Skip to main content

ஏகாதிபத்தியம், கச்சா எண்ணை விலைகள் மற்றும் உலகப் பொருளாதாரம்!

 

09.03.2026 அன்று உலக அளவில் கச்சா எண்ணெய் ஒரு பேரலுக்கு 100 டாலர்களுக்கும் அதிகமாக அதாவது 110 அமெரிக்க டாலர்களாக விலை உயர்ந்தது. மேற்காசியா நாடான இரான் மீதான அராஜகமான அமெரிக்க மேலாதிக்கத்தின் போருக்கு முன், ஒரு பேரலுக்கு 69 டாலர்களாக இருந்த கச்சா எண்ணெய் விலை, மிகச் சில நாட்களிலேயே --- ஒரு வாரத்திலேயே மிக அதிகமான அளவில் விலை ஏறியது. உண்மையில் இந்த விலை ஏற்றம் ஹொர்முஸ் நீரிணை இரானால் மூடப்பட்டதால் ஏற்பட்டது என்பதைவிட எண்ணெய் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற எதிர்பார்ப்பினாலேயே ஏற்பட்டது. இந்த விலை உயர்வு 1973-இல் ஏற்பட்ட விலை உயர்வுடன் ஒப்பிட்டால் சற்றும் வித்தியாசம் இல்லாதது; அப்போதும் பற்றாக்குறையால் விலை உயரவில்லை --- ஆனால் கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் கூட்டமைப்பினால் பல மடங்கு விலை ஏற்றப்பட்டதால் ஏற்பட்டதாகும்; அதேபோல 2008---2022 வரையிலான காலத்தில் ஏற்பட்ட விலை உயர்வுடன் ஒப்பிட்டால் இது வேறுபட்டதாகும். 

இந்த இரண்டு விலை உயர்வுகளும் அவற்றின் இயல்புப்படி குறுகிய காலமே இருந்தன:-- 2008 ஆம் ஆண்டு விலை உயர்வு எதிர்பாராத விதமாக சீனாவின் தேவை அதிகரித்ததாலும், மற்றும் நைஜீரியா மற்றும் மேற்காசியாவில் இருந்து எண்ணெய் வருவதில் ஏற்பட்ட பிரச்சினைகளால் ஏற்பட்டது---ஆனால் இவை நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2022-ஆம் ஆண்டின் விலை உயர்வு, ரஷ்யா-- உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவின் மீது, மேற்கு நாடுகளின் பொருளாதாரத் தடைகளால் உருவாக்கப்பட்டது; ஆனால் இந்தத் தடைகளையும் மீறி ரஷ்யா தன்னுடைய எண்ணெய் வழங்கலை அதிகரித்துக் கொண்டது. மேலும் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளுக்கு, ரஷ்யாவில் இருந்து வரும் எண்ணெய்க்கு மாற்றாக, அதிக விலையில் என்றாலும் கூட தடையின்றி எண்ணெய் கொடுத்தது. எப்படி என்றாலும் இப்போது உள்ள விலை உயர்வு அமெரிக்கா இஸ்ரேலிய அராஜகத்திற்கு எதிரான இரானின் எதிர்வினையாகும்; இது இந்தப் போர் முடியும் வரை நீடிக்கும்; ஆனால் இந்தப் போர் சமீபத்தில் முடியும் என்பது போல இல்லை; ஏனென்றால், இரானில் இருந்து மட்டுமல்லாமல் பல நாடுகளில் இருந்தும் வரும் எண்ணெய் ஹொர்முஸ் நீரிணை வழியாகவே வர வேண்டும்; மேலும் இது ரஷ்யாவில் இருந்து வரும் மொத்த எண்ணெய் அளவை விட இரண்டு மடங்காகும்; மேலும் இந்த நிலைமையின் தீவிரத்தை குறைப்பதை விட்டுவிட்டு, டிரம்ப் இந்த விலை ஏற்றத்தை இந்தப் போரை நடத்துவதற்கான காரணங்களுடன் ஒப்பிடும் போது இது "மிகச் சிறியதே" என்று நியாயமான காரணங்களற்ற இந்த மேலாதிக்கப்போரை-- தனது ஆணவப்போக்கை நியாயப்படுத்துகிறார். 

சிறிது காலமே கச்சா எண்ணெய் விலை உயர்வு தொடர்ந்தால் கூட உலகப் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். இது நேரடியாக ஆற்றல் உற்பத்தி பொருள்களை வாங்குபவர்களுக்கு மட்டுமல்லாமல், குறிப்பாக எண்ணெய் சார்ந்த அனைத்து பொருட்கள், சேவைகள் உற்பத்தியிலும், இதைத் தொடர்ந்து இந்த சேவைகள் மற்றும் பொருட்களைச் சார்ந்து உற்பத்தியாகும் வேறு பொருட்கள், வேறு சேவைகள் அனைத்தின் மூலமாகவும் விலையேற்றத்தை உண்டாக்கி பணவீக்கத்தை ஏற்படுத்தும். மேலும், கச்சா எண்ணெய் விலையேற்றத்தால் உரங்களின் விலை அதிகரித்து, உணவு தானியங்களின் உற்பத்தி விலையை அதிகரிக்கும்; அதனால் (உணவுத்தானிய உற்பத்தியாளரின் லாபம் குறையாமல் இருக்கும் நிலையில்) உணவு தானியங்களின் விலை அதிகரிக்கும். இவை அனைத்தும் நீங்கலாக, உணவு தானியங்கள் மற்றும் பிற பொருட்களின் போக்குவரத்துச் செலவு அதிகரித்து இவற்றின் விலை மேலும் அதிகமாகும்.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் கற்பனை செய்ய இயலாத அளவுக்கு லாபம் அடைபவர்கள், உடனடியாக தங்களது லாபத்தை கணிசமான அளவில் வங்கிகளில் சேமிப்பார்கள்; இது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான நேரடியான தேவையை ஏற்படுத்தாது; ஆனால் எதார்த்தத்தில் விலை ஏற்றத்தால் --- பண வீக்கத்தால் நஷ்டமடைந்தவர்கள் பொருட்களுக்கான தங்களது தேவைகளையும் சேவைகளையும் மொத்தத்தில் குறைத்து விடுவார்கள்; இதனால் உலக அளவில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான தேவை குறைந்து உலகப் பொருளாதாரத்தில் மந்த நிலையை உருவாக்கும்; எனவே இது உலகப் பொருளாதாரத்தில் பின்னடைவை ஏற்படுத்தும்; இதனால் கச்சா எண்ணெய் விலை உயர்வால் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கும் இப்போதுள்ள மந்த நிலையையே மீண்டும் குறிப்பாக அடைவோம். 

கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்களால், அவர்களின் ஒருங்கிணைந்த செயலால் மட்டுமே விலை உயர்ந்துள்ளது; கச்சா எண்ணெய் வரத்து குறைவானதால் அல்ல; இதனால் பாதிக்கப்பட்ட நாடுகளின் அரசாங்கங்கள் விரிவாக்க நிதிக் கொள்கை (Fiscal Policy) மற்றும் நாணயக் கொள்கை (Monetary Policy) ஆகியவற்றைப் பின்பற்றி ஓட்டு மொத்தத் தேவையை கீழே விழாமல் காப்பாற்றி பொருளாதார மந்த நிலையை முறியடிக்க முயற்சிக்கும். (1970-இன் துவக்கத்தில் அரசாங்கங்கள் உண்மையில் இப்படி செய்யவில்லை). இந்த விலை உயர்வு கச்சா எண்ணெயின் குறைவான வரத்தின் காரணமாக என்றால், இத்தகைய முயற்சிகள் பயன் அளிக்காது; ஆனால் உண்மையில் இத்தகைய நிலையில் மந்த நிலைமை தவிர்க்க முடியாதது ஆகும்; மேலும் இது உண்மையில் கச்சா எண்ணெயின் குறைவான வரத்தை எதிர்கொள்ளும் ஒரு வழியாகும். எனவே கச்சா எண்ணையின் தொடர்ச்சியான விலை உயர்வின் விளைவாக, பண வீக்கத்துடன் இணைந்த மந்த நிலை உலகப் பொருளாதாரத்தில் உருவாகும்.

அனைத்து நாடுகளும் (கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் கூட இதை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்த நாடுகள் உட்பட) இதே நிலைமையை அடையும். தெற்கு உலக நாடுகள் பின்வரும் காரணங்களால் மேலும் மோசமான நிலைமைகளைச் சந்திக்கும்.

கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் நடப்புக் கணக்கில் பற்றாக்குறை ஏற்படும். குறிப்பான இந்த விஷயத்தை மேலே உள்ள விவாதத்தில் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை; அதிகரித்த இந்த பற்றாக்குறையை ஈடுகட்டுவதில் பெரிதாக பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படாது என்று நாம் கருதிக் கொண்டோம்; உதாரணமாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் அதிகரித்த வங்கி இருப்புகளை, கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளின் பொருளாதாரப் பற்றாக்குறையைச் சரி செய்ய இந்த வங்கிகள் பயன்படுத்தும். ஆனால் வடக்கு உலக நாடுகளை போல அல்லாமல், தெற்கு உலக நாடுகள் இந்த வங்கிகளின் பார்வையில் அல்லது சர்வதேச நிதி நிறுவனங்களின் பார்வையில் கடன் பெறத் தகுதியானவை என்று கருதப்படுவதில்லை; இந்த நிலைமையில் இந்த நாடுகள் அதிகரித்துள்ள தங்களின் பொருளாதாரப் பற்றாக்குறையை ஈடுகட்டுவது மிகச் சிரமமான செயலாகும்; இதனால் அவர்களது நாட்டில் உள்ள பணத்தின் மதிப்பு குறையும்; வெளிநாடுகளில் இருந்து அந்த நாடுகள் மிகக் கடுமையான நிபந்தனைகளின் அடிப்படையில், மிக மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் அல்லது தங்களது நாடுகளின் கனிம வளங்களை, கடன் கொடுக்கும் அயல்நாட்டுக்கு அடமானம் வைத்தல் அல்லது இதைப் போன்ற நடவடிக்கைகளின் மூலம் அதிகக் கடன் வாங்க நேரும். இத்தகைய நிலைமையில் பணவீக்கம் மேலும் அதிகமாக கடுமையாக அதிகரிக்கும்---- இது கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததால் அல்லது வீழ்ச்சியால் மட்டுமல்ல--- பண மதிப்பு வீழ்ச்சியால் இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருள்களின் விலைகள் அதிகரிப்பால் இது ஏற்படும். 

இந்த நிலைமையில் பொருளாதார மந்தநிலை மிகக் கடுமையானதாக இருக்கும். பண வீக்கத்த்தின் காரணமாக அதிகரித்த விலையால் உள்நாட்டு மக்கள் தங்களுக்குத் தேவையான பொருட்கள் மற்றும் சேவைகள் நுகர்வை குறைத்ததால் மட்டுமல்லாமல், தங்களது நாட்டுக்குக் கடன் கொடுத்தவர்களின் நிபந்தனைகளின்படி மிகக் கடுமையான சிக்கன நடவடிக்கைகளும் அங்கு பொருளாதார மந்த நிலையை தீவிரமாக்கும். இதனால் மக்களின் வாழ்வு மிகக் கடுமையானதாகவும் கொடுமையாகவும் இருக்கும். எனவே அனைத்து நாடுகளும் முழுவதும் நேர்மையற்ற சட்டத்திற்கு விரோதமான இந்தப் போரை, உடனடியாக நிறுத்த அமெரிக்க ஏகாதிபத்தியத்தியத்தின் மீது உறுதியான அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசர நடவடிக்கையாக உள்ளது.

 

தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையால் இந்தியா மிக அதிகமாக பாதிக்கப்படும். ஹொர்முஸ் நீரிணை வழியாக வரும் கச்சா எண்ணெயில் 84% ஆசிய நாடுகளான சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியாவுக்கு வருகிறது; இதனால் இந்தநீரினையை மூடுவது உலக அளவிலான கச்சா எண்ணெய் விலை மற்றும் பணப் பரிவர்த்தனைகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்; அத்துடன், இந்த நாடுகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் எண்ணெய் வந்து சேர்வதிலும் ஏராளமான சிரமங்கள் இருக்கும்; முக்கியமாக இந்தியா இதனால் மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும். டிரம்ப், கச்சா எண்ணெய் விலை உயர்வால் உண்டாகும் பிரச்சனைகளை தவிர்ப்பதற்காக, இந்தியா, ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை "அனுமதித்துள்ளார்". (ஏறக்குறைய 80 ஆண்டுகள் சுதந்திரத்துக்குப் பிறகு, இந்தியா எந்த நாட்டில் இருந்து எண்ணெய் வாங்குவது என்பதை தான் தீர்மானிக்காமல், காலனிய நாட்டைப் போல டிரம்பின் அனுமதியை ஏற்கும் இன்றைய இந்திய அரசாங்கத்தின் செயல், பிரிட்டிஷ் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்த இந்திய மக்களின் போராட்டத்தை அவமானப்படுத்துவதாகும்.) இந்த "அனுமதியும்" ஒரு மாத காலத்திற்கு மட்டுமே. அதற்குப் பிறகு அமெரிக்கா "அனுமதித்த" கச்சா எண்ணெய் இறக்குமதி நின்று விடும். அதற்குப் பிறகு மேலே விவரித்த நிலை ஏற்படும். ஆகவே அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகியவை இரான் மீது தொடுத்துள்ள போர் குறித்து வலுவாக எதிர்ப்பு காட்டாமல் இந்தியா மௌனம் காப்பது முழுக்க தற்கொலையாகும். 

ஹொர்முஸ் நீரிணையில் கச்சா எண்ணெய் போக்குவரத்தை தடுத்து கச்சா எண்ணெய் விலையை உலகில் உயர்த்துவது இரானின் ராஜதந்திரமாகும்; இதனால் தெற்குலக நாடுகளில் கச்சா எண்ணெயின் விலை உயரும்; அந்த நாடுகள் மிகக் கடுமையான பொருளாதாரப் பிரச்சினைகளை எதிர்கொள்ளும்; ஆகவே இரானின் மீது தொடுக்கப்பட்ட போர் இந்த நாடுகளின் மீதும் தொடுக்கப்பட்ட போர் ஆகும்; ஆகவே இந்த போர் குறித்து அந்த நாடுகள் அலட்சியம் காட்ட முடியாது; ஆகவே அவை இரானின் மீதான போருக்கு உறுதியான எதிர்ப்பை உலக அளவில் காட்ட வேண்டும் என்பதே இரானின் திட்டமாகும். இரானின் ராணுவ அதிகாரிகள் ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 200 டாலர்கள் ஆக அதிகரிக்கும் என்ற கருதுகிறார்கள்; இது உலக மக்களின் முதுகெலும்பை முறிப்பது போன்றதாகும்; ஆகவே, மூன்றாம் உலக நாடுகள் அமெரிக்க-இஸ்ரேலின் அராஜகமான போரை உடனடியாக நிறுத்த வலுவான எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால், இந்த போர் மூன்றாம் உலக நாடுகளின் மக்களை தீவிரமான துன்பத்தில் ஆழ்த்தும். 

அவர்களது மௌனத்துக்கு அவர்கள் கொடுக்கும் விலை அதிகம் என்பது மட்டுமல்ல மிகுந்த தீமையை உருவாக்குவதும் ஆகும். அதிபர் டொனால்ட் டிரம்ப் உருவாக்கிய இந்தப் போரினால் ஏற்பட்டுள்ள பணவீக்கம், விலைவாசி உயர்வு, பொருளாதார மந்த நிலை ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்க மக்களிடம் மிகப்பெரிய அளவில் அவருக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது; ஆகவே நீடித்துக் கொண்டிருக்கும் இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர இரானுக்கு எதிராக அணு ஆயுத தாக்கல் என்னும் கடுமையான நடவடிக்கையை அவர் தீர்மானிக்கலாம்; இதுவரையில் உலகத்தில் அமெரிக்கா மட்டுமே அணு ஆயுதங்களைக் கொண்டு பிற நாட்டைத் தாக்கிய ஒரே நாடாகும். பெரிதும் அறியப்பட்ட அமெரிக்காவின் பொருளாதார வல்லுனரான ஜேம்ஸ் கல்ப்ரைத், குறைந்தபட்சம் மூன்று முறை உள்துறை நிபுணர்கள் அணு ஆயுதத் தாக்குதலுக்கு எதிராக அறிவுரை கூறியதாகத் தெரிவிக்கிறார். (9.03. 2026 நடந்த டெல்ஃப்பி முன்முயற்சி கூட்டம்). மொத்த உலகமும் உறுதியுடன் அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக நின்று, இரானுடனான போருக்கு எதிரான எதிர்ப்பை வெளிப்படையாக, தெளிவாக, உறுதியுடன் அறிவிக்க வேண்டும்; அமெரிக்காவின் சர்வதேச சட்டத்தை மதிக்காத போக்குக்கு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்; இல்லாவிட்டால் அணு ஆயுதத் தாக்குதல் என்ற கொடூரமான செயல் மீண்டும் ஏற்படுவதற்கு உண்மையான சாத்தியப்பாடு உள்ளது. 

ஆங்கிலத்தில்: பேராசிரியர் பிரபாத் பட்நாயக்

தமிழில்:சூர்யா

நன்றி: Monthly Review

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

“சோசலிசப் புரட்சி ஒரு செயல்தந்திரம்” - அ.கா.ஈஸ்வரன் கண்டுபிடித்துள்ள புதிய கோட்பாடு!

MELS இணைய வழிப் பயிலரங்கில் லெனின் எழுதியுள்ள ஏப்ரல் ஆய்வுரைகள் என்ற நூல் பற்றி தோழர். அ.கா.ஈஸ்வரன் அறிமுக உரை ஆற்றியுள்ளார். அந்த உரையில் ஒரு புதிய கோட்பாட்டை அவர் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளார். ஈஸ்வரன் நிறுவ விரும்பும் புதிய கோட்பாடு என்ன? ‘ஒரு நாட்டில் முதலாளிய வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றியிருந்தாலும் அங்கு சோவியத் அதிகாரம் இணையாக நிலவும்போதே சோசலிசப் புரட்சியை நடத்த வேண்டும். இரட்டை ஆட்சிமுறை என்ற பிரத்யேக நிலைமை ரசியாவில் நிலவியதால்தான் லெனின் சோசலிசப் புரட்சி என்ற பிரத்யேகமான செயல்தந்திரத்தை வைத்தார். இந்தியாவில் இரட்டை ஆட்சியும் இல்லை. உழைப்பாளர்களின் சோவியத்தும் இல்லை. சோவியத்தை செயற்கையாக உருவாக்க முடியாது. இரட்டை அதிகார அமைப்பு நிலவாவிட்டால் சோசலிசப் புரட்சி என்ற பிரத்யேகமான செயல்தந்திரத்தை வைக்க முடியாது’ என்பதுதான் அவருடைய புதிய கோட்பாடு. சோசலிசப் புரட்சி பேசுபவர்கள் லெனின் தனது ஆய்வுரைகளில் கூறியுள்ளவற்றைப் புரிந்து கொள்ள இயலாமல் குழம்பிப் போய் மற்றவர்களையும் குழப்புகின்றனர் என்கிறார் அவர். உண்மையில் தானும் குழம்பிப் போய் மற்றவர்களையும் குழப்புவது அவர்தான் என்ப...