மார்ச் 17 அன்று மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் இந்துத்துவப் பாசிச அமைப்புகளான விஸ்வ ஹிந்து பரிசத்தும், பஜரங் தளமும் இணைந்து முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். அது கலவரத்தைத் தூண்டி ஓர் உயிரைப் பலி கொண்டுள்ளது.; முப்பதுக்கும் மேற்பட்டோரை காயமடைச் செய்துள்ளது. கலவரத்தில் ஈடுபட்டதாகக் கூறி சிலரின் வீடுகளை புல்டோசர் கொண்டு இடித்துள்ளது அந்த மாநிலத்தின் பாஜக தலைமையில் உள்ள அரசு. ஏறக்குறைய 318 ஆண்டுகளுக்கு முன்பு இறந்த முகலாய மன்னர் அவுரங்கசீப் அடக்கம் செய்யப்பட்ட சமாதி இன்று கலவரம் செய்ய தேவைப்பட்ட , தேடப்பட்ட காரணங்களில் ஒன்றாகியுள்ளது. கலைஞனின் பொறுப்பை மறந்து , பொறுப்பற்ற முறையில் சமுதாய அமைதியைக் குலைக்கும் என்று தெரிந்தும் சுயலாபத்துக்காக எடுக்கப்படும் அபாயகரமான படைப்புகளைச் சிலாகித்துப் பேசுவது--- ஊடகங்களில் தேர்தல் பிரச்சார மேடைகளில் தன் பதவியின் பொறுப்பை உறுதியுடன் மறுத்துச் செயல்படுவது என்று சர்வ சாதாரணமாகிவிட்டது பிரதமர் மோடிக்கு. அவரை இந்தியர்களின் பிரதமர் என்று சொல்லலாமா அல்லது இந்துக்களின் பிரதமர் ...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்