உலகின் போலீஸ்காரனாக இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் வீழ்ச்சியிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இன்று வாழ்வா சாவா என்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. “மீண்டும் அமெரிக்காவை சிறந்த நாடாக மாற்றுவோம்” என்ற முழக்கத்துடன் அமெரிக்காவின் டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகளின் மீது வர்த்தகப் போரைத் தொடுத்துள்ளார். பிற நாடுகளிலிருந்து தனது நாட்டில் இறக்குமதியாகும் பொருட்களின் மீது கடுமையான அளவு வரிகளை உயர்த்தியுள்ளார். ‘இந்தப் பூமியின் மீது உள்ள அனைத்து நாடுகளின் மீது கடுமையான வரிகளைப் போடுவதற்கு தனக்கு வரம்பற்ற அதிகாரம் உள்ளதாக ட்ரம்ப் கருதிக் கொண்டிருக்கின்றார். அவருடைய நடவடிக்கைகள் சட்ட விரோதமானவை.’ என்றும், ‘நிலையற்ற இந்த வணிகச் சூழல் தொழில்களையும் நுகர்வோரையும் கடுமையாகப் பாதிக்கும்’ என்றும் என அந்த நாட்டுக் கூட்டரசின் மேல் முறையீட்டு நீதி மன்றமே அவரைக் கண்டிக்கும் அளவுக்கு அவருடைய எதேச்சதிகார நடவடிக்கைகள் அமைந்துள்ளன. ‘ட்ரம்ப் மோடியின் சிறந்த நண்பர். எனவே அவர் இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு வரிகளை அதிகப்படுத்தமாட்டார். சீனாதான் அமெரிக்காவின் போட்டி நாடு. எனவே அந்த நாட்டின் மீது...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்