Skip to main content

Posts

Showing posts from August, 2024

வங்கதேசப் போராட்டக் களத்தின் பின்புலமும், படிப்பினைகளும்!

  வங்காளதேசத்தின் பிரதமர் நாட்டை விட்டுத் தப்பியோடும் வரையில் , மேற்கத்திய ஊடகங்களும் , சர்வதேச நிதி நிறுவனங்களும் அந்த நாடு பொருளாதாரத்தில் வெகுவேகமாக முன்னேறி வருவதாகப் பிரச்சாரம் செய்து வந்தன . அப்படி பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்திருந்தால் மக்கள் ஏன் வீதிக்கு வந்து இத்துணைப் பெரிய போரட்டங்களை முன்னெடுத்திருக்க வேண்டும் ? அதுவும் அரசு பணிகளில் இடஓதுக்கீடு சம்பந்தமான பிரச்சனை அதற்குத் தூண்டுகோலாக அமைய வேண்டும் ? என்ற கேள்விகள் எல்லோருக்கும் எழுகின்றது . வங்காளதேசத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வெகுவிரைவில் டென்மார்க்கையும் , சிங்கப்பூரையும் விஞ்சிவிடும் என்றும் , தனிநபர் உள்நாட்டு உற்பத்தியின் அளவானது இந்தியாவைவிட அதிகமாக உள்ளது எனவும் சர்வதேச நாணய நிதியம் ஆருடம் உரைத்தது . வங்காளதேச அரசின் அறிக்கையின்படி கடந்த பத்தாண்டுகளில் அதன் உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 6.6% என்ற அளவில் உள்ளது . குறைந்த கூலிக்கான தொழிலாளர்களின் கடும் உழைப்பால் அபரிமிதமான இலாபம் ஈட்டிவரும் ஆயத்த ஆடை உற்பத்தியானது உலகளாவிய சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படுவதைக் கொண்டு இந்த வளர்ச்சி காட்டப

புவிக் கோளத்தைப் போர்க்களமாக மாற்றி வரும் ஏகாதிபத்தியப் போர் வெறியர்கள்!

  சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முதன்மை வழக்குரைஞர் , இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் பாதுகாப்புத் துறை செயலர் யோவவ் கல்லண்ட் இருவர் மீதும் போர் குற்றங்களை செய்ததாகக் குற்றம் சாட்டினார். அதற்கு எதிராக ஏகாதிபத்தியப் போர் குற்றவாளிகள் அனைவரும் மிகப்பெரிய அளவில் எதிர்ப்பு குரல் எழுப்பியுள்ளனர். அமெரிக்க தலைவர் ஜோ பைடன் , அமெரிக்கச் செயலாளர் ஆண்டனி பிலிங்கன் ஆகிய இருவரும் ஃபாசிஸ்ட் குடியரசுவாதிகளான மைக் ஜான்சன் , லின்ட்சே கிரஹாம் ஆகியோருடன் இணைந்து கொண்டு சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தைக் குற்றம் சுமத்தி உள்ளனர் ; மேலும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் எந்த விதமான தண்டனைகளும் இல்லாமல் போர் குற்றம் புரிய உரிமை இருப்பதாக சவால் விடுகின்றனர். 20.5.2024-- அன்று அமெரிக்க அதிபர் ஜோபைடன் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் நடவடிக்கை குறித்து , " சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் இஸ்ரேலிய தலைவர்களைக் கைது செய்ய ' அரெஸ்ட் வாரண்ட்டுக்கு ' விண்ணப்பித்திருப்பதை நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம்" என்று அறிவித்தார். மேலும் அவர் முட்டாள்தனமாக , " இஸ்ரேல் பொதுமக்கள

காசாவின் மீதான இஸ்ரேலின் போரைக் கண்டித்து ஜெர்மனியில் மாணவர்களின் போராட்டங்கள்!

  காசாவில் வாழும் பாலஸ்தீன மக்களின் மீதான இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனமான தாக்குதலைக் கண்டித்து அமெரிக்காவில் கொலம்பியா, ஹார்வார்ட், ஸ்தான்போர்ட், கலிபோர்னியா, நியூயார்க், ஆகிய பல்கலைக்கழக மாணவர்களும், இங்கிலாந்தில் மான்செஸ்டர், இலண்டன் பல்கலைக்கழக மாணவர்களும், பிரான்சில் பாரிஸ்-சோர்போனே பல்கலைக்கழக மாணவர்களும் கடுமையான போராட்டங்களை நடத்தினார்கள். அதே போல ஜெர்மனியிலும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். ஜெர்மனியில் நடந்த மாணவர்களின் போராட்டம் பற்றி இங்கு பார்ப்போம். “35 ஆயிரம் மாணவர்களை கொண்ட----- இளங்கலை முதுகலை மற்றும் ஆராய்ச்சி துறைகள் என 150 துறைகள் , உலகின் தரம் நிறைந்த பல பல்கலைக்கழகங்களுடன் இணைந்து செயல்படும் பெர்லினின் ஃபிரீ யுனிவர்சிட்டி ( Freie Universität Berlin) இன்று புதுவிதமான காட்சியை கொண்டுள்ளது---- "கல்வி நிலையங்களில் மாணவர்களின் சுதந்திரம் மிகப்பெரிய அச்சுறுத்தலுக்கு உள்ளாகி உள்ளது ; இந்த அச்சுறுத்தல் காசாவின் மீதான இஸ்ரேலின் போர் ஆரம்பித்ததில் இருந்து இங்கு உருவாகியுள்ளது" என்று ஜெர்மனியின் பெர்லின் ஃப்ரீ பல்கலைக்கழகத்தின் இளங்கலை மாணவியான செசிலியா கூ