Skip to main content

ஒரு தீப்பொறி!

 
இந்த நல்லிணக்கம் உனக்கேன் உறுத்துகிறது?

மறந்துவிடாதே ஒருபோதும்

கூண்டுப் பறவையின் பாடல் கூட

காட்டுத் தீயைப் போல

உலகெங்கும் பரவலாம்

அதன் அலகில் இருக்கும் வறண்ட புல்

கூடுகட்டுவதற்காக இருக்கலாம்

ஆனால் நீ செய்வதென்ன

சிறு பொறியால் அதைப் பற்றவைத்து

கொழுந்துவிட்டு எரியச் செய்கிறாய்

மார்பின் அளவல்ல ஒரு மனிதனை உருவாக்குவது

முதலைக் கண்ணீர் கூருணர்வைக் காட்டாது

பிணியுற்ற பறவை குறித்து நீயும் நானும்

என்ன உணர்கிறோம் என்பதுதான் விடயம்

நீ கூண்டில் அடைத்துள்ள பறவையின் பாடல்

எங்கள் குரல்வளையில் ஆழ வேர்கொண்டுள்ளது

ஆம், மக்கள் ஒரு கலைஞனை அரவணைக்கிறார்கள்

அதிகாரம் படைத்தவர்களுக்கு அவர்களைப் பற்றிப்

பேசவும் பாடவும் பாணர்கள் வேண்டும்

மாறிக்கொண்டிருக்கும்

காற்றின் திசையை உணர்ந்துகொள்

கூண்டின் கதவைத் திறந்துவிடு

இல்லாவிட்டால்

சுயமோகத் தங்க எழுத்துக்களில்

வடிவமைக்கப்பட்ட உனது மூடங்கியைக்

கவனமாகப் பார்த்துக்கொள்

ஒரு சிறு தீப்பொறி அதிவிரைவில் காட்டுத் தீயாக

ஆகிவிடுகிறது.

 

சிரிதர் நந்தேத்கர்

தமிழில் நிழல்வண்ணன்

 

சிரிதர் நந்தேத்கர் புகழ்பெற்ற மராத்திக் கவிஞர், மொழிபெயர்ப்பாளரும் பதிப்பாசிரியரும் கூட. தற்போது மராட்டியத்தில் அவுரங்காபாத்தில் வசிக்கும் அவர் ஆங்கிலம் கற்பிக்கிறார். திலீப் வி சவான் இக்கவிதையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். அவர் ஆங்கில இலக்கியம் கற்பிக்கிறார்; செய்தித்தாள்களுக்கு பத்திகள் எழுதுகிறார்; ஆங்கிலம், மராத்தி, இந்தி ஆகிய மொழிகள் ஒன்றிலிருந்து ஒன்றுக்கு மொழிபெயர்ப்புச் செய்துவருகிறார். 

நன்றி: ஜனதா வீக்லி

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...