தது எனக் கூறியபோது அந்தக் கூற்றின் மீது நமக்குச் சிறிதும் சந்தேகம் வரவில்லை. அதை நாம் நம்பினோம். ஆனால்முப்பத்து முக்கோடி தேவர்கள் பூ மாரி பொழிந்தனர்என்பதை மட்டும் கேள்வி கேட்கிறோம். தேவர்கள் பூ மாரி பொழிந்தது எப்படிக் கற்பனையோ அது போலவே இந்த நாட்டில் உள்ள நூற்று முப்பது கோடி மக்களும் இராமர் கோயில் கட்ட விரும்பினார்கள் என்பதும் கற்பனைதான்.
 
2019ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் மொத்தம் வாக்களித்தவர்களில் 37 விழுக்காட்டினர் தான் பா...விற்கு வாக்களித்தவர்கள். அவர்கள் இந்திய மக்கள் தொகையில் 17.2 விழுக்காட்டினர் தான் எனப் புள்ளி விவரம் கூறுகிறது. அவர்களில் எல்லோரும் இராமர் கோயில் கட்டுவதற்காக வாக்களித்தவர்கள் இல்லை. பல்வேறு காரணங்களுக்காக அக்கட்சிக்கு வாக்களித்தவர்கள். உண்மை இவ்வாறிருக்க சங்கப் பரிவாரங்கள் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கின்றனர். தாங்கள்தான் இந்தியா என்று நிறுவ முயல்கின்றனர். புராணப் புளுகுகளை எல்லாம் உண்மை என்று நம்பி அதை எல்லோரும் வரலாறாக ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் கருதுபவர்கள் வேறு எவ்வாறு இருக்க முடியும்?
 
இராமன் அன்பே உருவானவன்என அவனுடைய பெருமைகளைத் தொலைக்காட்சிகளில் பேசியவர்கள் எல்லாம் தொடர்ந்து எடுத்துரைத்தனர். அனைவரையும் சகோதரனாகப் பார்த்தவன் என்று கூறினர். கங்கைக் கரையில் குகனையும் இலங்கைக் கரையில் விபீடனையும் சகோதரனாக ஏற்றவன் என்று விளக்கம் அளித்தனர். “சன்தொலைக்காட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இராமன் வர்ணாசிரம தர்மத்தை மீறித் தவம் செய்த சம்புகனைக் கொன்ற கதையையோ வாலியை மறைந்திருந்து வஞ்சகமாகக் கொன்ற கதையையோ அவர்கள் கூறவில்லை. அவற்றைக் கூறியிருந்தால் இராமன் அன்பே உருவானவன் என்ற பொய் அம்பலப்பட்டுப் போயிருக்கும்
 
இராமனும் அன்பே உருவானவன் அல்ல. அவனுடைய பெயரைப் பயன்படுத்திக் கொண்டு அரசியல் செய்யும் சங்கப் பரிவாரங்களும் அன்பே உருவானவர்கள் அல்ல. இவர்கள் இராமனின் பெயரால் இரத யாத்திரை நடத்திப் பல நூறு உயிர்களைப் பலி கொண்ட கதையை நாம் அறிவோம்.
 
அயோத்தியில் பாபர் மசூதி இருந்த அதே இடத்தில் இராமர் கோயில் கட்ட சங்கப் பரிவாரக் கும்பல்களுக்கு அனுமதி அளித்த உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ந் தேதி பாபர் மசூதியை இடித்தது சட்ட விரோதமான செயல் எனவும் சங்கப் பரிவாரங்களின் மீது குற்றமும் சாட்டியிருந்தது. ஆனால் குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களைத் தண்டிக்காமல் அந்த இடத்தை அவர்களிடமே ஒப்படைத்துக் கோயில் கட்ட அனுமதித்ததுதான் முரண்நகை. “நீதிதேவனின் மயக்கத்தில்விளைந்த தீர்ப்பு இது. இது இந்திய நீதித்துறை' வரலாற்றில் மறக்க முடியாத தீர்ப்பு.
 
நிருத்யா கோபால் தாஸ், சம்பத் ராய் இருவரும் பாபர் மசூதியில் இடித்தவர்களில் முக்கியமானவர்கள் என மத்தியப் புலானாய்வு அமைப்பு (CBI) குற்றப் பத்திரிக்கை சமர்ப்பித்து உள்ளது. ஆனால் கோயில் கட்ட அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள அறக்கட்டளையின் தலைவர் நிருத்ய கோபால் தாஸ், செயலர் சம்பத் ராய். இந்த நாட்டில் ஆட்சி மாறினால் கிரிமினல்கள் தியாகிகள் ஆகி விடுகின்றனர்.
 
 
இராமர் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்ட ஆகஸ்ட் 5 ந் தேதியை சங்கப் பரிவாரங்கள் தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் என்ன? அதில்தான் அவர்களின் குரூரமான வக்கிர புத்தி வெளிப்படுகிறது. கடந்த ஆண்டு இதே நாளில்தான் ஜம்மு-கஷ்மீர் மக்களுக்கு அளிக்கப்பட்டிருந்த, பெயரளவில் நடைமுறையில் இருந்த சிறப்பு அந்தஸ்தையும் தன்னாட்சி உரிமைகளையும் இந்த ஆட்சியர்கள் பறித்தனர். அந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாகவே அதே நாளில் இந்த ஆண்டு இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் விழாவை வைத்துள்ளனர்.
 
இந்த நாட்டில் ஒப்பீட்டளவில் அதிக உரிமைகளைப் பெற்றிருந்த ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தின் உரிமைகளை இந்த ஆட்சியாளர்கள் பறித்து, அதை யூனியன் பிரதேசமாக்கி ஓராண்டாகி விட்டது. அங்குள்ள மக்கள் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு இராணுவக் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளனர். ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா கூட இந்த அளவுக்கு மோசமான கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என அருந்ததி ராய் கூறுகிறார்.
 
தம்முடைய தன்னாட்சியும் சுதந்திரமும் காக்கப்படும் என்ற நம்பிக்கையில் இந்தியாவுடன் இணைந்த ஜம்மு-கஷ்மீர் மக்களுக்கு இந்திய ஆட்சியாளர்கள் துரோகம் இழைத்தனர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலிருந்தே படிப்படியாக அதன் உரிமைகளைப் பறித்து வந்த ஆட்சியாளர்கள் பா... ஆட்சியில் அதை நிறைவு செய்து விட்டனர். இந்திய முதலாளிகள் அந்த மாநிலத்தின் வளங்களைத் தங்கு தடையின்றிக் கொள்ளையடிக்கவும் அங்குள்ள மக்களின் நிலங்களைப் பறிக்கவும் முழுமையாகக் கதவைத் திறந்து விட்டனர்.
 
நாட்டின் ஒரு பகுதி மக்களைத் தமது அடிமைகள் போல ஒடுக்கி வருகின்றனர் இந்த ஆட்சியாளர்கள்.
 
இந்திய அரசியல் அடிப்படைச் சட்டத்தையே கேள்விக்குள்ளாக்கும் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பலர் முறையிட்டும் அதை ஒரு அவசரமான, முக்கியமான பிரச்சினையாகக் கருதவில்லை உச்சநீதிமன்றம். அரசியல் அடிப்படைச் சட்டத்தை அச்சுறுத்தும் இன்னொரு சட்டமான குடியுரிமைத் திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்தும் ஏராளமான பேர் உச்சநீதி மன்றத்தை நாடினர். ஆனால் அயோத்தியில் இராமர் கோயில் கட்ட அனுமதி அளித்த தீர்ப்பை அறிவித்த கையோடு நீதிதேவதை உறங்கச் சென்று விட்டது. அலாவுதினின் மந்திரவிளக்குப் பூதத்தைப் போலவே இங்குள்ள நீதிதேவதையும் தனது எஜமானர்களுக்கு வேண்டியதை எல்லாம் வழங்குகிறது; அவர்களது உயிர் இருக்கும் வரை பதவிகளையும் பெருமைகளையும் பெற வழி வகுக்கிறது.
 
 
இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டும் இந்தத் தருணத்தில் காங்கிரஸ்காரர்கள் தங்களுடைய இராம பக்தியைக் காட்டத் தொடங்கியுள்ளனர். ‘ராஜீவ் காந்தியே இராமர் கோயிலைக் கட்ட விரும்பினார்என்கின்றனர். “கடவுள் இராமரே நமது நம்பிக்கையின் மையமாக இருக்கிறார். இராமர் மீதான நம்பிக்கையில் இன்று நமது நாடு இயங்குகிறது. அதனால்தான் அயோத்தியில் இராமர் பிறந்த இடத்தில் ஒரு பெரிய கோயில் கட்டப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம்.” எனக் காங்கிரசின் திக்விஜய் சிங் கூறுகிறார். இராமரைக் கை விட்டதனால்தான் இந்து வாக்காளர்கள் தம்மைக் கை விட்டனர் என ஆட்சியை இழந்த அவர்கள் இப்பொழுது புலம்புகின்றனர்.
 
இராமரைக் கை விட்டதனால் மக்கள் அவர்களைக் கை விடவில்லை. முதலாளிகளுக்கு ஆதரவான அவர்களுடைய சட்டங்களும், அதனால் மக்கள் மத்தியில் அதிகரித்து வந்த வேலையின்மையும், வறுமையுமே அவர்கள் மக்கள் செல்வாக்கை இழந்ததற்குக் காரணம். மக்கள் செல்வாக்கை இழந்த கட்சியை முதலாளிய ஆளும் வர்க்கம் தொடர்ந்து தனது ஏஜண்டாக வைத்துக்கொள்ள விரும்பவில்லை. அவற்றைப் பயன்படுத்திக் கொண்டு பா... மதத்தையும் அரசியலையும் கலந்து மக்களைக் ஏமாற்றித் தனது வாக்கு வங்கியை அதிகரித்துக் கொண்டது. தனது முதலாளிய எஜமானர்களின் நம்பிக்கையைப் பெற்றது. அவர்களுடைய நிதியையும் ஊடகங்களின் ஆதரவையும் பெற்றது; ஆட்சிக் கட்டில் ஏறியது.
 
காங்கிரஸ் கட்சியும் தனது அரசியல் இலாபத்திற்காக மதத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் கட்சிதான். இந்திராகாந்தி தன்னுடைய காலத்தில் பஞ்சாபில் அகாலிதளத்தின் செல்வாக்கை வீழ்த்த சீக்கிய மதக் கடும்போக்காளர் பிந்தரன்வாலேவைப் பயன்படுத்தினார். ராஜீவ் காலத்தில் ஷா பானு வழக்கின் போது ஷரியத் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் முஸ்லீம் கடும்போக்காளர்களைத் திருப்திபடுத்த ஷரியத் சட்டத்திற்கு ஆதரவாகப் பாராளுமன்றத்தின் மூலம் சட்டத் திருத்தம் கொண்டு வந்தார். பிறகு இந்து மதக் கடும்போக்கார்களைத் திருப்திபடுத்த அயோத்தியில் விவாதத்திற்குரிய இடத்தில் இராம பூஜை செய்ய அனுமதித்தார்
 
இவ்வாறு வாக்கு வங்கிக்காக மதவாதிகளைத் திருப்திபடுத்தும் நோக்கில் அரசியல் சட்டத்தின் மதச்சார்பற்றதன்மையை நீர்த்துப் போகச் செய்தனர் காங்கிரஸ் கட்சியினர். பா...வினர் வெளிப்படையாகச் செய்யும் செயலை காங்கிரஸ் கட்சியினர் மறைமுகமாகச் செய்தனர். வேறுபாடு என்னவென்றால் காங்கிரஸ் கட்சி மதச்சார்பற்றதன்மை என்ற பெயரில் அனைத்து மதங்களிலும் உள்ள கடும்போக்காளர்களைத் திருப்திப்படுத்தி வாக்கு வங்கிகளைத் தக்க வைத்துக் கொள்ள நினைத்தது. அதனால் எல்லா மதத்தினரும் அதைச் சந்தேகத்துடனேயே பார்த்தனர். ஆனால் பா,.. பெரும்பான்மையினரின் மதமான இந்துக்களைக் குறி வைத்தது. அதில் வெற்றியும் பெற்றது.
 
ஏற்கனவே பெரும் பொருளாதார நெருக்கடியிலிருந்த நாட்டை கொரானாப் பெரும்தொற்று மேலும் மிகக் கடுமையான நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. பெரும்பான்மையான மக்கள் வேலையிழந்து, வருமானம் இழந்து, அன்றாட அடிப்படைத் தேவைகளைக்கூடப் பூர்த்தி செய்து கொள்ளமுடியாத வறுமை நிலையில் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களுடைய வெற்றிகளைக் கொண்டாட இங்குள்ள ஆட்சியாளர்கள் 300 கோடி ரூபாயில் பிரம்மாண்டமான இராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டியுள்ளனர்.
 
ஆனால் சித்தார்த்த வரதராஜன் கூறுவது போல பொய்களாலும் ஏமாற்றுக்களாலும் வன்முறையினாலும் படுகொலைகளாலும் உருவாக்கப்பட்ட ஒரு கட்டிடத்திற்கு மோடி அடிக்கல் நாட்டியுள்ளார். அவர் அதை ஒரு கோயில் என அழைக்கலாம். பல இலட்சம் மக்களை அது கோயில்தான் என நம்ப வைக்கலாம். ஆனால் சட்டம், அறநெறி, ஒவ்வொரு இந்தியரையும் இணைத்த பிணைப்புகள் ஆகியவற்றை உடைப்பதற்காக, தங்களுடைய முழு அரசியல் வாழ்க்கையையும் செலவிட்ட மனிதர்களால் கட்டப்பட்ட கட்டிடத்திலிருந்து ஆன்மீகமோ புனிதமோ தோன்றாது.” (The Wire, நாள்.5.8.2020)
 
மத்திய காலத்தில் மன்னர்கள் தங்களுடைய ஆட்சி நிரந்தரமாக நீடிக்க வேண்டிக் கடவுளர்களின் அருளைப் பெறுவதற்காக மக்களை ஈவு இரக்கமின்றிக் கடுமையாகச் சுரண்டி மாபெரும் கோயில்களைக் கட்டினார்கள். அவர்கள் மக்களைப் பற்றி, அவர்களுடைய வாழ்நிலை பற்றி ஒரு சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால் அந்த மாமன்னர்களின் மகுடங்கள் எல்லாம் மண்ணில் புதைந்து போனதை வரலாறு அறியும்.
 
 
மக்கள் இன்று சொல்ல முடியாத அளவுக்கு வறுமைக்கும் பசி, பட்டினிக்கும் ஆளாகி மீள முடியாத துயரில் மூழ்கியுள்ளனர். தொழிலாளர்களும் விவசாயிகளும் சிறு உடைமையாளர்களும் நடுத்தர மக்களும் பொருளாதார நெருக்கடியாலும் கொரானாவின் காரணமாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்காலும் வேலை இழந்து, தொழில்களை இழந்து, வருமானம் இன்றி வறுமையிலும் பசி, பட்டினியிலும் சொல்ல முடியாத் துயரங்களில் உழன்று வருகின்றன்ர். நீறு பூத்த நெருப்பாக இருக்கும் இந்த எரிமலை மீதுதான் இன்றைய ஆட்சியாளர்கள் தங்களுடைய வெற்றிச் சின்னமான இராமர் கோயிலுக்கு அடிக்கல் நாட்டியுள்ளனர். வரலாறு இவர்களுக்குச் சரியான தீர்ப்பளிக்கும்.
 
                                                                                    - மு.வசந்தகுமார்

Comments

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

சாம்சங் தொழிலாளர்களின் போராட்டம் தொழிலாளி வர்க்க ஐக்கியத்தை நோக்கி முன்னேறட்டும்!

  சென்னை , சுங்குவார்சத்திரம் பகுதியில் மின்சாதனப் பொருட்கள் உற்பத்தியில் சாம்சங் நிறுவனம் 2007 இல் இருந்து ஈடுபட்டு வருகின்றது 1700 நிரந்தரத் தொழிலாளர்கள் , இந்த ஆலையில் பணியாற்றி வருகின்றனர் . ஊதியம் , வேலை நேரம், பாதுகாப்பான பணிச்சூழல் , கழிவறை , உணவகம் போன்ற தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்றாமலேயே நிர்வாகம் நீண்டகாலம் இந்த நிறுவனத்தை இயக்கி வருகிறது. தங்களின் வாழ்வாதாரத்திற்கான பொருளாதாரக் கோரிக்கைகளுக்காகவும் , நல்ல பணிச் சூழலை உருவாக்கவும் வேண்டி தொழிலாளர்கள் தங்களுக்கென்று தொழிற்சங்கம் அமைக்கும் முயற்சியைத் தொடங்கினர் . எனவே , சிஐடியூவுடன் இணைந்து ' சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் ' என்னும் பெயரில் தொழிற்சங்கத்தைப் பதிவு செய்யக் கோரி ஜூலை 2 அன்று தொழிலாளர் துறையிடம் விண்ணப்பித்துள்ளனர் . இந்த விண்ணப்பத்தை பரிசீலித்து அங்கீகரிக்க வேண்டிய தொழிலாளர் துறையோ அ தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் 45 நாட்கள் கிடப்பில் போட்டது . சாம்சங் நிறுவத்திடமிருந்து இதற்கான எதிர்ப்பு ஆகஸ்டு 20 ஆம் தேதி பெறப்பட்...