Skip to main content

Posts

Showing posts from June, 2023

பற்றி எரியும் மணிப்பூரும் அரசியல் குளிர் காயும் பா.ஜ.க.வும்!

மெய்தி மக்களைப் பழங்குடியினர் பட்டியலில் இணைப்பதற்கு மாநில அரசிற்கு உத்திரவிடக் கோரி மெய்தி பழங்குடியினச் சங்கம் என்னும் அமைப்பின் சார்பில் மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. மெய்தி சமூகத்தைப் பாதுகாக்கவும் , மூதாதையர்களின் நிலம் , கலாச்சாரம் மற்றும் மொழியைப் பாதுகாக்கவும் இதனைச் செயல்படுத்த வேண்டும் என கோரி வழக்கைத் தொடுத்தனர். மெய்தி இனமக்கள் தங்கள் முன்னோர்களின் நிலங்களிலிருந்து ஒதுக்கப்படுவதாக நினைக்கின்றனர். மெய்தி இனக்குழுவை பழங்குடியினர் பட்டியலில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையைப் பரிசீலிக்குமாறும் , நான்கு வார காலத்திற்குள் மனுதாரரின் கோரிக்கை மீதான அரசின் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் மார்ச் 7 ஆம் தேதி மணிப்பூர் உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பித்தது. இந்த உத்திரவுதான் மணிப்பூரில் மிகப்பெரிய அளவில் கலவரங்கள் நடப்பதற்குக் காரணமாக அமைந்தது. மெய்தி இனக்குழுவை பழங்குடிகள் பட்டியலில் இணைக்க கூடாது என்று வலியுறுத்தி மே 3 ஆம் தேதியன்று பழங்குடியினர் ஒற்றுமைப் பேரணியை குக்கி , நாகா பழங்குடிகள் அனைத்துப் பழங்குடி மக்களையும் ஒருங்கிணைத்து நடத்தினர

தேசியம் முதலாளி வர்க்கத்திற்கானதா? பாட்டாளி வர்க்கத்திற்கானதா?

  14.05.2023 அன்று சென்னையில் மார்க்சியர் மேடை என்னும் குழுவினர் "தேசியம் முதலாளித்துவத்திற்கானதா அல்லது பாட்டாளி வர்க்கத்திற்கானதா என்ற தலைப்பில் ஏற்பாடு செய்திருந்த விவாதக் கூட்டத்தில் சோசலிசத் தொழிலாளர் இயக்கம் சார்பில் கலந்து கொண்டு முன்வைத்த உரையினைத் தொகுத்து இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது. நேரமின்மையின் காரணமாக அந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்படாத ஒரு சில செய்திகளும் இந்தக் கட்டுரையில் இணைக்கபட்டுள்ளன.   * * * * *   தொடக்க கால முதலாளித்துவம் தன்னுடைய சந்தை நலனுக்காக சிறு சிறு அரசுகளாக இருந்த ஒரே மொழி பேசக் கூடிய பல்வேறு பகுதிகளை ஒன்றிணைத்து ஒற்றை அரசாக நிறுவுவதற்கும் , அதே போன்று பல்வேறு இனமக்கள் வாழ்ந்து வந்த பேரரசுகளில் முதலாளித்துவம் அரசதிகாரத்தைக் கைப்பற்றியபொழுது ஒடுக்கும் தேசிய இன முதலாளி வர்க்கம் சந்தையைத் தன்னுடைய ஆதிக்கத்தில் வைத்திருந்த நிலையில் , ஒடுக்கப்படும் தேசிய இனத்தின் முதலாளி வர்க்கம் தனக்கான சந்தை நலனை முன்னிறுத்துவதற்கும் தேசிய இன இயக்கத்தை முன்னெடுத்தது.   பல்தேசிய அரசுகளில் ஒடுக்கும் தேசிய இனத்தைச் சேர்ந்த முதலாளி வர்க்கம் , பரந்து விரிந்த சந்தையைத