Skip to main content

Posts

Showing posts from May, 2023

கவிதை - ஊசி துளைக்கப்பட்ட கரங்கள்

ஊசி துளைக்கப்பட்ட கரங்கள்  அவள் கரங்களின் சித்திரவேலைப்  பின்னலில்  பேரழகு வடிவங்கள் மிளிர்ந்தன அழுக்கடைந்த சிறிய இருட்டறையில் ஒளிமிக்க நிலாக்களும் விண்மீன்களும்  அவளுடைய தோல் போர்த்திய கரங்களால் ஆடைகளில் உயிர்பெற்று மின்னின. குவிந்து கிடந்த நூற்கண்டுகள் அவளுடைய ஊசி துளைத்த விரல்களால் இரவின் ஒளியில் மின்மினிகளாய் துணிமணிகளில் மாயம் புரிந்தன கடிகாரம் நள்ளிரவு மணியை ஒலித்தபோது அவளது காய்த்துப் போன கரங்களால்  அவள் படைத்த மெல்லிய அலங்கார  ஆடைகளை  அணியும் பேறு அவளுக்கில்லை என்பது அவளுக்குத் தெரியும் அனைத்து வலிகளும்  உங்கள் வாழ்வின் அனைத்து உயிராற்றல்களையும் உறிஞ்சக் கூடிய ஒரு கருந்துளையின்  ஆற்றல் போல் வருவதில்லை  சில வலிகள் நீங்கள் உருவாக்கிய அந்தக் கணத்தில்  உங்கள் கரங்களிலிருந்து பறித்துச் செல்லப்படும் போது.   பளிச்சிடும் வண்ண ஆடைகள்  வடிவத்திலும் வரும்.  மகிழ்ச்சியற்ற  கொண்டாட்டம் அவர்கள் ஜொலிக்கும் சிவப்பு வண்ண மேலங்கிகளை அணிந்திருக்கிறார்கள் இடுப்பில் தங்கமென மின்னும் கச்சைகள் படாபடோபமான மணவிழாத் தலைப்பாகை தூரத்தில் இருந்தாலும் கூட்டத்தில் அவர்கள் தனித்துத் தெரிகிறார்கள் ஆனால் அவர்கள

கட்சிகளின் வெற்றியும் மக்களின் தோல்வியும்!

அண்மையில் நடந்து முடிந்த கர்நாடகச் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தம் உள்ள 224 சட்டமன்றத் தொகுதிகளில் 135 இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மை பெற்று அமைச்சரவை அமைக்கும் நிலையில் உள்ளது. ஆளும் கட்சியாக இருந்த பா.ஜ.க. 66 இடங்களில் மட்டும்  வெற்றி பெற்றுப் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. மதச் சார்பற்ற ஜனதாதளக் கட்சி 19 இடங்களை மட்டும் கைப்பற்றியுள்ளது. யாருக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காது, அந்த நிலையில் தன்னுடைய ஆதரவு இல்லாமல் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது என்று கருதிக் கொண்டிருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் படுதோல்வி அடைந்துள்ளது.  தென்னிந்தியாவிலுள்ள ஐந்து மாநிலங்களில் கர்நாடகத்தில் மட்டும் பா.ஜ.க. கட்சியின் ஆட்சி இருந்தது. 2018ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் அக்கட்சி தனிப் பெரும்பான்மை பெறாத போதும் பல தில்லுமுல்லுகளைச் செய்து காங்கிரஸ் கட்சியிலிருந்தும், மதச் சார்பற்ற ஜனதா தளத்திலிருந்தும் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கித் தனது ஆட்சியை அமைத்தது. இந்த விடயத்தில் அந்தக் கட்சி கை தேர்ந்தது என்பதை மத்திய பிரதேசம், மராட்டியம் போன்ற மாநிலங்களின் கடந்த கால அனுப