Skip to main content

Posts

Showing posts from December, 2019

நவம்பர் சோசலிசப் புரட்சியின் படிப்பினையிலிருந்து கற்போம்!

ரசியாவில் ஜார் மன்னனைத் தூக்கி எறிந்த 1917 பிப்ரவரி முதலாளியப் புரட்சிக்குப் பிறகு   லெனின் தனது புகழ் பெற்ற   ஏப்ரல் ஆய்வுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்: ”ரசியாவில் இப்போதுள்ள சூழ்நிலையின் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த நாடு புரட்சியின் முதல் கட்டத்திலிருந்து இரண்டாவது கட்டத்துக்குச் சென்று கொண்டிருக்கிறது என்பதாகும். முதல் கட்டம், பாட்டாளி வர்க்கத்துக்குப் போதுமான வர்க்க உணர்வும் அமைப்பும் இல்லாமையினால் முதலாளி வர்க்கத்தின் கைகளில் அதிகாரத்தை வழங்கியது. இரண்டாவது கட்டம், பாட்டாளி வர்க்கத்தின் கையிலும் உழவர் வர்க்கத்தின் மிகவும் வறிய பிரிவினரின் கையிலும் அதிகாரத்தை          வழங்க வேண்டும்.” (லெனின்   தொகுப்பு நூல்.24 பக்.22 ) ஓராண்டுக்குப் பிறகு நவம்பர் புரட்சியைத் திரும்பிப் பார்த்த லெனின் பின்வருமாறு எழுதினார்:   “ நமது கருத்தின் சரியான தன்மையை புரட்சி மேற்கொண்ட பாதை உறுதி செய்திருக்கிறது. முதலாவது, ’அனைத்து’ உழவர்களையும் ஒருங்கிணைத்து முடியரசுக்கும் நிலவுடைமையாளர்களுக்கும் மத்தியகாலத்தன்மைக்கும் எதிராக நடத்திய போராட்டம்; இந்த அளவுக்கு

உலகு தழுவிய அளவில் முதலாளிய நெருக்கடியும் மக்களின் போராட்டங்களும்!

தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்ற கொள்கையானது பின் தங்கிய நாடுக ளிலும் முதலாளிய உற்பத்திமுறை மிக வேகமாக வளர வழி வகுத்துள்ளது. உலகத்திலுள்ள எந்த நாடும் உலக முதலாளியத்திலிருந்து   துண்டித்துத் தனியே செயல்பட முடியாத நிலையை இது உருவாக்கியுள்ளது. இந்த மாற்றம் தவிர்க்க இயலாதபடி முதலாளிய சமூகத்திற்கே உரிய நெருக்கடிகளான சமூக ஏற்றத்தாழ்வு, வேலையின்மை,   வறுமை என அனைத்தையும் உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் தோற்றுவித்துள்ளது. இந்த நெருக்கடிகளின் காரணமாக உழைக்கும் மக்களின் போராட்டங்கள் உலகெங்கும் பல நாடுகளில் வெடிக்கின்றன. தற்சமயம், அத்தகைய போராட்டங்கள்   சிலி, லெபனான், ஈக்குவடார், ஈராக், அமெரிக்கா   ஆகிய   நாடுகளில் வெடித்து அந்த நாடுகளின் அரசுகளை முடக்கும் நிலைக்குக் கொண்டு சென்றுள்ளன. சிலி சிலி அரசானது மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள் என சாதாரண மக்கள் அதிகமாகப் பயன்படுத்தும் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களை வெகுவாக உயர்த்தியது. அதனால் கோபமடைந்த மாணவர்களும் இளைஞர்களும் மக்களும் அந்த நாட்டின் தலைநகரான சான்தியாகோ நகரில் போராட்டத்தில் இறங்கினர். போராட்டம் அடுத்த சில மணி நேரங்களில் நா

சபரிமலை தீர்ப்பும் கேரள அரசாங்கத்தின் தவறான அணுகுமுறைகளும்!

       சபரி மலையில் உள்ள ஐயப்பன் கோவிலுக்கு 10 வயது முதல் 50 வயது வரையிலுமான பெண்கள் செல்வதற்கு இருந்த தடையை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பின் மூலம் நீக்கியது.        ஆனால் அதற்கு எதிராக இந்துத்துவாப் பரிவாரங்களும் ஆ ணா திக்க மனப்பான்மை கொண்டவர்களும் பிற்போக்கு சக்திகளும் போராட்டம் நடத்தின. கோவிலுக்குச் சென்ற பெண்களை வலுக்கட்டாயமாகப் போராட்டக்காரர்கள் தடுத்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையில் உள்ள கேரள அரசாங்கம் போராட்டக்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கைளை எடுத்தது. அரசாங்கம் மத நம்பிக்கையில் தலையிடுவதாகக் கூறி போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தை அரசாங்கத்திற்கு எதிராகத் திருப்பினர். பா.ஜ.க. மட்டுமல்லாமல் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் அடுத்து வரவிருந்த பாராளுமன்றத் தேர்தலில் ஆதாயம் பெறுவதற்காக இந்தப் போராட்டத்தையும் ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டன. அதில் வெற்றியும் பெற்றன. பாராளுமன்றத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி படுதோல்வி   அடைய இதுவும் ஒரு காரணமாக அமைந்தது .        இந்த நிலையில் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பை மறு ஆய்வு செய்யக் கோரி தாக்கல் செய்யப

தெலுங்கானா தொழிலாளர்களின் போராட்டமும் அரசின் தொழிலாளர் விரோதப்போக்கும்!

தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களின் வீரியமிக்க வேலைநிறுத்தப் போராட்டம் அரசை ஸ்தம்பிக்க வைத்தது. ஒட்டுமொத்தமாக 48,000 தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் பங்கெடுத்தனர். போக்குவரத்துத் தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பத்து போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டு நடவடிக்கைக் குழுவை ( JOINT ACTION COMMITTEE ) அமைத்து அதன் தலைமையில் போராட்டத்தை ஒருங்கிணைத்திருந்தன. தெலுங்கானா போக்குவரத்துக் கழகமானது அரசின் அங்கமாக இல்லாமல் தன்னாட்சி பெற்ற தனியான அமைப்பாக உள்ளதால் அரசு ஊழியர்களுக்கு இருக்கும் எந்தவித நலத்திட்டங்களும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, போக்குவரத்துக் கழகத்தை அரசுடன் இணைக்க வேண்டும், அதன் மூலம் போக்குவரத்துத் தொழிலாளர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளிட்டு மொத்தமாக 26 கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் போராடி வந்தனர். 2017 ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும், பெண் ஊழியர்களின் வேலையை இரவு 9 மணிக்கு மேல் நீட்டிக்ககூடாது, அரசு ஊழியர்களுக்கு இணையான மகப்பேறு மருத்துவ

இந்தியப் பொருளாதார நெருக்கடியும் அதற்கான தீர்வும்!

     இந்திய ஒன்றியம் இன்று மீள முடியாத பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக் கொண்டுள்ளது. இந்த ஆண்டின் (2019) செப்டம்பர் மாதம் முடிவுற்ற காலாண்டில் நாட்டின் மொத்த உற்பத்தி   4.5% என்ற அளவுக்கு வீழ்ச்சி அடைந்துள்ளது. இது கடந்த இருபத்தாறு காலாண்டுகளில், அதாவது ஆறரை ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் குறைவான வளர்ச்சியாகும்.      மேலும் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதாரமாக விளங்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருள்கள், உரம், உருக்கு, சிமெண்டு, மின்சாரம் ஆகிய எட்டு முக்கியமான உள்கட்டமைப்புத் துறைகளின் வளர்ச்சி கடந்த செப்டம்பர் மாதத்தில் 5.2% ஆகக் குறைந்துள்ளது. இது ஐம்பத்திரண்டு மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டுள்ள பெரும் பின்னடைவாகும்.      மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் காய்கறிகள், பழங்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டுள்ள பிஸ்கட் போன்ற நுகர்வுப் பொருள்கள், குளிர் பானங்கள், இறைச்சி போன்ற நுகர்வுப் பொருள்களின் உற்பத்தி வளர்ச்சி   செப்டம்பர் மாதம் 3.9% ஆக வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கிராமப் புறங்களில் நுகர்வுப் பொருள்களின்