Skip to main content

Posts

சே குவேரா: புரட்சியாளராக இருப்பது என்பதன் பொருள் என்ன?

  " எல்லாவற்றிற்கும் மேல், எப்போதுமே உலகின் எந்த மூலையிலும் ஒருவருக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிக்கு எதிராகத் தீவிரமாகக் கவலைப்படுவது – இதுதான் புரட்சியாளரின் மிக அழகிய பண்பு ஆகும்." - 1 965- ஆம் ஆண்டு தன்னுடைய குழந்தைகளுக்கு சே குவேரா எழுதிய இறுதிக் கடிதம். உலக மக்களால் பெரிதும் அறியப்பட்ட புரட்சியாளர்களில் சேகுவேரா முக்கியமான ஒருவர். சே குவேரா என அழைக்கப்பட்ட அவரின் இயற்பெயர் எர்னெஸ்ட்டோ குவேரா டெ லா செர்னோ ஆகும். அவர் 14.6.1928 இல் அர்ஜென்டினாவின் ரொசாரியோவில் , ஐரிஸ் புரட்சியாளரான ஜெர்னெஸ்டோ குவேரா லின்ச்சுக்கும் , அர்ஜென்டினாவின் உறுதியான மார்க்ஸிஸ்ட்டும் தீவிரமான அரசியல் செயல்பாட்டாளருமான செலியா டெ லா செர்னா லோசாவுக்கும் மூத்த மகனாக பிறந்தார். மேல் தட்டு மத்திய வர்க்கத்தில் பிறந்ததால் மிகச்சிறந்த பள்ளிகளின் மேல்படிப்பும் இவருக்கு வாய்த்தன ; ஆஸ்த்துமாவினால் துன்பப்பட்டுக் கொண்டிருந்த போதிலும் தனது குழந்தைப் பருவத்திலும் இளம் வயதிலும் அவர் மிகச்சிறந்த விளையாட்டு வீரராக இருந்தார். இளம் வயதிலேயே இடதுசாரி அரசியலையும் , பலவகைப்பட்ட இலக்கியங்களையும் கவிதைகளையும...

முதலாளிகளின் இலாப வெறியும், அதிகாரிகளின் மெத்தனமும், பலியாகும் தொழிலாளர்களும்!

  தொழிற்சாலைகள் பல நேரங்களில் தொழிலாளர்களின் உயிரைப் பறிக்கும் கூடங்களாக மாறி வருவது தொடர்கதையாகி வருகிறது . அந்த வரிசையில் , திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே நடந்துள்ள அம்மோனியா வாயு கசிவு விபத்து தமிழகத்தையே உலுக்கியுள்ளது . இலாபத்திற்காக தொழிலாளர்களைப் பலி கொடுக்கும் கார்ப்பரேட் ஆதிக்கத்தின் கொடூர முகத்தை இந்தச் சம்பவம் மீண்டும் வெளிச்சமிட்டுக் காட்டியுள்ளது . ​ திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகில் உள்ள கன்னிகைபேர் என்ற கிராமத்தில் , கடந்த 2011- ஆம் ஆண்டு முதல் செயிண்ட் பீட்டர் & பால் கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் ('St. Peter & Paul Sea Foods Exports ) என்ற ஆலை இயங்கி வருகிறது . கடல் சார்ந்த மீன் , இறால் போன்ற உணவுகளைப் பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் இந்த ஆலையின் வருவாய் ஆண்டிற்கு 250 கோடி ரூபாய் அளவில் உள்ளது . ​ தமிழகத்தில் திருவள்ளூர் மட்டுமல்லாது , கடலூர் , ராமநாதபுரம் , காஞ்சிபுரம் , சென்னை , நாகப்பட்டினம் , தூத்துக்குடி , கன்னியாகுமரி , புதுக்கோட்டை போன்ற கடலோர மற்றும...