Skip to main content

Posts

Showing posts from May, 2026

பற்றிப் படரும் தொழிலாளர் போராட்டங்கள்– விடுதலையை நோக்கி!

  தொழிலாளி வர்க்கம் எட்டு மணி நேர வேலைக்கான உரிமையை நிலை நாட்டி 140 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. ஆனால் , இன்று தொழிலாளர்களின் நிலைமைகளோ 200 ஆண்டுகளுக்கு பின்னோக்கி சென்று கொண்டிருக்கின்றது. ஏகாதிபத்தியங்கள் தங்களுடைய நெருக்கடியை தணித்துக் கொள்ள ஒருபுறம் தொழிலாளர்களின் மீதான சுரண்டலை தீவிரப்படுத்தும் அதே வேளையில் , மற்றொருபுறம் சிறிய நாடுகளின் மீது ஆக்கிரமிப்பு யுத்தம் தொடுத்து அங்கிருந்து வளங்களைக் கொள்ளையடித்தும், ஆயுதங்களைக் கொண்டு அந்த நாட்டின் மக்களையும், கட்டமைப்புகளையும் அழித்தொழித்து ம் வருகின்றன. மீண்டும் அந்த நாடுகளில் மறு கட்டமைப்புப் பணிகளைச் செய்வதன் மூலமும் , ஆயுத விற்பனை செய்வதன் மூலமும் இலாபங்களைக் குவித்தும் வருகின்றன. இதற்கு . பாலஸ்தீனம் , வெனிசுலா , ஈரான் , கியூபா ஆகியவை சமீபத்திய உதாரணங்களாகும். ஏகாதிபத்திய சக்திகளில் முக்கிய சக்தியான அமெரிக்காவில் , இந்த ஆக்கிரமிப்புப் போர்களுக்கு எதிராகவும், விலைவாசி உயர்வுகளுக்கு எதிராகவும் ஆயிர க் கணக்கான தொழிலாளர்கள் நாள் தோறும் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெர...