Skip to main content

Posts

Showing posts from July, 2023

இந்துத்துவா பா.ஜ.க.வின் இரட்டைவேடம்!

  கடந்த காலத்தின் கலாச்சாரத்தை முதன்மைப்படுத்தும் இந்துத்துவ அடிப்படைவாத , பழமைவாத பி . ஜே . பி - நவீன கார்ப்பரேட்களோடு எப்படி ஒத்துப்போக முடிகிறது ? மக்களிடம் மதவாதக் கட்சியாக இருந்தாலும் ஆளும்வர்க்கத்திற்காக இயங்குவதில் மற்றெல்லா முதலாளித்துவக் கட்சிகளையும் பின்னுக்குத்தள்ளி தலைமைப் பாத்திரம் வகிப்பதால் தான் ஆளும் வர்க்கம் அதை ஆளும் கட்சியாக்கி அரசை அதனிடம் ஒப்படைத்திருக்கிறது . மதத்தைப் பிரச்சாரத்தோடு வைத்துக்கொண்டு முதலாளித்துவத்திற்கும் , கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்கும் சேவையில் முதன்மையாகப் பணியாற்றுவதுதான் அவர்களின் தீர்க்கமான நடைமுறை . எங்காவது இதன் வழியில் மதம் குறுக்கிட்டால் அதைக் கைவிட்டு , கடந்தும் போகக்கூடியதாகவும் இருக்கிறது அவர்களின் எல்லை கடந்த கார்ப்பரேட் விசுவாசம் . இந்த இரட்டை வேடம் பா . ஜ . க . வுக்கு அளிக்கும் பலனைவிட பெருநிறுவனங்களுக்கு முழுமையான பலனைத் தருகிறது . அதனால்தான் அது ஆள அனுமதிக்கப்பட்டிருக்கிறது . முதலாளித்துவம் மக்களுக்கு எதிராக நிற்பதை மறைத்துக்கொண்டு இந்துத்துவாவை , மதத்தை முன

முதலாளியச் சமூகமும் ஊழலும்!

(பணம்)“......... சட்ட மாமன்ற உறுப்பினர்கள் கீழே அமர்ந்திருக்க திருடர்களுக்குப் பட்டங்களை வழங்கும், மண்டியிடும், அரசு புகழுரைகளை வழங்கும்”. ---ஷேக்ஸ்பியர், (Timon of Athens)   சட்ட விரோதப் பண மாற்றத்திற்காக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட விவகாரம் ஊழலைப் பற்றிய விவாதத்தைப் பரவலாக உருவாக்கியுள்ளது. 24 காரட் “தூய்மையான” பா.ஜ.க. வின் ஏஜண்டான “வானளாவிய” அதிகாரம் கொண்ட ஆளுநர் ரவி உடனே செந்தில் பாலாஜியை மு.க.ஸ்டாலின் அவர்களின் அமைச்சரவையிலிருந்து முதலமைச்சரின் பரிந்துரை இல்லாமேலேயே நீக்கித் தனது அதிகாரப் பசியைத் தீர்த்துக் கொள்ள முயன்றார். அதிகாரப் பித்தினால் ஏற்பட்ட தனது அதிகப்பிரசங்கித்தனத்திற்கு அவருடைய எஜமானர்களிடமிருந்தே ஆதரவு கிடைக்காததால், ஆணை பிறப்பித்த ஒரு சில மணி நேரத்திலேயே அதை நிறுத்தி வைத்து விட்டார். ஊழலை ஒழிப்பதில்தான் பா.ஜ.க.வின் ஏஜண்டுக்கு எவ்வளவு ஆர்வம், அவசரம்! செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்ததும், அவரைத் தொடர்ந்து அமைச்சர் பதவியில் வைத்திருந்தால், அது இலாகா இல்லாத அமைச்சர் பதவியாக இருந்தாலும், “அரசியலமைப்பு இயந்த

கீதா அச்சகத்திற்குக் கொடுக்கப்படும் காந்தி அமைதி விருது - கோட்சேவுக்குக் கொடுக்கப்படும் விருது

உத்தரப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள கோரக்பூரில் உள்ள கீதா அச்சகத்திற்கு 2021 ஆம் ஆண்டிற்கான காந்தி அமைதி விருதை வழங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையில் உள்ள நடுவர் குழு ஜூன் 18 அன்று முடிவு செய்துள்ளது. காந்தி அமைதி விருதுக்கான பட்டயத்துடன் ஒரு கோடி ரூபாய் பண அன்பளிப்பும் கொண்டது. “சமூக, பொருளாதார மற்றும் அரசியல் மாற்றத்திற்காக அமைதி வழியிலும் பிற காந்திய வழிகள் மூலமும் கீதா அச்சகம் ஆற்றியுள்ள மிகச் சிறந்த பங்களிப்புக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது” என நடுவர் குழு அறிவித்துள்ளது. ‘அமைதிக்கும் சமூக நல்லிணக்கத்திற்கும் காந்திய வழியில் கீதா அச்சகம் ஆற்றியுள்ள சிறந்த பங்களிப்பை அங்கீகரித்து இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக’ பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த ஆண்டு நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வரும் கீதா அச்சகம் காந்தி அமைதி விருதைப் பெற்றுக் கொள்வதாகவும், ஆனால் பண அன்பளிப்பான ஒரு கோடி ரூபாயை ஏற்றுக் கொள்ள மறுப்பதாகவும் அறிவித்துள்ளது. கீதா அச்சகத்திற்கு காந்தி அமைதி விருதை வழங்கியதற்குக் காங்கிரஸ் கட்சி தனது எதிர்ப்பையும் விமர்சனத்தையும் தெரிவித்துள்ளது. காந்தி அமைதி விருதைக் க