இந்தியாவின் பட்டாசு உற்பத்தி மையமாக தமிழ்நாட்டில் உள்ள சிவகாசி நகரம் திகழ்கிறது . மொத்த பட்டாசு உற்பத்தியில் 80% முதல் 90% வரை சிவகாசியில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது . இந்தியாவில் உறபத்தி செய்யப்படும் பட்டாசுகளின் மதிப்பு தோராயமாக ரூ . 6,000 கோடி என்று மதிப்பிடப்படுகிறது . வெளிநாடுகளுக்கும் கணிசமான அளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றது . சுமார் 90 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டாலும் அதிக அளவு அமெரிக்கா , நேபாளம் , பூட்டான் ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது . ஜூலை 1 ஆம் தேதி , விருதுநகர் மாவட்டம் , சின்னக்காமன் பட்டியில் செயல்பட்டு வரும் கோகுலேஸ் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே 7 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர் . இதனைத் தொடர்ந்து , மூன்று வாரங்களில் ஜூலை 22 ஆம் தேதி சிவகாசி அருகே ஆண்டியாபுரத்தில் உள்ள பட்டாசு ஆலையில் நடந்த வெடி விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் . ஒவ்வொரு சம்பவமும் உழைக்கும் மக்களின் உயிர்களைப் பலி வாங்கி , அவர...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்