Skip to main content

Posts

Showing posts from August, 2026

அயோத்தி ராமர் கோவில் திருட்டும் ஊழலும்!

  தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காக வரலாற்றைத் திரித்து, மதவெறி சாயம் பூசி , திட்டமிட்டுத் தொடர்ந்து முஸ்லிம்களின் மீது வெறுப்பை அதிகரித்து 1992- ஆம் ஆண்டு டிசம்பர் 6-- ஆம் நாள் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பிற சங் பரிவாரங்களுடன் இணைந்து பிஜேபி இந்துத்துவ சக்திகள் 1528 – 1529 இல் கட்டப்பட்ட பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்டமாக்கின. பிறகு அந்த இடத்தில் ராமருக்குக் கோவில் கட்டப்பட்டது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்ட 22.01.2024 அன்று "இது காலண்டரில் குறிக்கப்பட்ட நாள் மட்டுமல்ல ஒரு புது யுகத்தின் விடியலாகும்" என்று பிரதமர் மோடி பிரகடனம் செய்தார். இந்தியா முழுவதும் பரவலாகப் பல ஆண்டுகளாகப் போராட்டங்களை நடத்திக் கட்டப்பட்டது ராமர் கோவில். இந்தக் கோவிலின் நிர்வாகம் மிகுந்த அதிகாரம் கொண்ட "ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த் ஷேத்ரா ட்ரஸ்ட்" கீழ் உள்ளது. பக்தர்கள் வழங்கிய சிறு தொகை முதல் தங்கம் , வெள்ளி மற்றும் விலையுயர்ந்த நகைகள் , பெரும் தொகை நன்கொடைகளை இது நிர்வகித்து வருகிறது. இந்த ட்ரஸ்ட் பிரதமர் மோடியால் நேரடியாக நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு அவர...