Skip to main content

Posts

நமது இலக்கு : அனைவருக்கும் கல்வி! அனைவருக்கும் கண்ணியமான வேலை!

  அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில்   7.5 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க வழி செய்யும் வகையில்   தமிழக சட்டசபையில் அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து ஏகமனதாக கடந்த செப்டம்பர் மாதம் 15ந் தேதி   ஒரு சட்டத்தை நிறைவேற்றின. அந்தச் சட்டம் ஆளுநரின் ஒப்புதலு         க்காக உடனே அனுப்பியும் வைக்கப்பட்டது. ஆனால் ஒரு மாதத்திற்கு   மேல் ஆகியும் அந்தச் சட்டத்திற்கு ஆளுநர் இந்நாள் வரை ஒப்புதல் அளிக்கவில்லை ; இன்னும் மூன்று, நான்கு வாரங்கள் அவகாசம் கேட்டார். இது இந்த நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தையே கேலிக்கு உள்ளாக்கும் செயலாகும் ஆளுநரின் செயலைக் கண்டித்து   எதிர்க் கட்சிகள் அனைத்தும் போராடி வந்தன. ஆளும் கட்சியான அ.தி.மு.க.வோ ஆளுநரின் எதேச்சதிகாரச் செயலைக் கண்டிக்கத் துணிச்சல் இல்லாமல், ஆளுநரின் ஒப்புதல் கிடைக்கும் வரை மருத்துவப் படிப்புக்கான கலந்தாலோசனையை நடத்த மாட்டோம் எனக் கோழைத்தனமாக அறிவித்தது. இந்த நிலையில் திடீரென   நேற்று (29.10.2020) அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 விழுக்காடு ஒதுக்க...

இந்தியாவின் சீனப் பொருள்கள் புறக்கணிப்பும், சீனப்பாதையைப் பின்பற்றுதலும்

சர்வதேச அளவிலான முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடி கோடிக்கணக்கான தொழிலாளர்களை வேலையற்றவர்களாக்கி வீதியில் தள்ளியுள்ளது . வளர்ந்த நாடுகள் , வளரும் நாடுகள் , பின் தங்கிய நாடுகள் என அனைத்தும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவித்து வருகின்றன . கொரானா நோய்ப் பெருந்தொற்றினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலானது முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடியிலிருந்து மக்களைத் திசை திருப்ப வசதியான காரணமாக அமைந்துள்ளது. அரசின் கஜானாவைக் கபளீகரம் செய்தல் , இயற்கை வளங்களைச் சூறையாடல் , தங்களுக்குச் சாதகமாகச் சட்டங்களைத் திருத்தம் செய்து கொள்ளல் , அடித்தட்டு மக்களின் மீது மேலும் மேலும் நெருக்கடிகளை திணித்தல் என இந்த அசாதாரண சூழலை இந்த நாட்டின் ஆளும் முதலாளி வர்க்கம் பயன்படுத்தி வருகிறது . மேலும் , இந்த நெருக்கடிகளுக்குத் தீர்வாக உள்நாட்டுத் தயாரிப்புகள் , உள்ளூர் மக்களுக்கு வேலை எனத் தேசியவாத முழக்கங்களை முன்வைத்து மக்களை ஏமாற்ற முயற்சி செய்து வருகிறது . பின்னலமைப்பு முறையிலான தயாரிப்பு (Network Produts) உற்பத்தியானது தேசியத் தன...