டார்வின் பிப்ரவரி 1 2, 1809 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் தென் அமெரிக்காவின் கேலபோகஸ்தீவில் ஆமைகளின் பரிணாமத்தைப் பற்றி படித்தார். அவர் இன்றைய மனிதன் குரங்குகளிலிருந்து பரிணாம வளர்ச்சி மூலம் உருவானான் என்னும் கோட்பாட்டை அடைந்தார். அப்போது ஒரு சிற்பி , சுத்தி மற்றும் உளி கொண்டு சிலைகளை உருவாக்குவது போல கடவுள் மனிதனை படைத்தார் என்று தீவிரமான நம்பிக்கையை மேற்குலகு கொண்டிருந்தது. “கடவுள் தனது உருவத்தைப் போலவே மனித இனத்தைப் படைத்தார் ஆணையம் பெண்ணையும் அவர் படைத்தார்" என்று பைபிள் (ஜெனிசிஸ் 1:27) கூறுகிறது. ஆனால் டார்வின் , மனித இனம் உருவான நிகழ்வுப்போக்கில் கடவுள் போன்ற எந்தப் புறப்பொருளின் தலையீடும் இல்லை என்று கூறினார் ; மனித இனம் இயற்கைத் தேர்வு என்னும் நிகழ்வுப்போக்கின் மூலமே பரிணமித்தது என்றார். எல்லா உயிரினங்களிலும் வேறுபாடுகள் உள்ளன. சில குரங்குகள் மென்மையாகவும் சில வலிமையாகவும் இருக்கின்றன. இவற்றில் தன்னைச் சுற்றியுள்ள சூழ்நிலைக்கு ஏற்றவாறு தன்னை தகவமைத்துக் கொண்டவை ஏராளமான எண்ணிக்கையில் தனது இனத்தைப் பெருக்கி தங்களது இனத்தை நிலை நிறுத்திக் கொண்டன ; அதே சமயத்தில் அப்படித் தன்னை...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்