Skip to main content

சிறுபான்மை மதவாதத்தைப் பெரும்பான்மை மதவாதத்தால் ஒழிக்க முடியாது!

 

செப்டம்பர் 22ந் தேதி தேசியப் புலனாய்வு அமைப்பும் (NIA) அமலாக்கத் துறையும் போலிசும் இணைந்து இந்திய ஒன்றியம்  முழுவதும்  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா (popular Front of India), இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (SDPI)  ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தலைவர்கள், ஊழியர்கள் என 109 பேரைக் கைது செய்துள்ளது. மத வெறியைத் தூண்டி மக்களைப் பிளவுபடுத்துகின்றன; உடற்பயிற்சி என்ற பெயரில் இளைஞர்கள் மத்தியில் மத வெறியையும் வன்முறை எண்ணங்களையும் உருவாக்குகின்றன; நாட்டுக்கு எதிராகச் சதி செய்கின்றன; அந்நிய நாடுகளிலிருந்து இரகசியமாகப் பணம் வாங்கி அதை நாட்டிற்கு எதிராகப் பயன்படுத்துகின்றன ஆகிய காரணங்களுக்காக அந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளதாக அரசின் புலனாய்வு நிறுவனமும் போலீசும் கூறுகின்றன.  

மத வெறுப்பைத் தூண்டுவது, மத அடிப்படையில் கலவரங்களைத் தூண்டுவது, தம்மைக் கடுமையாக விமர்சிக்கும் ஜனநாயக சக்திகளைக் கொலை செய்வது, அந்நிய நாடுகளிலிருந்து பணம் பெறுவது ஆகிய செயல்களில்  ஆர்.எஸ்.எஸ்ஸும், சங்கப் பரிவாரங்களும் கூட ஈடுபட்டு வருகின்றன. ஆனால் தேசியப் புலானாய்வு நிறுவனமோ அமலாக்கத் துறையோ போலீசோ அந்த அமைப்புகள் மீது எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்காது. ஏனென்றால் அவை ஆளும் கட்சியான பா.ஜ.க.வின் உறுப்புகள். அந்த அமைப்புகள் புலனாய்வு நிறுவனங்களையும் போலீசையும் கட்டுப்படுத்தும் அதிகாரத்தில் உள்ளன. எனவே அந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வெறித்தனமாக மத வெறுப்புப் பேச்சுகளைக் கக்கினாலும் அவர்கள் மீது போலீசும் நீதிமன்றங்களும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதில்லை. மென்மையாகவே நடந்து கொள்கின்றன; கைது செய்யப்படுவதற்கு முன்பே பிணையில் வந்து விடுகின்றனர். ஆனால் இந்துத்துவ வெறியர்களின் மத வெறிப் பேச்சை அம்பலப்படுத்தும் ஜனநாயக சக்திகள் கைது செய்யப்படுகின்றனர். பொய்யான சதி வழக்குகள் போடப்பட்டு ஆண்டுக் கணக்கில் கேட்பாரற்றுச் சிறையில் அடைக்கப்படுகின்றனர். நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டு அவர்களுடைய விசயத்தில் எப்பொழுதும் பார்வையின்றியே இருக்கின்றாள்.   

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவும் இந்திய சமூக ஜனநாயகக் கட்சியும் மதவாத அமைப்புகள் என்று இந்த அரசு கூறினால் அவைகளின் தோற்றத்திற்கு பா.ஜ.க.வும் ஆர்.எஸ்.எஸ்சும், சங்கப் பரிவாரங்களுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும். பெரும்பான்மையாக உள்ள இந்துக்களின் வாக்கு வங்கியைக் குறி வைத்தே இந்த அமைப்புகள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. 1991ல் இந்த அமைப்புகள் பாபர் மசூதியை உடைத்தன. அந்த மோசமான நிகழ்வு முஸ்லீம் மக்களின் மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்தியது; கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்திய அரசு நீதியின் பக்கம் நிற்கும்; தங்களுடைய நலன்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையை அவர்கள் இழந்தனர். அந்த அதிருப்தியும் அவநம்பிக்கையும் முஸ்லீம் மதவாத அமைப்புகள் தலையெடுக்க வளமான உரமாகின. அதற்குப் பிறகுதான் இந்திய இஸ்லாமிய மாணவர்கள் அமைப்பு, தேசிய ஜனநாயக முன்னணி, மக்கள் நீதிப் பாசறை போன்ற அமைப்புகள் ஒன்றிணைந்து 2006ல் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா தோன்றியது; பிறகு அதன் அரசியல் அமைப்பாக 2009ல் இந்திய சமூக ஜனநாயகக் கட்சியும் தோன்றியது.

எனவே முஸ்லீம் மதவாத அமைப்பின் தோற்றத்திற்கு முதன்மையான காரணம் இந்துத்துவ அமைப்புகளின் மதவாதச் செயல்பாடுகள்தான். இந்துத்துவ அமைப்புகளின் செயல்பாடுகளுக்கான எதிர்வினைதான் முஸ்லீம் மதவாதம். முஸ்லீம் மதவாதத்தை ஒழிக்க வேண்டுமானால் முதலில் இந்துத்துவ அமைப்புகளின் மதவாதத்தை ஒழிக்க வேண்டும்.

ஆனால் ஆட்சி அதிகாரத்தில் உள்ள இந்துத்துவ மதவாதக் கட்சி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி முஸ்லீம் மதவாதத்தை ஒழிக்க முயல்கிறது. மதவாதத்தைக் காட்டி அந்த அமைப்புகளை நாட்டின் விரோதிகளாகக் காட்டுவதன் மூலம் முஸ்லீம் மக்களின் அனைவரின் மீதும் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. பெரும்பான்மையான மக்களிடமிருந்து அவர்களை அந்நியப்படுத்த முயற்சி செய்து வருகிறது.

ஜெர்மனியில் ஹிட்லரின் நாஜிசக் கட்சி முதலில் யூதர்களை விரோதிகளாகச் சித்தரித்துப் படுகொலை செய்தது. பிறகு தொழிற்சங்கவாதிகள், கம்யூனிஸ்ட்டுகள் என ஒவ்வொரு பிரிவினராக வேட்டையாடியது. அதன் மூலம் ஆளும் முதலாளிய வர்க்கத்தை நெருக்கடியிலிருந்து காப்பாற்றியது.

அதே போலத்தான், நெருக்கடியில் சிக்கியுள்ள இந்திய ஆளும் முதலாளிய வர்க்கத்தைக் காப்பாற்ற பா.ஜ.க. இங்கு மதவாதத்தைக் கையில் எடுத்துக் கொண்டு மக்களைப் பிளவுபடுத்தி ஒவ்வொரு பிரிவினராக வேட்டையாடி வருகிறது.

வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வரலாறு மீண்டும் திரும்பி நம்மைக் கொடூரமாக வேட்டையாடும்.

Comments

  1. இந்துமத வாதம் என்பது வானத்திலிருந்து தொபக்கடி என்று குதித்ததல்ல. அதற்கான இம்மண்ணின் பொருளியல், அரசியல் காரணிகளே மதநம்பிக்கைகளையும் மதவாத கருத்தாக்கங்களையும் உருவாக்குகிறது. இதுவே, எல்லாவித மதவாதக் களுக்குள் அடிப்படை. மதவாதக்களுக்கு அடிப்படையான பொருளியல், அரசியல் காரணிகளை குறிப்பாக, உற்பத்திக் கட்டமைப்பைத் தகர்க்காமல் எந்த வாதத்தையும் ஒழிக்க முடியாது.
    அதுபோலவே, உடைமை உற்பத்தி முறையில் ஏற்படும் சிக்கல்களுக்கும் தேக்கங்களுக்கும் மதவாதக் கள், இனவாதங்கள் முட்டுக்கொடுப்பது போன்ற முயற்சியின் தீவிர பலன்களாக உள்நாட்டுக் கலகங்களும் எல்லைப் போர்களும்தான் நிகழ்ந்து, உலகமும் நாடுகளும் மறு ஒழுங்கிற்கு வந்துள்ளனவேயன்றி நேரடித் தீர்வுகள் எதையும் பெற்றதில்லை. ஹிட்லரின் நாஜியிசமும் வேறெதுவும் இதற்கு விதிவிலக்கல்ல.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்