போர் முடிந்தவுடன் முதலாளித்துவம் தனது இருத்தலுக்கான மிகச்சிக்கலான நிலைமையை எதிர்கொண்ட உடன் , அது அந்த நிலைமையைச் சமாளிக்க இரட்டைத் தந்திரங்கள் கொண்ட திட்டத்தை தேர்ந்தெடுத்தது. முதலாவது, அது “சிவப்பு அபாயம்” என்ற அச்சத்தை மக்கள் மத்தியில் பரப்பியது; இது எந்த விதமான நியாயமான காரணங்களும் இல்லாமல் , உள்நாட்டுத் தொழிலாளர் வர்க்கத்தை அச்சுறுத்தி முதலாளிய அமைப்பை ஒப்புக்கொள்ள வைக்கும் திட்டமாகும். இரண்டாவது, வேறு வழி இன்றி தனது செயல் முறையில் மாற்றங்களைக் கொண்டு வர நிர்ப்பந்திக்கப்பட்டது; அவற்றில் நான்கு கவனத்திற்கு உரியவை; அவை, முந்தைய காலனி வடிவத்தை அகற்றல், அனைவருக்கும் வாக்குரிமை என்ற அடிப்படையில் ஜனநாயக ரீதியான ஆட்சி நிர்வாகத்தை அமைப்பது , பெரும் திரளான வேலை வாய்ப்பின்மையைக் குறைக்க “வேண்டலை மேலாண்மை செய்வது (Demand management)” {வேண்டலை அதிகரிக்க மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவது –(மொ.பெ).}என்ற கெய்னிசிய கருத்தாக்கதை ஏற்றுக் கொள்வது மற்றும் மக்களின் நலன் சார்ந்த திட்டங்களை எல்லா இடங்களிலும், குறிப்பாக மேற்கு ஐரோப்பாவில், செயல்படுத்துவது ஆகியவையாகும். இந்தச் சீர்திருத்தங்கள்...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்