Skip to main content

Posts

Showing posts from October, 2023

பாசிச இஸ்ரேல் ஆக்கிரமிப்பு யுத்தத்தை உடனே நிறுத்த வேண்டும்!

  அக்டோபர் ஏழாம் தேதி காசா பகுதியில் இருந்து ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலின் மீது திடீர் தாக்குதலைத் தொடுத்தனர் . இந்தத் தாக்குதலை இஸ்ரேல் சிறிதும் எதிர்பார்க்கவில்லை . அதனுடைய புகழ்பெற்ற உளவு ஸ்தாபனமான மொசாத்தும் கூட அதை முன்கூட்டியே அறிந்திருக்கவில்லை . தொடர்ந்து நடந்த ஆயிரக்கணக்கான ராக்கெட் தாக்குதல்களில் இஸ்ரேல் மக்கள் 1400 பேர் இறந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன .   இந்தத் தாக்குதலைக் கண்டித்து ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் கடுமையான கண்டனத்தை வெளியிட்டன. அமெரிக்கக் குடியரசுத் தலைவர் உடனடியாக இஸ்ரேலுக்கு வந்து அமெரிக்காவின் முழுமையான ஆதரவு இஸ்ரேல் மக்களுக்கு உண்டு என்று கூறி தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார் அமெரிக்காவின் போர்க் கப்பல்களை மத்திய தரைக் கடலுக்கு அனுப்பியுள்ளார் . இங்கிலாந்தின் பிரதமர் ரிஷி சுனக்கும் தனது ஆதரவைத் தெரிவிக்க இஸ்ரேலுக்கு நேரடியாகச் சென்றுள்ளார் ஹமாஸ் அமைப்பினரின் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்த அமைப்பினரைப் பூண்டோடு ஒழிப்போம் என இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு சபதம் ஏற்று காசா பகுதி மீது கொடூரமான யுத்தத்தைத் தொடுத்துள்ளார் . கடந்த 14 நாட்களாக நட

ஜனநாயகம்?

  ஜனநாயகம் பற்றிய கூச்சல் சமீபமாக அதிகப்பட்டிருக்கிற நிலையில் உள்ளீடற்ற அந்த வெற்றுச் சொல்லாடலை கொஞ்சம் உரித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது. ”இந்தியா என்பது ஜனநாயகத்தின் தாயகம் . அது எங்களது ரத்த நாளங்களில் அனாதி காலந்தொட்டு ஓடிக் கொண்டிருக்கிறது . நாங்கள் மரபுரீதியாகவே ஜனநாயகத்தின் காவலர்கள் . இதுதான் இந்திய ஆட்சியாளர்களின் சமீபத்திய ஜனநாயகப் பிரகடனம் ”. உண்மையில் ஜனநாயகம் இந்த உலகிற்கு அறிமுகமாகி மூன்று நூற்றாண்டுகள்தான் ஆகிறது . அதுவும்   கூட முதலாளிகளுக்கான ஜனநாயகம்தான்.   அதிலும் முதலாளித்து வ ம் வளர்ச்சியடைந்து கொண்டிருந்த கட்டத்தில் , போட்டிகள் நிறைந்த , ஏகபோகமற்ற சந்தை   நிலவியவரை தான் அந்த ஜனநாயகம் உயிர்த்திருந்தது . ஏகபோக முதலாளித்துவம் தோன்றியதும் ஜனநாயகம் கசப்பான ஒன்றாக முதலாளித்துவ வர்க்கத்திற்கு மாறிவிட்டது. தற்போது உலகம் முழுமையும் ஏகாதிபத்தியத்தின் அசுரப் பிடியில் இருக்கும் சூழலில் எங்குமே ஜனநாயகமில்லை . இப்பொழுது நிலவி வருவது சிலரைக் கொண்ட குழு ஆட்சிதான் ( Oligarchy). இதுதான் யதார்த்தம் . பண்டைக் காலத்திலிருந்தே ஜனநாயகம் இந்த நாட்டின் காடு , கரை , மூலை , முடுக்கு , க

பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான பாசிசத் தாக்குதலைக் கடுமையாக கண்டிக்கிறோம்!

கடந்த மூன்றாம் தேதி செய்தி இணைய முகப்பான(News Portal) நியூஸ் க்ளிக் (News Click) மீது பாஜக அரசின் டெல்லி போலீஸ் தாக்குதலைத் தொடுத்து அதன் அலுவலகத்தையும் செயல்பாட்டையும் முடக்கியுள்ளது. அதனோடு தொடர்புடைய பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அதில் பணிபுரியும் பணியாளர்கள் என 46 பேரின் வீடுகளில் சோதனை இட்டு, ஆறு மணி நேரங்களுக்கு மேலாக அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி. அவர்களிடமிருந்து மடிக்கணினி, அலைபேசி ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளது; நியூஸ் கிளிக்கின் தலைமை ஆசிரியரான பிரபீர் பர்க்யஸ்தா என்பவரையும் அதன் மனித வளத் துறைத் தலைவரான அமித் சக்கரவர்த்தியையும் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. நியூஸ் கிளிக்கின் மீது குறிப்பான எந்தக் குற்றச்சாட்டையும் கூறாமல் பொத்தாம்பொதுவாக அது இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற ஒரே காரணத்தைக் கூறி இந்தப் பாசிச நடவடிக்கையில் இறங்கி உள்ளது இந்திய பாஜக அரசு. அனைத்து முதலாளிய ஊடகங்களையும் பாஜக அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தனக்கு ஆதரவாக மாற்றியுள்ளது. இந்த நிலையில் அதனை எதிர்த்து அதனுடைய அநீதிகளையும் தவறுகளையும் மக்கள் விரோதச் செயல்களையும்

ஒய்யாரக் கொண்டையாம்! உள்ளே ஈறும் பேணுமாம்!

  செப்டம்பர் மாதம் (2023) 9, 10 தேதிகளில் டெல்லியில் ஜி 20 நாடுகளின் 18- வது உச்சி மாநாடு வெகு கோலாகலமாக நடந்து முடிந்தது . இந்த ஆண்டு ஜி 20 மாநாடு நடத்த வேண்டிய தலைமைப் பொறுப்பு இந்தியாவுக்கு வந்தது . இந்தப் பொறுப்பு சுழற்சிமுறையில் ஒவ்வொரு நாட்டுக்கும் வருவதாகும் . சென்ற ஆண்டு இதனுடைய தலைமைப் பொறுப்பு இந்தோனேசியாவிடம் இருந்தது. இந்த ஆண்டு இந்தியாவிற்கு வந்தது. அடுத்து அதன் தலைமை பிரேசிலுக்கு செல்கின்றது . ஆனால் இந்தியாவின் பிரதம மந்திரியும் பா.ஜ.க. பரிவாரங்களும் இந்த பொறுப்பு மோடியின் தகுதியினாலும் திறமையினாலும்தான் இந்தியாவுக்குக் கிடைத்ததாகத் தம்பட்டம் அடித்துக் கொள்கிறார்கள் .   இந்த உச்சி மாநாட்டை நடத்துவதில் இந்திய ஆட்சியாளர்கள் தங்களுடைய ஆடம்பரத்தையும் ஊதாரித்தனத்தையும் வெளிக்காட்டிக் கொண்டார்கள் . மாநாட்டை ஒட்டி டெல்லியை அழகுபடுத்துவதற்கு மட்டும் ஆட்சியாளர்கள் 4100 கோடி ரூபாய்களை அள்ளித் தெளித்துள்ளார்கள். இந்த மாநாடு நடந்த பாரத் மண்டபத்தைக் கட்டமைக்கவும் அழகுபடுத்தவும் மட்டும் ரூ. 2700 கோடி செலவழித்துள்ளார்கள் . ஜி 20 மாநாடு 2017 இல் ஜெர்மனியில் உள்ள ஹம்பர்க் நகரில்