2004 முதல் 2014 வரையிலும் இந்தியாவின் பதினான்காம் பிரதம மந்திரியாக இருந்த திரு. மன்மோகன் சிங் அவர்கள் தனது 92 ஆம் வயதில் 26.12.202 4 அன்று மறைந்தார். சிறந்த பொருளாதார அறிஞர், நவீன இந்தியாவிற்கு வித்திட்டவர், கண்ணியமான அரசியல்வாதி, நேர்மையானவர், கறைபடாத கரங்களுக்குச் சொந்தக்காரர், மென்மையான அணுகுமுறையைக் கொண்டவர் எனப் பல்வேறு விதமாக இந்தியாவில் உள்ள ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்களும், எதிர்க் கட்சியினரும், பன்னாட்டுத் தலைவர்களும் மறைந்த மன்மோகன் சிங் அவர்களுக்குப் புகழாரங்களைச் சூட்டியுள்ளனர்; இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி கற்றவர், ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர், இந்திய மத்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநராக இருந்தவர் எனப் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் அவருடைய சிறப்புகளைப் பற்றிப் புகழ் பாடியுள்ளன. மன்மோகன் சிங் 1991 முதல் 1996 வரை ஒன்றிய அரசில் காங்கிரசின் நரசிம்மராவ் தலைமையில் இருந்த அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர். அவருடைய காலத்தில்தான். தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் என்ற புதிய தாராளவாத ம...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்