Skip to main content

புதிய சட்டத் தொகுப்புகளுக்கான விதிமுறைகளில் 12 மணிநேர வேலைநாள் விதிமுறையை கைவிடுக!

தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்) சட்டம் 2023இல் தமிழக அரசால் கொண்டு வரப்பட்ட 12 மணிநேர வேலைநாள் சட்டத்திருத்ததை தமிழ்நாடு முழுவதும் உள்ள தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பின்னர், தமிழக அரசு இந்தச் சட்டத்தின் மீதான மேல் நடவடிக்கையை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. இது தமிழக தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பிற்கு கிடைத்த வெற்றியாகும். 

எனினும், இந்த சட்டத்திருத்ததை திரும்ப பெறுவதாக தமிழக அரசு அறிவிக்கவில்லை, அடுத்த கட்ட நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதாக மட்டுமே அறிவித்துள்ளது. மீண்டும்  இதன் மீதான மேல் நடவடிக்கைகள் எப்பொழுது வேண்டுமானாலும் முன்னெடுக்கப்படலாம். எனவே இந்த சட்டத்திருத்ததை தமிழக அரசு முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும்.

இது மட்டுமல்லாமல், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த புதிய தொழிலாளர் சட்டங்களுக்கான தமிழக அரசின் விதிமுறைகளில் வேலைநாளை எட்டு மணி நேரம் என்பதற்கு பதிலாக 12 மணி நேரம் என வரையறை செய்துள்ளது. 

இந்திய அரசு தொழிலை இலகுவாக நடத்துதல் என்ற பெயரில் முதலாளி வர்க்கத்தின் சுரண்டல் நலனை பாதுகாக்கும் வண்ணம், தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் சட்டங்களை திருத்தம் செய்து 29 தொழிலாளர் சட்டங்களை நான்கு சட்டத் தொகுப்புகளாக மாற்றியமைத்துள்ளது. இந்தச் சட்டத் தொகுப்புகளுக்கான விதிமுறைகள் அந்தந்த மாநில அரசுகள் வகுக்க வேண்டும். இந்திய அரசின் சட்டத் தொகுப்பில் வேலை நேரத்தை பற்றி கூறும் பொழுது எட்டு மணிநேரம் அல்லது உரிய அரசு (மாநில அரசு) முடிவு செய்து கொள்ளலாம் என கூறியுள்ளது. ஆனால், தமிழக அரசோ தொழிலாளர்களின் நலன் கருதி எட்டு மணிநேர வேலைநாளை விதிமுறைகளில் வகுக்காமல்,  12 மணிநேரம் என வரையறை செய்துள்ளது. இது அப்பட்டமான தொழிலாளர் விரோதப் போக்காகும்.

ஊதிய சட்டத்தொகுப்பு (தமிழ்நாடு) விதிகள் 2022,  பிரிவு 6(2) இல் ஒரு நாளின் வேலை நேரம் 12 மணி நேரம் எனவும், பணியிடப் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணிநிலைமைகள் (தமிழ்நாடு) - 2022 விதிமுறைகள்,  பிரிவு 27இல்  ஒரு நாளின் வேலை நேரத்தை 12 மணி நேரம் எனவும் வரையறை செய்யப்பட்டுள்ளதை தமிழக அரசு திரும்ப பெற வேண்டும்.

தொழிற்சாலைகள் சட்டத் திருத்தங்களை காட்டிலும், மேற்குறிப்பிட்ட புதிய தொழிலாளர் சட்டங்களும் அதற்கான விதிமுறைகளும் தான் தொழிலாளர்கள் மீது கடும் சுமைகளை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது. புதிய வேளாண் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது போன்று தொழிலாளர் விரோதப் போக்கை கொண்டிருக்கும் புதிய தொழிலாளர் சட்டங்களை தமிழகத்தில் அமல்படுத்த முடியாது என் தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.


                                                - சோசலிசத் தொழிலாளர் இயக்கம்

Comments

Post a Comment

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...