Skip to main content

Posts

Showing posts from July, 2024

கிக் தொழிலாளர்களின் வாழ்வைச் சூறையாடப் பாதை வகுக்கும் முதலாளித்துவக் கட்சிகள்!

  கடந்த ஜூலை 9 ஆம் தேதி காங்கிரசு தலைமையிலான கர்நாடக அரசு கிக் தொழிலாளர்களுக்கான மசோதா ஒன்றை சட்டப்பேரவையில் தாக்கல் செய்துள்ளது . ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூலை 2023 இல் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசு அரசால் கொண்டு வரப்பட்ட இயங்கு தளம் (Platform) அடிப்படையிலான கிக் தொழிலாளர்கள் சட்டம் ( பதிவு மற்றும் நலன் ) 2023 ஐ (The Rajasthan Platform Based Gig Workers (Registration and Welfare) Act, 2023) போன்றே இதுவும் அமைந்துள்ளது . ஆன்லைன் செயலியை அடிப்படையாக கொண்டு இயங்கும் நிறுவனங்களான சொமோட்டோ , ஸ்விக்கி , பிக் பேஸ்கட் அமேசான் , பிளிப்கார்ட் , ஒலா , உபேர் , ஸெப்டோ , ப்ளின்கிட் போன்ற நிறுவனங்களில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கான சட்டமாகும் இது . பாரம்பரிய முறையில் முதலாளி தொழிலாளி உறவு என்ற அடிப்படையில் இல்லாமல் வேலை செய்யும் தொழிலாளர்களை கிக் தொழிலாளர்கள் அல்லது பிளாட்பார்ம் தொழிலாளர்கள் என இது கூறுகின்றது . கிக் தொழிலாளர்களுக்குத் தொடர்ந்து வேலை வழங்கும் ஆன்லைன் செயலி முதலாளிகள் , தாம் உற்பத்தியாளர் அல்லது சேவைய

வரவு - செலவுத் திட்டம் – பொய்களும் உண்மைகளும்!

  ஜூலை 23ந் தேதி, தொடர்ந்து ஏழாவது முறையாக இந்திய ஒன்றியத்தின் வரவு –செலவுத் திட்டத்தைத் தாக்கல் செய்யும் “பெருமையைப்” பெற்ற நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் துணிந்து பல பொய்களை நாடாளுமன்றத்தில் தனது உரையின் வாயிலாகத் தெரிவித்துள்ளார். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு பார்ப்போம். ஏற்றத்தாழ்வு தொழில்நுட்பத்தின் பயன்பாடு என்ற தலைப்பின் கீழ் அவர் கூறுகிறார், “கடந்த பத்தாண்டு காலத்தில் உற்பத்தித் திறனை வளர்ப்பதற்கும் ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கும் தொழில்நுட்பத்தை வெற்றிகரமாக நாம் பயன்படுத்தி வந்துள்ளோம்” எனத் திருவாய் மலர்ந்துள்ளார். தொழில்நுட்பத்தை அவர்களுடைய ஆட்சியில் வெற்றிகரமாகப் பயன்படுத்தி உள்ளார்களாம். அதனால் நாட்டு மக்களிடம் நிலவும் ஏற்றத்தாழ்வை வெற்றிகரமாகக் குறைத்து உள்ளார்களாம். இவருடைய இந்தப் பொய்யை ஜூலை 22 ந் தேதி அவரால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ‘பொருளாதார ஆய்வு அறிக்கை’ அம்பலப்படுத்துகிறது. ‘மேல் மட்டத்தில் உள்ள வசதி படைத்த 10 விழுக்காட்டினர் மொத்த நாட்டு வருமானத்தில் 60 விழுக்காட்டைப் பெற்று வருகின்றனர். இடையில் உள்ள 40 விழுக்காடு மக்கள் வருமானத்தில் 30 வ