Skip to main content

Posts

Showing posts from July, 2026

சே குவேரா: புரட்சியாளராக இருப்பது என்பதன் பொருள் என்ன?

  " எல்லாவற்றிற்கும் மேல், எப்போதுமே உலகின் எந்த மூலையிலும் ஒருவருக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகத் தீவிரமாகக் கவலைப்படுவது – இதுதான் புரட்சியாளரின் மிக அழகிய பண்பு ஆகும்." - 1 965- ஆம் ஆண்டு தன்னுடைய குழந்தைகளுக்கு சே குவேரா எழுதிய இறுதிக் கடிதம். உலக மக்களால் பெரிதும் அறியப்பட்ட புரட்சியாளர்களில் சேகுவேரா முக்கியமான ஒருவர். சே குவேரா என அழைக்கப்பட்ட அவரின் இயற்பெயர் எர்னெஸ்ட்டோ குவேரா டெ லா செர்னோ ஆகும். அவர் 14.6.1928 இல் அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் , ஐரிஸ் புரட்சியாளரான ஜெர்னெஸ்டோ குவேரா லின்ச்சுக்கும் , அர்ஜென்டினாவின் உறுதியான மார்க்ஸிஸ்ட்டும் தீவிரமான அரசியல் செயல்பாட்டாளருமான செலியா டெ லா செர்னா லோசாவுக்கும் மூத்த மகனாக பிறந்தார். மேல் தட்டு மத்திய வர்க்கத்தில் பிறந்ததால் மிகச்சிறந்த பள்ளிகளின் மேல்படிப்பும் இவருக்கு வாய்த்தன ; ஆஸ்த்துமாவினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த போதிலும் தனது குழந்தைப் பருவத்திலும் இளம் வயதிலும் அவர் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக இருந்தார். இளம் வயதிலேயே இடதுசாரி அரசியலையும் , பலவகைப்பட்ட இலக்கியங்களையும் கவிதைகளையும...