"கண்ணுக்குத் தெரியும்
எதிர்காலம் வரை இத்தகைய கொடூரங்களை
நிறுத்த மாட்டோம்" எனப் பைத்தியக்கார வெறியுடன்,
வெட்ககரமான முறையில் உலகத்துக்கு உறுதியுடன் அறிவித்து, அந்தக் கட்டளையால் இஸ்ரேல் ராணுவம் சிறைப்பிடிக்கப்பட்ட குழந்தைகளைக் கடந்த 4 மாதங்களாக கொன்றுக் கொண்டிருக்கிறது. வெளிப்படையாகத் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கும் இத்தகைய கொடுஞ்செயலை இந்த மானுட உலகம்
எப்படி அனுமதித்துக் கொண்டு இருக்கிறது?
இஸ்ரேலின்
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆணையின்படி, 4 மாதங்களாக, சட்டத்திற்கு விரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ள பாலஸ்தீனத்தின் காஸா பகுதியில் இஸ்ரேலின்
விமானப்படை இடைவிடாது குண்டு மழை பொழிந்து தாக்கிக்
கொண்டு இருக்கிறது; இஸ்ரேல் ராணுவத்தால் 31,000 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்; பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகாயமுற்று உள்ளனர். இஸ்ரேல் ஆக்கிரமிப்புச் செய்துள்ள பகுதியில் மக்களுடைய அடிப்படைத் தேவைகளான உணவு, தண்ணீர், மின்சாரம், எரிபொருள், மருந்துகள் என்று அனைத்தையும் தனது ஆணைகள் மூலம்
காஸாவுக்குத் தடைசெய்தும் அவர்களைக் கொன்றுகொண்டு இருக்கிறார்.
2023, அக்டோபர் 7-ஆம்
தேதி ஹமாஸ் தாக்கிய உடனேயே, இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு காஸாவுக்குள் உணவுப் பொருட்கள், தண்ணீர், எரிபொருள், மருந்து மற்றும் பிற அத்தியாவசியமான பொருட்கள்
செல்லுவதைத் தடைசெய்தார். அமெரிக்காவின் அழுத்தத்தால், காஸாவின் தெற்கு எல்லையான ரபா வழியாக எகிப்திலிருந்து
சிறிதளவு உதவிப் பொருட்கள் கொண்டு செல்லும் சில ட்ரக்குகளை அனுமதிக்கத்
துவங்கினார்; பிறகு டிசம்பர் மாதத்தில் இஸ்ரேலிலிருந்து காஸா தெற்கு பகுதிக்குள்
வரும் வழியை இஸ்ரேல் திறந்து விட்டது.
கொடூரமான
மனநிலை கொண்ட பைத்தியக்காரன் மட்டும்தான் குழந்தைகளைப் பட்டினி போட்டுக் கொலை செய்வான் - யாரோ
ஒருவர் ஒரு குழந்தையைப் பட்டினி
போடுவதைக் கேள்விப்பட்டாலே நாம் போலீசில் புகார்
அளிப்பதில்லையா? எல்லோரும் எங்கே போய் விட்டார்கள்? முக்கியமாக,
கொலைகாரக் காலனித்துவத்தின் நினைவுகள் இன்றும் நினைக்கப்படும் தெற்கு உலகில்!
இது எழுதப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், காஸாவில் 13,430 குழந்தைகள், அக்டோபர் 7, 2023 - இல் இருந்து கொலைவெறி மிக்க மன நோயாளி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் ஆணைப்படி காஸாவின் மீது நடத்தப்பட்ட வான்வெளித் தாக்குதலாலும் தரை வழித் தாக்குதலாலும் தாக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள்.
ஒரு
குழந்தையின் உயிரை விட உயர்வானது எது?
ஏற்கனவே 13,500 குழந்தைகளைக் கொன்ற பிறகும் நெதன்யாகு ஏன் தடுக்கப்படவில்லை?
150 நாட்களில் 8,900 பெண்கள்
கொல்லப்பட்டுள்ளார்கள்;
இத்துடன் 7000பேர், - இதில் 70% பெண்களும் குழந்தைகளும் -- இடிபாடுகளுக்கிடையில் சிக்கியும், காணாமல் போயும் இருக்கிறார்கள்.
இனவெறி
பிடித்த மன நோயாளி மட்டுமே
ஆயிரக்கணக்கான பெண்களைக் குழந்தைகளுடன் சேர்த்துக் கொல்ல தொடர்ந்து ஆணையிடுவான்.
காஸாவின்
ஊடக அலுவலகத்தின் அறிக்கைப்படி சுகாதாரத்துறை அதிகாரிகள் 364 பேரும் 132 பத்திரிகையாளரும் இந்தக் காலகட்டத்தில் தமது உயிரை இழந்து
உள்ளனர்.
ஆகவே,
இது கொல், எல்லோரையும் கொல்! இதுபற்றி யாரும் எதுவும் சொல்வதில்லை.
காஸாவில் பஞ்சம் அதிகரித்து வருவது பற்றி எச்சரிக்கை செய்யப்பட்ட பிறகும், இஸ்ரேல் ராணுவம் காஸாவுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் பிற அவசியமான உதவிப் பொருட்கள் வருவதைத் தடுத்து வருகிறது என்று காஸாவின் ஊடக அலுவலகம் கூறுகிறது; மேலும் காஸாவுக்கு உதவிப் பொருட்களைக் கொண்டு வர முயற்சிக்கும் வாகனங்களையும் தாக்குகிறது; இதனால் தங்களது குடும்பங்களுக்கு உணவுக்காக காத்திருந்த ஏராளமான மக்கள் உணவின்றி மடிந்துள்ளார்கள்.
சர்வதேச
மனிதாபிமானச் சட்டம், "ஒரு பிரதேசத்தை ஆக்கிரமிக்கும்
நாடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பிரதேசத்தின் மக்களை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்; மேலும் அவர்களுக்கு உணவு, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்" என்று வரையறுத்துள்ளது."
ஐக்கிய
நாடுகளின் அமைப்பின் அறிக்கைப்படி, நெதன்யாகுவின் ராணுவத்தால் காஸாவின் 23 இலட்சம் மக்கள் தொகையில் 85% பேர் உணவு, சுத்தமான
தண்ணீர், மற்றும் மருந்துகளின் கடுமையான பற்றாக்குறைக்கு இடையில் உள்நாட்டுக்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர்; இத்துடன் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனத்தின் 60% உள்கட்டுமானம் சேதம் அடைந்துள்ளது, மற்றும் அழிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச
நீதிமன்றம் நெதன்யாகுவை அல்ல -- இஸ்ரேலை இனப்படுகொலைக் குற்றவாளி என்று குற்றம் சாட்டுகிறது. ஜனவரி 2024 - இல் பிறப்பிக்கப்பட்ட ஒரு
இடைக்கால ஆணை, டெல் அவிவ்
தனது இனப்படுகொலைச் செயல்களை நிறுத்த வேண்டும் என்றும், காஸா மக்களுக்கு மனிதாபிமான
உதவிகள் அளிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறியது.
நெதன்யாகு
குற்றவாளி எனச் சட்டப்படி நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும்!
நாடுகள்
மீது வழக்குத் தொடுக்க முடியாது. ஆனால் குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் மீது வழக்குப் போடப்பட
வேண்டும். "அவர்கள் அரசியலமைப்பு சட்டங்களின் அடிப்படையில் பொறுப்பில் இருப்பவர்களோ பொது மக்களுக்கான அதிகாரிகளோ
அல்லது தனிநபர்களோ." [இனப்படுகொலை பற்றிய மாநாட்டின் 4-வது சரத்து.] ஆகவே,
இனப்படுகொலை பற்றிய மாநாட்டை அங்கீகரித்தாலும், அங்கீகரிக்காவிட்டாலும், அதன் சர்வதேச நடைமுறைச்
சட்டம், அனைத்து நாடுகளையும் கட்டுப்படுத்துகிறது. இதன், II சரத்து, "இனப்படுகொலை என்பது --- ஒரு தேசிய இனம்
சார்ந்த, இனக் குழு சார்ந்த,
மரபினம் அல்லது மதம் சார்ந்த மக்களை
பகுதியாகவோ, முழுமையாகவோ அழிப்பது என்ற நோக்கத்துடன் ஒரு
குழுவினரைக் கொல்வது; அந்தக் குழுவைச் சேர்ந்தவர்களுக்கு உடல் சார்ந்த மற்றும்
மனம் சார்ந்த தீவிரமான துயரங்களை ஏற்படுத்துவது; வேண்டுமென்றே, தீர்மானமாக அந்த குழு ஒரு
பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ அழிவதற்கான நிலைமைகளை உண்டாக்குவது." என்று வரையறுத்துள்ளது.
துரதிர்ஷ்டவசமாக, பெரும்பாலான இஸ்ரேலியர்களும், யூத மத குருமார்களும் கூட இன அழிப்பு என்பது கடவுளின் விருப்பமாக இருக்க முடியும் என்று நம்ப வைக்கப்பட்டுள்ளார்கள்.
உபதேசம்:
2:16 "இறைவன் உங்களுக்கு உரிமையானதாகக் கொடுத்துள்ள நகரங்களில் உங்கள் மக்களைத் தவிர வேறு எந்த
உயிரையும் உயிர்வாழ அனுமதிக்கக் கூடாது."
தோற்றம்:
15:18 "இறைவன் ஆப்ரமுடன் உடன்படிக்கை செய்து கொண்ட அந்த நாளில், "உனது
சந்ததிகளுக்கு நான் எகிப்தின் நதியில்
இருந்து மிகப் பெரியதான யூப்ரடீஸ் நதி வரை உள்ள
நிலத்தைக் கொடுக்கிறேன்" என்று சொன்னார்.
1 சாமுவெல்
15:3 "....அவர்களிடம்
உள்ள எல்லாவற்றையும் அழித்து விடுங்கள், அவர்களை விட்டு விடாதீர்கள்; ஆண்களையும், பெண்களையும், சிறு குழந்தைகளையும், தாயிடம்
பால் குடிக்கும் மழலைகளையும் கொல்லுங்கள்." [பைபிள்]
நிச்சயமாக
நெதன்யாகு ஒருவர் மட்டுமே ஏராளமான பாலஸ்தீனர்களைக் கொன்ற குற்றவாளி அல்ல. இஸ்ரேலிய விமானிகள் ஏராளமான குண்டுகளை நகரங்களின் மையங்களில் போடும்போது அவர்கள் அங்கு குழந்தைகளைக் கொல்லுகிறார்கள் என்பதை அறிவார்கள். நெதன்யாகு மட்டுமல்ல, இறைவனும் எல்லா நிலைமைகளிலும் அவர்கள் பக்கம் இருக்கிறார் என்று நம்ப வைக்கப்பட்டார்களா?
காஸாவில்
இருந்து வெளியேற முடியாமால் சிக்கிக் கொண்ட பாலஸ்தீனர்களை அழிப்பதற்கு நெதன்யாகு அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் நடத்திய கொரில்லா தாக்குதலை ஒரு சாக்காக எடுத்துக்
கொண்டார். பல ஆண்டுகளாக ஹமாஸ்
இயக்கத்துக்குத் தான் நிதி அளித்தது
பற்றி இஸ்ரேலியர்கள் தெரிந்து கொண்டது பற்றி நெதன்யாகு குற்ற உணர்ச்சி அடைந்தாரா? (பாலஸ்தீனர்களைப் பிரித்து ஒன்றுபடாமல் தடுத்து அதன் மூலம் அவர்களால்
பாலஸ்தீனத்தை ஒரு நாடாக உருவாக்க
இயலாமல் செய்வதே நெதன்யாகுவின் திட்டம்.) "பாலஸ்தீன நாடு உருவாவதற்கு எதிரானவர்கள்” காஸாவுக்கு
நிதி அளிக்க வேண்டும்; ஏனென்றால், மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீன அதிகாரத்திற்கும்
காஸாவில் ஹமாசுக்கும் இடையில் பிரிவினையை நிலைப்படுத்துவது பாலஸ்தீனம் தனி நாடாக உருவாவதைத்
தடுக்க உதவும்" என்று நெதன்யாகு கூறினார் (மார்ச் 12, 2019-இல் வெளியான 'ஜெருசலேம்
போஸ்ட்).
இஸ்ரேல்
பாதிக்கப்பட்டுள்ளது: நெதன்யாகுவே அதைக் காப்பாற்றுபவர் என்று ஊடகங்கள் திரித்துக் கூறுகின்றன, 'செய்திகளைத்' தேர்ந்தெடுப்பது - புறக்கணிப்பது மூலமாக மேற்கு நாடுகளின் பத்திரிக்கையாளர்கள் இனப்படுகொலைக்குத் துணைபோகின்றனர்
ஐக்கிய
நாடுகளின் மனித உரிமை அமைப்பின்
தலைவர் [8.03.2023] வெள்ளிக்கிழமை, குறிப்பிடும்படியான விரிவான அளவில் கிழக்கு ஜெருசலேம் உட்பட பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதிகளில் சட்ட விரோதமான இஸ்ரேலியக்
குடியேற்றங்களையும், ஆக்கிரமிப்புச் செய்த இஸ்ரேலிய ராணுவத்தாலும் அங்கு குடியேறிய இஸ்ரேலியர்களாலும் பாலஸ்தீனர்களுக்கு எதிரான வன்முறை “பெரும் அளவில்” அதிகரித்திருப்பதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாலஸ்தீனத்தின் மேற்கு கரைப் பகுதியிலும், கிழக்கு ஜெருசலேமிலும் 7,20.000-க்கும் அதிகமாக இஸ்ரேலியர்கள்" சட்டத்திற்கு விரோதமாகக் குடியேறி உள்ளனர். "சர்வதேசச் சட்டத்தைக் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, மேலும் 3,476 குடியிருப்புக்களைக் கட்ட நெதன்யாகு அனுமதித்துள்ளார்
எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன." இந்தத் தகவல்களின்படி அப்பகுதியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலிய ராணுவமும் குடியேறிகளும், அக்டோபர் 7, 2023-இல் இருந்து மேற்கு
கரைப் பகுதியில் 107 குழந்தைகள் உட்பட குறைந்தபட்சம் 413 பாலஸ்தீனர்களைக் கொன்றுள்ளார்கள்; மேலும், 4,600-க்கும் அதிகமானவர்களைக் காயம் அடையச் செய்துள்ளனர்.
இஸ்ரேல்
பல தலைமுறைகளாக, சட்டவிரோதமாக அடிக்கடி படுகொலைகளைச் செய்து பாலஸ்தீனப் பகுதியை ஆக்கிரமிப்புச் செய்து, பாலஸ்தீனப்பகுதியில் குடியேற்றக் காலனியத்தை உருவாக்கியிருந்தபோதும் CIA –
மேற்பார்வையில் செயல்படும் PPS, CNN, CBS,
NBC, ABC, FOX CNN மற்றும்
பிற அமெரிக்க, ஐரோப்பிய பொழுதுபோக்கு / செய்திக் கூட்டு நிறுவனங்கள் அவர்களுடைய பார்வையாளர்கள், கவனிப்பவர்கள் மற்றும் செய்திகளைப் படிப்பவர்கள் ஆகியோரின் கவனத்தைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டுள்ள 100+ இஸ்ரேலியர்களைப் பற்றி மட்டுமே நினைக்கச் செய்கின்றன; ஆனால், அவை இஸ்ரேலியர்களால் சிறைப்பிடிக்கப்பட்டுள்ள
ஆயிரக்கணக்கான பாலஸ்தீனர்களில் பெண்கள், குழந்தைகள் உட்படச் சிலரை அவர்களுக்குப் பதிலாக விடுவிக்க வேண்டும் என்ற பாலஸ்தீனத்தின் கோரிக்கை
பற்றிக் கூறுவதே இல்லை.
இஸ்ரேல்
பிரதமர் நெதன்யாகு, அமெரிக்க விமானங்கள், குண்டுகள், ஏவுகணைகள் கொண்டு இனப் படுகொலை செய்து,
23 இலட்சம் மக்கள் கொண்ட காஸாவில் 80% மக்களை வீடற்றவர்களாக ஆக்கிக் கொண்டிருக்கும்போது, கார்பொரேட் பத்திரிக்கையாளர்கள் பல மாதங்களாகத் தங்களது
வாடிக்கையாளர்களுக்கு இஸ்ரேல் பிணைக்கைதிகளின் உறவினர்களுடைய பேட்டிகளை மட்டும் பார்க்க, கேட்க, வாசிக்க என்று எல்லாத் தளங்களிலும் கொடுத்தார்கள்.
இந்த
ஊடகங்கள் பாலஸ்தீனத்துக்கு செல்லும் உணவுப் பொருட்கள், தண்ணீர், எரிபொருள், மின்சாரம்,மற்றும் மருந்துகளைத் தடைசெய்து, சத்துக் குறைபாட்டால் குழந்தைகள் சாகும் நிலை வரை, இந்த
ஊடகங்கள் கொடூரமான முறையில் பாலஸ்தீனத்தின் துன்பங்களின் தீவிரத்தைத் தந்திரமான முறையில் குறைவாகவே தெரிவித்தன. இஸ்ரேலின் திட்டமிட்ட பட்டினிக்கொலை என்பது விவரிக்க முடியாத வகையில் கொடூரமாக இரு வழிகளில் பாலஸ்தீனர்கள்
மீது செய்யப்படும் இனப்படுகொலையாகும். சிறைபிடிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களைப் பட்டினி போடுவதுடன், அவர்கள் மேல் இஸ்ரேல் இப்போரில்
ஆயுதங்கள் தீரத்தீர அமெரிக்காவிடமிருந்து இடைவிடாமல் ஆயுதங்களைப் பெற்று குண்டுகளைப் பொழிந்து கொண்டிருந்த வேளையில், இஸ்ரேலின் ஊடகங்கள் தந்திரமாக 'பிணைக் கைதிகள், பிணைக் கைதிகள்', 100-க்கும் அதிகமான பிணைக் கைதிகள்' பற்றியும், பாலஸ்தீனத்தின் விடுதலைக்காகப் போராடும் கொரில்லாக்களின் வெற்றிகரமான தாக்குதல் பற்றிய இஸ்ரேலின் விமரிசனத்தையும் காட்சிப்படுத்திக் கொண்டிருந்தன.
நெதன்யாகு,
அமெரிக்காவிடமிருந்து தொடர்ந்து ஆயுதங்களைப் பெறாமலும், இரட்டை இனப்படுகொலைக்கான துணைக் கருவிகளான CIA - கட்டுப்பாட்டில் உள்ள பத்திரிக்கையாளர் ஆதரவு
இல்லாமலும் காஸாவில் இனஒழிப்புச் செய்வதற்கான ஆணையைத் தொடர்ந்து கொடுக்க முடியாது.
நெதன்யாகு
கொடூரமான மன நோயாளி என்ற
சர்வதேசக் கருத்து சரியான திசை வழியில் வைக்கும்
ஓர் அடியாகும். இது, பல இஸ்ரேலியர்களை
அக்கறை கொள்ள, மறு சிந்தனை செய்ய
வைக்கும்; அவர்களுடைய பயங்கரமான இன ஒழிப்பை நிறுத்த
அக்கறை கொள்வார்கள். மேலும், நெதன்யாகுவின் குழந்தைகளைப் பட்டினி போட்டுச் சாக அடித்து இனப்படுகொலை
செய்ய ஆரம்பத்திலிருந்து தொடர்ந்து 4 மாதங்கள் வரை பிடென் நிர்வாகம்
அவருக்கு ஆதரவளித்தது. உலகில் பரவலாக நெதன்யாகு கொடூரமான மன நோயாளி என்பது
நிறுவப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டால், காஸாவின் இனப்படுகொலைக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்த
அமெரிக்க அதிபர் பிடெனின் மனப் பிறழ்வு பற்றி
நாம் கவனம் கொள்வது எளிதாகும்.
தெற்கு
உலகின் மனிதநேயம் கொண்ட மக்கள் இந்த இனப் படுகொலைக்கும்,
அதற்குக் காரணமான நெதன்யாகு மற்றும் மேற்குலகின் மேலாதிக்கக் காலனிய ஏகாதிபத்தியத்தின் தற்போதைய தலைவருக்கும் எதிரான கண்டனங்களை உரக்க அறிவிப்பார்கள்.
தமிழில்:கவிதா
ஆசிரியர் பற்றிய குறிப்பு: ஜே ஜேன்சன் வரலாற்று ஆராய்ச்சிகளைக் காப்பதற்கான ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து செயல்படுபவர், இசைக்கலைஞர், மற்றும் எழுத்தாளர் ஆவார்.
(12.3.2024 அன்று Monthly Review OnLine ல் வெளியான கட்டுரை)
Comments
Post a Comment