09.03.2026 அன்று உலக அளவில் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 100 டாலர்களுக்கும் அதிகமாக அதாவது 110 அமெரிக்க டாலர்களாக விலை உயர்ந்தது. மேற்காசியா நாடான இரான் மீதான அராஜகமான அமெரிக்க மேலாதிக்கத்தின் போருக்கு முன் , ஒரு பேரலுக்கு 69 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை , மிகச் சில நாட்களிலேயே --- ஒரு வாரத்திலேயே மிக அதிகமான அளவில் விலை ஏறியது. உண்மையில் இந்த விலை ஏற்றம் ஹொர்முஸ் நீரிணை இரானால் மூடப்பட்டதால் ஏற்பட்டது என்பதைவிட எண்ணெய் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற எதிர்பார்ப்பினாலேயே ஏற்பட்டது. இந்த விலை உயர்வு 1973- இல் ஏற்பட்ட விலை உயர்வுடன் ஒப்பிட்டால் சற்றும் வித்தியாசம் இல்லாதது ; அப்போதும் பற்றாக்குறையால் விலை உயரவில்லை --- ஆனால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பினால் பல மடங்கு விலை ஏற்றப்பட்டதால் ஏற்பட்டதாகும் ; அதேபோல 2008---2022 வரையிலான காலத்தில் ஏற்பட்ட விலை உயர்வுடன் ஒப்பிட்டால் இது வேறுபட்டதாகும். இந்த இரண்டு விலை உயர்வுகளும் அவற்றின் இயல்புப்படி குறுகிய காலமே இருந்தன:-- 2008 ஆம் ஆண்டு விலை உயர்வு எதிர்பாராத விதமாக சீனாவின் தேவை அதிகரித்ததாலும் , மற...
சோசலிசத் தொழிலாளர் இயக்கத்தின் குரல்