Skip to main content

மக்களுக்குத் தேவையானது சோசலிச மாடல்தான்

 

தமிழ் நாட்டின் ஆளுநர் ரவி இன்று தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளார். அவர் ஆளுநர் பொறுப்பில் உள்ளார் என்பதை மறந்து விட்டு ஓர் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரராகச் செயல்பட்டு வருகிறார். தமிழ் நாடு  என்ற பெயருக்குப் பதிலாக தமிழகம் என்ற பெயர்தான் இருக்க வேண்டும் என்கிறார். Union Government என்பதற்கு ஒன்றிய அரசாங்கம்  என்று சொல்லக் கூடாது என்கிறார். ‘தமிழ் நாடு’ ‘ஒன்றிய அரசாங்கம்’ என்று குறிப்பிட்டால் அது பிரிவினைவாதத்திற்கு கொண்டு செல்லும் எனக் கூறி அந்த வார்த்தைகளைப்  பயன்படுத்தக் கூடாது என்கிறார். இவ்வாறு பேசுவதன் மூலம் தமிழின மக்களின் தேசிய உணர்வைக் கொச்சைப்படுத்தவும் காயப்படுத்தவும் செய்கிறார்.

தான் செல்லும் இடங்களில் எல்லாம் சனாதனப் புகழ் பாடி வருகிறார். இந்துத்துவவாதிகளின் ஏஜண்டாகச் செயல்பட்டு வருகிறார். மதச் சார்பற்ற அரசின் பொறுப்பான பதவியில் உள்ள ஒருவர் இவ்வாறு பேசுவது இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்பதை அறிந்தும் தொடர்ந்து இந்தச் செயலில் ஈடுபட்டு வருகிறார்.

ஆளுநர் என்பவர் அந்த மாநிலத்தில் உள்ள அரசின் தலைவர் என்பதையும், அவர் அந்த மாநிலத்தின் அமைச்சரவையால் தயாரிக்கப்பட்ட உரையைத்தான் வாசிக்க வேண்டும் என்ற சபை மரபையும்  மீறிச் செயல்படுகிறார். இந்த ஒன்றிய அரசில் தேசிய இனத்திற்கு எஞ்சியுள்ள சில உரிமைகளையும் எதேச்சதிகாரமாகப் பறிக்க முயல்கிறார்.

ஒரு சில மாநிலங்களில் மட்டும் வேறு கட்சிகள் ஆட்சியில் இருப்பதை பா.ஜ.க.வால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்தியா முழுவதும் தனது ஆட்சியை நிறுவி, பெரும் முதலாளிகளுக்கும், பன்னாட்டு முதலாளிகளுக்கும் ஏஜண்டாகச் செயல்படுவதன் மூலம் அதிகாரத்தைச் சுவைக்க வேண்டும் என்றும், பெரும் செல்வதைக் குவித்துக் கொள்ள வேண்டும் என்றும் அந்தக் கட்சியினர் திட்டமிடுகின்றனர். அந்தத் திட்டத்தின் அடிப்படையில்தான்  பா.ஜ.க.வின் அரசியல் ஏஜண்டாக,  தமிழ் நாட்டில் அந்தக் கட்சியை எப்படியாவது ஆட்சிக் கட்டிலில் அமர்த்தி விட வேண்டும் என்ற முனைப்புடன் செயல்படுகிறார். ஆளுநர் ரவி. அதற்காகவே பெரும்பான்மை மக்களாக உள்ள இந்துக்களின் வாக்கு வாங்கியை முழுமையாக அபகரிக்கத் திட்டமிட்டு சனாதனப் பெருமை, வளர்ச்சி மாடல் என்று பேசி வருகின்றனர் பா.ஜ.க.வினர். ஆளுநர் ரவியும் அவர்களில் ஒருவர்.

பா. ஜ. க.வின் சனாதனம், இந்து மதப் பெருமை என்ற அரசியலை எதிர் கொண்டு முறியடிக்க தி.மு.க. ‘திராவிட மாடல்’ எனக் கூறி தமிழின மக்களின் வாக்கு வங்கியைக் குறி வைத்து வேலை செய்கிறது.

பா.ஜ.க. ‘சனாதன மாடலாக’ இருந்தாலும்,  தி.மு.க.வின் ‘திராவிட மாடலாக’ இருந்தாலும், அனைத்து மாடல்களும்  முதலாளிய வர்க்கத்தின் வளர்ச்சிக்கான மாடல்கள்தான். இந்த மாடல்களால் அனைத்து இந்து மக்களும், அனைத்துத் தமிழின மக்களும் பயனடையப் போவதில்லை.  அவற்றால் பயனடைபவர்கள் முதலாளிகள்தான். அதைத்தான் பா.ஜ.க.வின் கீழ் உள்ள மாநிலங்களிலும், தி.மு.க.வின் கீழுள்ள தமிழ் நாட்டிலும் நடக்கும் அனைத்துப் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் போராட்டங்கள் மெய்ப்பிக்கின்றன. விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள், மின் வாரிய ஊழியர்கள், போக்குவரத்துத் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைத்து மக்களும் போராடி வருகின்றனர். முதலாளிய வர்க்கத்தையும் அதிகாரவர்க்கத்தையும்  தவிர அனைத்துப் பிரிவு மக்களும் போராடி வருகின்றனர்.

முதலாளிய வர்க்கக் கட்சிகளின் மாடல்கள் எதுவாக இருந்தாலும் அது சுரண்டலை ஒழிக்கப்போவதில்லை; மக்களுக்கு நல்வாழ்வைத் தரப் போவதில்லை. உண்மையில் சுரண்டலை ஒழித்து, மக்கள் அனைவருக்கும் நல்வாழ்வைத் தரக் கூடிய மாடல், தேசிய இனங்களின் அரசியல் சுய நிர்ணய உரிமையை உறுதிப்படுத்தக் கூடிய  மாடல் சோசலிச மாடல்தான். முதலாளிய மாடல்களை முறியடித்துச்  சோசலிச மாடலை உருவாக்க பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அனைத்து மக்களும் அணி  திரள வேண்டும்.

சோசலிசத் தொழிலாளர் இயக்கம்

தமிழ்நாடு

Comments

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்