Skip to main content

Posts

Showing posts from February, 2026

தேர்தல் - ஐந்து வருடக் குத்தகைக்கான ஏலம்!

தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் வரப் போகின்றது. ஆளும் கட்சியான திமுகவும் எதிர்க் கட்சியான அதிமுகவும் பெரும்பான்மையான மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சி அமைப்பதற்காக போட்டி போட்டுக் கொண்டு மக்களுக்கான சலுகைகளை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. ஆட்சியில் உள்ள திமுக ஏற்கனவே 1.3 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதந்தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது; அரசு பள்ளிகளில் பயின்று பிறகு கல்லூரிகளில் சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் மாதம் தோறும் ரூ.1000 வழங்கி வருகிறது. மேலும் மகளிருக்கு இலவசமாக நகரப் பேருந்துப் பயணச் சலுகைகளை வழங்கி வருகிறது; பொங்கல் பரிசாக ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் 3000 ரூபாயை தைப் பொங்கலின்போது வழங்கியது. போதாக்குறைக்கு மகளிர் உரிமைத் தொகையில் மூன்று மாதத் தொகையான 3000ரூபாயை முன் கூட்டி வழங்குவதுடன், அத்தோடு கோடைகால சிறப்புத் தொகையாக 2000 ரூபாயையும் சேர்த்து 5000 ரூபாயை மகளிர் உரிமைத்தொகையாக இந்த மாதம் வழங்கி மகளிரைத் திக்குமுக்காட வைத்துள்ளது. இவை அனைத்தும் தேர்தலில் வாக்குகளாக மாறி தன்னை வெற்றி பெறச் செய்து மீண்டும் ஆட்சிக் கட்...

பொருளாதாரத் தடைகளால் மக்களைக் கொன்று வரும் ஏகாதிபத்தியங்கள்!

2012-- ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை போர்களாலும் மோதல்களாலும் வருடத் திற்கு 5 லட்சம் சாதாரண குடிமக்களின் உயிர்கள் பறிபோனதாகக் கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் இதையும் விட அதிகமாகவே பொருளாதாரத் தடையால் மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்கப் பல்கலைக்கழகமான பிரவுன் நடத்திய ஒரு ஆய்வு தெளிவுபடுத்தி உள்ளது. இந்தப் பொருளாதாரத் தடைகள் பெரும்பாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தாலும் ஐரோப்பாவாலும் வளரும் நாடுகள் மற்றும் வறுமையில் திணறிக் கொண்டிருக்கும் நாடுகள் மீது திணிக்கப்படுகின்றன.   பேராசிரியர் பிரான்சிஸ்கோ ரோட்ரிக்ஸ் , டாக்டர் சில்வியா ரெண்டான் மற்றும் டாக்டர் மார்க் வெய்ஸ்ப்ரோட் ஆகியவர்களால் நடத்தப்பட்ட , " சர்வதேசப் பொருளாதாரத் தடைகளால் பல்வேறு நாடுகளில் ஏற்படும் ' குறிப்பான வயது மரணங்கள் '--- பற்றிய ஆய்வு" 2025-- ஆம் ஆண்டு ' த லேண்ட்செட் குளோபல் ஹெல்த் ' ( The Lancet Global Health ) இதழில் தனது அறிக்கையை வெளியிட்டது.   இந்த ஆய்வு 2012 ஆம் ஆண்டிலிருந்து 2021 ஆம் ஆண்டு வரை ஒரு வருடத்தில் சராசரியாக பொருளாதார நடவடிக்கைகளால் 5, 64, 258 மரணங்கள் ஏற்பட்...

வரவு - செலவுத்திட்டம் 2026-27 யாருடைய நலன்களுக்கானது?

பிப்ரவரி 1- ந் தேதி பாராளுமன்றத்தில் 2026 - 27 க்கான வரவு செலவுத் திட்டத்தை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார் . இந்த நிதி நிலை அறிக்கையை '140 கோடி இந்தியர்களின் விருப்பங்களை பிரதிபலிக்கும் வரலாற்று பட்ஜெட் ' எனப் பாராட்டியுள்ளார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி . உண்மையில் இந்த நிதிநிலை அறிக்கை அவ்வாறுதான் அமைந்துள்ளதா ?   இந்த நிதிநிலை அறிக்கையை முதலாளிகளின் அனைத்து அமைப்புகளும் பாராட்டி வரவேற்றுள்ளன என்பது உண்மைதான் . ஆனால் இதைக் குறை கூறி குறு , சிறு , நடுத்தர முதலாளிகள் விமர்சித்துள்ளனர் என்பதும் , விவசாயிகளின் அமைப்புகள் கடுமையாக விமர்சித்துள்ளன என்பதும் உண்மை .   இவை உணர்த்தும் உண்மை என்னவென்றால் உண்மையில் இந்த நிதிநிலை அறிக்கை , பிரதமர் மோடி கூறுவது போல் , 140 கோடி இந்தியர்களின் விருப்பங்களைப் பிரதிபலிக்கவில்லை என்பதும் பெரும் குழுமங்களின் ( கார்ப்பரேட் ) விருப்பங்களையே பிரதிபலிக்கின்றன என்பதும்தான் உண்மை .   விவசாயத் தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வ...