Skip to main content

இலங்கை அதிபர் அனுர குமார திசாநாயகா - பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன்!

 

அண்மையில் செப்டம்பர் 21ல் இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் ஜனதா விமுக்தி பெரமுனா (மக்கள் விடுதலை முன்னணி) கட்சியின் வேட்பாளர் அனுர குமார திசாநாயகா தேசிய மக்கள் சக்தி என்ற அணி சார்பில் நின்று 'வெற்றி பெற்று அதிபராகி உள்ளார். இவரது வெற்றியை 'இடதுசாரி அரசு மலர்ந்தது ' என .பொ.. (மா) கட்சியின் இதழ் தீக்கதிர் குறிப்பிடுகிறது. மேலும் 'அரிவாள் - சுத்தி பொறிக்கப்பட்ட செங்கொடிகளை ஏந்தி இலங்கையில் மக்கள் அவரது வெற்றியைத் கொண்டாடி வருகின்றனர்' எனவும் அந்த இதழ் குறிப்பிடுகிறது. தீக்கதிர் மட்டும் அல்ல பலரும் திசாநாயகாவின் வெற்றியை ஒரு புரட்சிகரக் கட்சி ஆட்சிக்கு வந்தது போல வரவேற்று மகிழ்ச்சி அடைகின்றனர்.

இதே திசாநாயகா 2019ல் நடந்த அதிபர் தேர்தலில் 3% வாக்குகள் மட்டுமே பெற்றிருந்தார். ஆனால் இப்பொழுது நடந்த தேர்தலில் முதல் சுற்றில் 42.3% வாக்குகள் பெற்றிருந்த அவர் இரண்டாவது சுற்றில் முன்னுரிமை வாக்குகள் அப்படையில் 55.89% வாக்குகள் பெற்று அதிபராகி உள்ளார். இது எப்படி நடந்தது?

2022ல் இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மக்களின் மாபெரும் எழுச்சிக்கு இட்டுச் சென்றது. மக்கள் ஆட்சியிலிருந்த முதலாளிய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதி இராஜபக்சே கும்பலை நாட்டை விட்டே துரத்தினார்கள். இந்த மக்கள் எழுச்சிக்கு எந்தப் பலமான புரட்சிகர அமைப்பும் தலைமை தாங்கவில்லை. முதலாளியத்திற்கு மாற்றாக புதிய அரசியல் அமைப்பையும் பொருளாதார அமைப்பையும் முன்வைத்து நாட்டை அரசியல், பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்டு வழி நடத்துவதற்குப் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையிலான புரட்சிகரமான பலமான அமைப்பு அங்கு இல்லை. அதனால் தன்னெழுச்சியாக எழுந்த மக்களின் அந்த எழுச்சி புரட்சிகரமான அரசியல் மாற்றத்தைக் கொண்டு வரவில்லை. ஆளும் வர்க்கமோ ரணில் விக்ரமசிங்காவை புறக்கடை வழியாக ஆட்சியில் அமர்த்தி மக்களை ஏமாற்றியது. ரணில் விக்ரமசிங்காவின் ஆட்சி மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கவில்லை.

பொருளாதார நெருக்கடியிருந்து தப்பிக்க விக்ரமசிங்க அரசு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (.எம்.எப்) 290 கோடி டாலர்களைக் கடனாகப் பெற்றது. .எம்.எப். விதித்த நிபந்தனைகளின்படி விக்ரமசிங்க அரசு
சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டது. கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்கான நிதியைக் குறைத்தது. முதலாளிகளுக்கு சலுகைகளை வழங்கியது. பொதுச் சொத்துகளை தனியார் முதலாளிகளுக்கு விற்றது. மக்கள் எதிர்பார்த்தபடி பிரச்சினைகள் தீரவில்லை.

இந்தச் சூழலில் நடந்த அதிபர் தேர்தல் திசாநாயகா வெற்றிபெற நல்வாய்ப்பாக அமைந்தது. ஏற்கனவே கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறிஆட்சியில் இருந்து மக்களைக் கொள்ளையடித்து சொகுசு வாழ்க்கை நடத்தி வந்த விக்ரமசிங்க, ராஜபக்சே, பிரமதேசா ஆகியோரின் மீது மக்கள் அதிருப்தியுடனும் கடுங்கோபத்துடனும் வெறுப்புடனும் இருந்து வந்தனர். தங்களுடைய வாழ்வை நாசமாக்கியவர்கள் எவரும் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக் கூடாது எனக் கருதினர்.

இந்த நிலையில்தான் ''ஊழலை ஒழிப்பேன், ஊழல் மூலம் பொதுச்சொத்துகளைக் கொள்ளை அடித்தவர்களின் சொத்துகளைப் பறிமுதல் செய்வேன். நிர்வாக அமைப்பைச் சீர்திருத்தி மேம்பாடு அடையச் செய்வேன். மக்களைத் துயரங்களிலிருந்து விடுவிப்பேன்." ஆகிய வாக்குறுதிகளை அளித்து மக்களின் வாக்குகளை அறுவடை செய்துள்ளார் திசாநாயகா.

1960 களின் இறுதியில் ரோகன விஜயவீரா மற்றும் அவருடைய தோழர்களால் தொடங்கப்பட்ட கட்சிதான் ஜனதா விமுக்தி பெரமுனா. மார்க்சியம், லெனினியம், மாவோயிசம் ஆகியவற்றைத் தத்துவ வழிகாட்டியாகக் கொண்டு செயல்படும் எனக் கூறிக்கொண்ட கட்சி இடது தீவிரப்பாதை என்னும் தவறில் வீழ்ந்தது. 1971ல் சிரிமாவோ பண்டாராநாயக ஆட்சியின் போது திடீரென ஓர் ஆயுத எழுச்சியில் ஈடுபட்டது. ஆனால் அந்த எழுச்சி இந்தியா உட்பட பல நாடுகளின் உதவியால் ஒடுக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் அந்த எழுச்சியின்போது அரசால் கொல்லப்பட்டனர்.

1987-89 ஆண்டுகளில் மீண்டும் ஓர் ஆயுத எழுச்சியில் அந்தக் கட்சி ஈடுபட்டது. அதுவும் அரசால் கடுமையாக ஒடுக்கப்பட்டது. அதன் பிறகு அக்கட்சி இடது தீவிரவாதத்திலிருந்து விலகி வலது திரிபுவாதப் பாராளுமன்றப் பாதைக்குத் திரும்பியது. ஆளும் வர்க்கக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. 2004ல் சந்திரிகா பண்டார நாயக்கா அதிபராக இருந்தபோது ராஜபக்சே பிரதமராக இருந்த அமைச்சரவையில் அனுர குமார திசாநாயகா வேளாண்மை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராகவும் இருந்தார்.

விடுதலைப் புலிகளின் தலைமையில் நடந்து வந்த ஈழ விடுதலைப் போரை 2009ல் ராஜபக்சே ஈவிரக்கமின்றி ஒடுக்கி இலட்சக்கணக்கான மக்களைக் கொன்ற போது அதற்கு ஆதரவு அளித்த கட்சிதான் ஜனதா விமுக்தி பெரமுனா (ஜெவிபி). புரட்சிகரக் கொள்கைகளைக் கொண்ட கட்சி என்று தொடங்கப்பட்ட கட்சி சிங்கள இனவாதத்திலும், பெளத்த மதவாதத்திலும் வீழ்ந்தது. தேசிய இனங்கள் சமத்துவத்துடனும் ஜனநாயக உரிமைகளுடனும் வாழ்வதை உறுதிப்படுத்தும் அரசியல் சுயநிர்ணய உரிமை என்னும் லெனினியக் கோட்பாட்டிற்கு எதிராக அது செயல்பட்டது. அதனால் அந்தக் கட்சியை தமிழ் மக்கள் தங்களுக்கு எதிரான கட்சியாகவே கருதுகின்றனர். அதனால்தான் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளிலிருந்து திசாநாயகாவால் மிகக் குறைவான வாக்குகளையே பெற முடிந்தது.

இலங்கை ஆளும் வர்க்கத்தின் பல கட்சிகளைச் சேர்ந்த ஏஜண்டுகளும் மக்கள் முன் கேவலமாக அம்பலப்பட்டுப் போய் விட்ட நிலையில் மக்களைத் துயரங்களிலிருந்து மீட்பவராக திசாநாயகா இன்று ஆளும் வர்க்கத்தால் முன்னிறுத்தப்பட்டுள்ளார்.

மக்களுக்குப் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சிக் கட்டில் ஏறி உள்ள திசாநாயகா அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் விரைவில் அம்பலப்பட்டுப் போவார் என்பது மட்டும் உறுதி.

மக்களின் வறுமை, வேலை இல்லாத் திண்டாட்டம், விலைவாசி ஏற்றம் போன்ற துயரங்களுக்கு எல்லாம் காரணமாக இருப்பது நிலவி வரும் முதலாளிய வர்க்கச் சுரண்டல் தான். அதில் பெருமளவு பயன் பெறுபவர்கள் உள்நாட்டு முதலாளிகளும். வெளிநாட்டு முதலாளிகளும்தான். இந்தச் சுரண்டல் அமைப்பை மாற்றி அமைக்காமல் மக்களைத் துயரங்களிலிருந்து விடுவிக்க முடியாது. மேலும் இந்தச் சுரண்டல் அமைப்பைக் கட்டிக் காப்பாற்றி வரும் அதிகாரவர்க்க ஆட்சி அமைப்பை புரட்சிகரமான முறையில் மாற்றி அமைக்காமல் சுரண்டலையும் ஊழலையும் ஒழிக்க முடியாது.

ஆனால் திசாநாயகா தனது ஆட்சியின் கீழ் உள்நாட்டு முதலாளிகள் மற்றும் வெளிநாட்டு முதலாளிகளின் மூலதனத்துக்கும் இலாபங்களுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படாது என உறுதிமொழி கொடுத்து உள்ளார். சில மாதங்களுக்கு முன்பே இந்தியா வந்து இந்திய ஆட்சியாளர்களுக்கு வாக்குறுதி அளித்து அவர்களது ஆசியைப் பெற்றுள்ளார். அமெரிக்காவுடன் உறவு கொண்டு அதன் நல்ல எண்ணத்தையும் பெற்றுள்ளார். .எம்.எப்.ன் மக்களுக்கு மேலும் சுமைகளைக் கொண்டு வரும் நிபந்தனைகளை நிறைவேற்றாமல் இவர் தப்பிக்க முடியாது.

இவ்வாறு திசாநாயகா ஒரு பக்கம் முதலாளிய வர்க்கத்தின் நண்பனாக இருந்து கொண்டு, மக்கள் மீதான அதன் சுரண்டலை ஒழிக்காமலே மக்களைத் துயரங்களிலிருந்து விடுவிக்கப் போவதாக வேடம் போடுகிறார்; பாலுக்கும் காவலனாகவும் பூனைக்கும் தோழனாகவும் இரட்டை வேடம் போடுகிறார்.

நிலவி வருகின்ற பொருளாதர அமைப்பிலும் அரசியல் அமைப்பிலும் அடிப்படை மாற்றங்களைக் கொண்டு வராமல் இலங்கை மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது. பிரச்சினைகள் தீராத போது மக்கள் மீண்டும் போராட்டங்களில் குதிப்பதைத் தவிர்க்க முடியாது. அப்பொழுதுதான் திசாநாயகாவின் உண்மை முகம், ஆளும்வர்க்கத்தின் ஏஜண்ட் என்ற முகம், வெளிப்படும். நிலவுகின்ற மக்களுக்கு எதிரான அமைப்பை அம்பலப்படுத்தி மக்களின் புரட்சிகர ஆற்றலால் அதை மாற்றி அமைக்காவிட்டால், அமைப்பே ஆள்பவர்களை மக்கள் முன் அம்பலப்படுத்தி விடும் என்பதுதான் வரலாறு.

அம்பலப்பட்டுப்போன நிலையில் திசாநாயகா அனைத்து வகைப்பட்ட சதிகளிலும் ஈடுபட்டு, எப்படியாவது ஆளும் வர்க்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுவார். சிங்களப் பேரினவாதத்தையும் பெளத்த மதவாதத்தையும் கையில் எடுத்து மக்களைப் பிளவுபடுத்தி தேசிய இனங்களுக்குள் மோதலை உருவாக்கவும் தயங்கமாட்டார். இதற்கான விதையை ஜனதா விமுக்தி பெரமுனாவின் வரலாறு தன்னகத்தே கொண்டுள்ளது.

  - மு.வசந்தகுமார் 

Comments

  1. பொறுத்து இருந்து பார்க்கலாமே தோழர்...!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சாம்சங் தொழிலாளர் போராட்டம்: தலைமைக்கு வெற்றி - தொழிலாளர்களுக்கு பின்னடைவு

  தொழிற்சங்க அங்கீகாரத்தை முதன்மைக் கோரிக்கையாகவும் மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் 37 நாட்களுக்கும் மேலாக வேலைநிறுத்தம் செய்து வந்த ‘ சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் ’ போராட்டம் , அது முன்வைத்த கோரிக்கைகளில் எதுவும் நிறைவேற்றப்படாமலேயே 15.10.2024 அன்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.   போராட்டங்கள் எப்பொழுதும் வெற்றியை மட்டுமே தருவதில்லை , வெற்றி மற்றும் தோல்வி இரண்டுமே மாறி மாறி வரக்கூடியதுதான் போராட்டக்களம். சில நேரங்களில் பெரும் இழப்புகளோடு கூட போராட்டக் களத்திலிருந்து பின்வாங்க வேண்டிய சூழல் ஏற்படும் , அந்தச் சூழலை உணர்ந்து போராட்டத்தைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய தேவையும் ஏற்படும். இதில் ஏற்பட்ட அனுபவத்தைத் தொகுத்துக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவதற்கான படிப்பினையை இது கொடுக்கும். ஆனால் , போராட்டத்தின் போக்கு தொழிலாளர்களின் நலனை முன்னிறுத்தாமல் , ஏமாற்றும் போக்கைக் கைக்கொள்ளும் பொழுது அது ஒட்டுமொத்தத் தொழிலாளி வர்க்கத்தின் நலனுக்கே எதிராகக் கொண்டு போய் விடுகின்றது.   சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்குத் தலைமை கொடுத்

வேலை பறிக்கப்பட்டு நடுத்தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  ராஜா கிரவுன்ஸ் அண்ட் கேன்ஸ் என்னும் நிறுவனம் ஒசூர் பகுதியில் 1998 முதல் செயல்பட்டு வருகின்றது . இது வெள்ளீயத்தால் ( தகரத்தால் ) ஆன கொள்கலன்களை , தகரக்குவளைகளை உற்பத்தி செய்கின்றது . இந்த ஆலையின் முதலாளி இந்தியாவை பூர்வீமாக கொண்டவராக இருந்தாலும் , தற்பொழுது கென்யாவில் வசித்து வருகின்றார் . தொடக்கம் முதலே இந்த ஆலையானது தொழிலாளர்களின் உழைப்பை வரைமுறையின்றிச் சுரண்டிக் கொழுத்து வருகின்றது . வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்கள் நீண்டநாட்கள் பணிபுரிந்து வந்தாலும் அவர்களுக்குப் பணி நிரந்தரம் செய்யாமலும் , நியாயமான ஊதியம் வழங்காமலும் தொழிலாளர்களை வஞ்சித்து வந்தது . தொழிலாளர்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து 52 தொழிலாளர்கள் மட்டும் நிரந்தரம் செய்யப்பட்டனர் . இவர்களும் ஆறு வருடங்களுக்கும் மேலாக ஒப்பந்தத் தொழிலாளர்கள் , பயிற்சித் தொழிலாளர்கள் என மாற்றிமாற்றி அவர்களை வகைபடுத்தி பின்னரே நிரந்தரம் செய்யப்பட்டனர் . அதற்குப் பின்னர் பணியில் சேர்ந்த தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே வைக்கப்பட்டுச் சுரண்டப்பட்டு வருகின்றனர் . தற்பொழுது வரை 450 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்பட

பாசிச எதிர்ப்பு என்ற பெயரில் சீர்த்திருத்தவாதத்தில் வீழ்ந்துள்ள இடதுசாரி இயக்கங்கள்

இந்திய ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாக நாடாளுமன்றத்தின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இடதுசாரிகள் எனத் தம்மை அழைத்துக் கொள்ளும் சில அமைப்புகளின் போக்குகள் அவர்களின் சீர்த்திருத்தவாதக் கண்ணோட்டத்தை அம்பலபடுத்தி வருகின்றன. நீண்டகாலமாக ஆட்சியில் இருந்த காங்கிரசு கட்சி இந்திய முதலாளி வர்க்கத்தின் வளர்ச்சிக்கும் சுரண்டலுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுத்தும் , பெரும் மூலதனம் தேவைப்படும் கனரகத் தொழில்களை மக்களுடைய வரிப் பணத்திலிருந்து அமைத்துக் கொடுத்தும், ஆரம்பக் கட்டத்தில் பன்னாட்டு மூலதனங்களின் போட்டியிலிருந்து அவர்களைப் பாதுகாத்தும் , பின்னர் இந்திய முதலாளிகள் சர்வதேச அளவில் சந்தையைப் பிடிக்கவும் , முதலீடு செய்யவும் உலகமயமாக்கல் கொள்கையை முன்னெடுத்தும் தொடர்ந்து சேவை செய்து வந்தது. அதே நேரத்தில் தொழிலாளர்களின் நலனுக்காகவும் , விவசாயிகளின் நலனுக்காகவும் , ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும் போராடிய இடதுசாரிகள் , ஜனநாயக அமைப்புகள் மீது கடுமையான தாக்குதலை நடத்தி ஒடுக்கி வந்தது. வீரம் செறிந்த தெலுங்கானா மக்களின்