Skip to main content

Posts

Showing posts from June, 2024

இந்திய அரசே, பாலஸ்தீன மக்களைக் கொல்ல ஆயுதங்களை ஏற்றுமதி செய்யாதே!

  கடந்த ஆண்டு அக்டோபர் 7ந் தேதி ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீன மக்களை அடக்கி ஒடுக்கி வரும் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுத்தனர்; 1200 இஸ்ரேலியர்களைப் பிணையக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். தற்காப்பிற்காகப் பதிலடி கொடுப்பதாகக் கூறிக்கொண்டு கடந்த ஒன்பது மாதங்களாக இஸ்ரேலின் பாசிச நெதான்யாகு அரசு வரலாறு காணாத அளவுக்குக் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்களைத் தொடுத்து பாலஸ்தீன மக்களைக் கொன்று குவித்து வருகிறது. இதுவரையிலும் 37,000 பேருக்கும் மேல் போரில் கொன்று குவிக்கப்பட்டுள்ளனர். அதில் 70% மேல் குழந்தைகளும் பெண்களும் ஆவர். பல்லாயிரக்கணக்கானோர் கை, கால்களை, கண்களை இழந்து நடைபிணமாக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் அரபு நாடுகளிலும் என உலகெங்கும் இஸ்ரேலின் மனிதகுல அழிப்புப் போருக்கு எதிரான போராட்டங்களை மக்களும் மாணவர்களும் நடத்தி வருகின்றனர். அமெரிக்க ஏகாதிபத்தியமோ ஒருபக்கம் ஒப்புக்காக இஸ்ரேலிடம் போரை நிறுத்துமாறு கூறிக்கொண்டே இன்னொரு பக்கம் போரை நடத்துவதற்குத் தேவையான ஆயுதங்களை வழங்கி வருகிறது. மத்திய ஆசியாவில் தன்னுடைய நலன்களைக் காப்பதற்கான அடியாளாகச் செயல்படும் இஸ்ர

நாடாளுமன்றத் தேர்தலின் முடிவுகளும் பிரமைகளும்!

ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கிய நாடாளுமன்றத்திற்கான 18-வது தேர்தல் ஒரு வழியாக நடந்து முடிந்தது. நானூறு இடங்களைப் பெற்று மாபெரும் வெற்றியைப் பெறுவோம் என்று களத்தில் இறங்கிய பாஜக பரிவாரங்களும் மோடியும் தங்களுடைய பிரச்சார பீரங்கிகளை நாடெங்கும் முடுக்கிவிட்டனர். மூலைமுடுக்கெல்லாம் தங்களுடைய வெறுப்புப் பேச்சுகளால் மக்களுடைய மனங்களில் விசத்தைப் பரப்பினர். உண்மைகளைத் திரித்தும் வதந்திகளைப் பரப்பியும் மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தினர். மக்களை உண்மையை அறிய முடியாமல் தடுத்தனர். பொய்களாலும் புனைசுருட்டுகளாலும் கட்டமைக்கப்பட்ட மோடி என்ற பிம்பதைக் காட்டி நாடு முழுவதும் வாக்குகளை அறுவடை செய்யத் திட்டமிட்டது பாஜக. மோடி நாடு முழுவதும் சென்று தேர்தல் பரப்புரை செய்வதற்கு ஏதுவாகவே ஏப்ரல் 19ல் தொடங்கி ஜூன் 1 ல் முடியும் வகையில் ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்பட்டது. ஓராண்டு காலமாக மணிப்பூர் இனக் கலவரத்தால் பற்றி எறிந்து வந்த போதும் அம்மாநிலத்திற்கு ஒரு முறை கூட இந்த நாட்டின் பிரதமர் மோடி செல்லவில்லை. அந்த மக்களுக்கு ஆறுதல் கூறவில்லை. ஆனால் தேர்தலுக்காகப் பரப்புரை செய்வதற்கு எனத் தமிழ்நாட்டிற்கு மட்டும் எட்டு

ஒரு தீப்பொறி!

  இந்த நல்லிணக்கம் உனக்கேன் உறுத்துகிறது ? மறந்துவிடாதே ஒருபோதும் கூண்டுப் பறவையின் பாடல் கூட காட்டுத் தீயைப் போல உலகெங்கும் பரவலாம் அதன் அலகில் இருக்கும் வறண்ட புல் கூடுகட்டுவதற்காக இருக்கலாம் ஆனால் நீ செய்வதென்ன சிறு பொறியால் அதைப் பற்றவைத்து கொழுந்துவிட்டு எரியச் செய்கிறாய் மார்பின் அளவல்ல ஒரு மனிதனை உருவாக்குவது முதலைக் கண்ணீர் கூருணர்வைக் காட்டாது பிணியுற்ற பறவை குறித்து நீயும் நானும் என்ன உணர்கிறோம் என்பதுதான் விடயம் நீ கூண்டில் அடைத்துள்ள பறவையின் பாடல் எங்கள் குரல்வளையில் ஆழ வேர்கொண்டுள்ளது ஆம் , மக்கள் ஒரு கலைஞனை அரவணைக்கிறார்கள் அதிகாரம் படைத்தவர்களுக்கு அவர்களைப் பற்றிப் பேசவும் பாடவும் பாணர்கள் வேண்டும் மாறிக்கொண்டிருக்கும் காற்றின் திசையை உணர்ந்துகொள் கூண்டின் கதவைத் திறந்துவிடு இல்லாவிட்டால் சுயமோகத் தங்க எழுத்துக்களில் வடிவமைக்கப்பட்ட உனது மூடங்கியைக் கவனமாகப் பார்த்துக்கொள் ஒரு சிறு தீப்பொறி அதிவிரைவில் காட்டுத் தீயாக ஆகிவிடுகிறது .   சிரிதர் நந்

ஒரு நாள் என் கண்மணியைப் பார்த்தேன்!

  கொலை நிகழ்ந்த முந்திய இரவு சூரியனும் சந்திரனும் பணப்பெட்டியில் வைத்துப் பூட்டப்பட்டிருந்தன இந்தியக் கொடியை அவளுடைய வாயில் திணித்து அவளுடைய பேச்சைப் பறித்திருந்தார்கள் பல மனிதர்கள் மின்னும் வாள்களுடன் விரைந்தார்கள் தீரச் செயலுக்குப் பெற்ற பரிசைப் போல அவளை உயரத் தூக்கிப்பிடித்திருந்தார்கள் அவர்களுடைய முகத்தில் காறித் துப்பிவிட அவள் விரும்பினாள் ஆனால் அவர்களுக்கு முகங்கள் இல்லை ஏழு கடல்களின் சக்தியும் தாக்கியதைப் போல அவளைச் சங்கிலியால் பிணைத்திருந்தனர் அந்தக் காமுகர்கள் அவள் மீது வீசப்பட்ட வேட்டைக்காரர்கள் வலைக்கு எதிராக போராடிக் கொண்டிருந்த அவள் சுற்றியிருந்த விளக்குகளுக்குப் பின்னால் மறைந்து போனாள் மழையெனக் கொட்டிக்கொண்டிருந்தது அவளுடைய கண்ணீர் ஆனாலும் தாகமெடுத்த நூற்றுக்கணக்கான நாக்குகளுக்கு தாகம் தீரவில்லை . ஆற்றின் கரைகளில் சதைக் கோளங்கள்   சிதறிக் கிடந்தன அவளுடைய ஆடைகள் கந்தல் கந்தலாய் கிழிக்கப்பட்டிருந்தன அந்த நெறித்த தழுவலில் அவளது உயிரின் தசை நார்கள்   மண்ணில் இரத்தத்தைக் கொ

வங்க தேசப் புரட்சியாளர் ரானோ

கனவு காணும் இன்றைய மனிதர்கள் அபாயகரமானவர்கள் , ஏனென்றால் அவர்கள் விழித்திருக்கும் கண்களில் கனவுகளைக் காண்கிறார்கள் , அவற்றை நனவாக்கவும் செய்கிறார்கள்                                    - டி . எச் . லாரன்ஸ் வங்காள தேசத்தின் விடுதலைக் கனவை நனவாக்கிய வீரமிக்க முன்னணிப் போராளிகளில் ஒருவரான ஹைதர் அக்பர் கான் ரானோ கடந்த மே 11 (2024) அன்று தனது 81 வது வயதில் தாக்கா மருத்துவமனையில் உயிர் நீத்தார் . வங்காள தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் புரட்சிகரப் பங்கேற்ற அவருடைய இறப்புக்கு வங்காளதேசத்தின் அனைத்து செய்தி ஊடகங்களும் , ஆளும் கட்சி எதிர்க்கட்சி என்ற வேறுபாடின்றி அனைத்து அரசியல் தலைவர்களும் இரங்கலைத் தெரிவித்துக் கொண்டனர் . விடுதலைக்கான மக்கள் போராட்டத்தை ஒருங்கிணைக்க ஆர்வம் கொண்டுள்ள இளம் தலைமுறையினருக்கு ரானோ ‘ அண்ணா ’ வழிகாட்டியாக இருந்தார் . புரட்சிகரக் கனவுடன் இருந்த இளைஞர்கள் சமூகப் போராட்டத்தில் ஒரு திருப்புமுனையை எட்டுகிற துணிகரமான ஒளிமிக்க கனவுடன் அவரைச் சூழ்ந்திருந்தனர் , அவருடன் தொடர்பில் இருந்தனர் .