முதலாளிகளின் நலன்களுக்காக விவசாயிகளின் நலன்களைப் பலியிடும் மோடியின் அமெரிக்க-இந்திய வர்த்தக ஒப்பந்தம்!
6.02.26- அன்று அறிவிக்கப்பட்ட இந்தியா அமெரிக்கா வணிக ஒப்பந்தம் இந்திய விவசாயத்தை ப் பெரிதும் பாதிக்கும் என்ற பெரும் அச்சத்தை இந்திய விவசாயிகளுக்கு ஏற்படுத்தி உள்ளது. ஏனென்றால் இந்த ஒப்பந்தம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியாகும் ஜவுளி , ஆயத்த ஆடைகள் , தோல் பொருட்கள் , காலணிகள் , பிளாஸ்டிக் , ரப்பர் , கரிம வேதியியல் பொருள்கள் மற்றும் குறிப்பிட்ட இயந்திரங்கள் ஆகியவற்றுக்கு அமெரிக்கா 18% வரி விதிக்கும் ; ஆனால் இந்தியாவிற்கு இறக்குமதியாகும் அமெரிக்க த் தொழில்துறை பொருள்கள் , உணவு மற்றும் விவசாய ப் பொருள்களுக்கு மிகவும் குறைவான அளவு அல்லது 0% வரி முதலிய பல சலுகைகளையும் நம் நாடு அளிக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெளிவாக உறுதியாக அறிவித்துள்ளார். மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி இந்தியா ஐந்து ஆண்டுகளில் 500 பில்லியன் டாலர்களுக்கு அமெரிக்க பொருள்களை வாங்க ஒப்புக் கொண்டுள்ளது. ஆனால் , அமெரிக்கா அதிபர் இந்த ஒப்பந்தத்தை அறிவித்த 40 நிமிடங்கள் கழித்து மோடி இந்த ஒப்பந்தத்தை க் கொண்டாடி இது இந்தியாவிற்கான புதிய வாய்ப்புகளையும் , இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும்...