Skip to main content

Posts

Showing posts from September, 2024

வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள்

  வெனிசுவேலாவில் ஜூலை 28, 2024 அன்று நடந்த தேர்தலில் நிகோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார். அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஊதுகுழலான முதலிய ஊடகங்களும் அந்தத் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்று கூறி அந்தத் தேர்தல் முடிவை எதிர்த்துப் பரப்புரைகளில் ஈடுபட்டன. வெனிசுலாவில் உள்ள அமெரிக்க ஏகாதிபத்திய ஆதராவாளர்கள் மதுரோவின் ஆட்சியைக் கவிழ்க்கும் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவரது ஆட்சியைக் கவிழ்க்க வலது சாரியினர்   மேற்கொண்ட சதி முயற்சிகளையும் தேர்தலின் போது   அவர்கள் அரங்கேற்றிய வன்முறைகளையும் , எதிர்த்து உலகம் முழுவதும் ஏராளமான நகரங்களில் மக்கள் இயக்கங்கள் , இடதுசாரிக் கட்சிகள் , தொழிற்சங்கங்கள் ஆகியவை ஆகஸ்ட் 17, 2024 அன்று வெனிசுவேலாவுக்குப்   பக்கபலமாக சர்வதேச ஒற்றுமைக்கான செயல்பாட்டு தினத்தில் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். சர்வதேச மக்கள் கூட்டமைப்பு , ALBA இயக்கங்கள் , சிமோன் பொலிவார் நிறுவனம் மற்றும் கரீபிய மக்கள் கூட்டமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து , ஆகஸ்ட் 9, 2024 அன்று தொடங்கப்பட்ட சர்வதேச ஒற்றுமையின் ஒரு பகுதியான இந்த சர்வதேச செயல் தினம

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட