Skip to main content

பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான பாசிசத் தாக்குதலைக் கடுமையாக கண்டிக்கிறோம்!


கடந்த மூன்றாம் தேதி செய்தி இணைய முகப்பான(News Portal) நியூஸ் க்ளிக் (News Click) மீது பாஜக அரசின் டெல்லி போலீஸ் தாக்குதலைத் தொடுத்து அதன் அலுவலகத்தையும் செயல்பாட்டையும் முடக்கியுள்ளது. அதனோடு தொடர்புடைய பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், அதில் பணிபுரியும் பணியாளர்கள் என 46 பேரின் வீடுகளில் சோதனை இட்டு, ஆறு மணி நேரங்களுக்கு மேலாக அவர்களை விசாரணைக்கு உட்படுத்தி. அவர்களிடமிருந்து மடிக்கணினி, அலைபேசி ஆகியவற்றைக் கைப்பற்றியுள்ளது; நியூஸ் கிளிக்கின் தலைமை ஆசிரியரான பிரபீர் பர்க்யஸ்தா என்பவரையும் அதன் மனித வளத் துறைத் தலைவரான அமித் சக்கரவர்த்தியையும் UAPA சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளது. நியூஸ் கிளிக்கின் மீது குறிப்பான எந்தக் குற்றச்சாட்டையும் கூறாமல் பொத்தாம்பொதுவாக அது இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற ஒரே காரணத்தைக் கூறி இந்தப் பாசிச நடவடிக்கையில் இறங்கி உள்ளது இந்திய பாஜக அரசு.

அனைத்து முதலாளிய ஊடகங்களையும் பாஜக அரசு தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து தனக்கு ஆதரவாக மாற்றியுள்ளது. இந்த நிலையில் அதனை எதிர்த்து அதனுடைய அநீதிகளையும் தவறுகளையும் மக்கள் விரோதச் செயல்களையும் அம்பலப்படுத்தும் பத்திரிகைகளை அது தனது விரோதிகளாகப் பார்க்கிறது.

அந்தப் பத்திரிகைகள் மீது அடக்கு முறையை ஏவி விடுகிறது. இல்லாவிட்டால் அதனை விலைக்கு வாங்குகிறது. தன்னை விமர்சித்துக் கொண்டிருந்த NDTV ஐ அதானி மூலம் விலைக்கு வாங்கியது. தனது தவறுகளை அம்பலப்படுத்திக் கொண்டிருந்த இந்த The Wire இணையதள இதழின் மீது தாக்குதலைத் தொடுத்தது. இப்பொழுது நியூஸ் கிளிக் இணைய முகப்பின் மீது தனது பாசிசத் தாக்குதலைத் தொடுத்துள்ளது. இப்பொழுது கைது செய்யப்பட்டுள்ள தலைமை ஆசிரியர் பிரபிர் பர்கயஸ்தா 1975இல் இந்திரா காந்தியின் நெருக்கடி நிலையின் போதும் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது அப்பொழுது அவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மாணவராக இருந்தார். பாசிச சக்திகள் எந்த வண்ணத்தில் இருந்தாலும் அவற்றிற்கு உண்மை பேசுபவர்கள் எதிரிகளாகத்தான் தோன்றுவார்கள். இதைத்தான் வரலாறு நமக்கு எடுத்துக்காட்டுகிறது. உண்மை மீதும், நீதி மீதும், ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ள அனைத்து சக்திகளும் ஒன்றிணைந்து பத்திரிகைச் சுதந்திரத்தின் மீதான இந்தப் பாசிசத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டிக்க வேண்டும் எனக் கோருகிறோம்.

                             சோசலிசத் தொழிலாளர் இயக்கம் 

Comments

  1. கட்டுரை நன்று. பாசிச போக்கை கடுமையாக எதிர்க்க வேண்டும்.

    ஜனநாயகம் குழி தோண்டி புகைப்பதை அனைவரும்
    எதிர்க்க வேண்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

விஜய்யின் வருகை – மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுமா?

  1967 தேர்தலுக்குப் பிறகு திமுக, அதிமுக என்ற இரண்டு திராவிடக் கட்சிகளே கடந்த சுமார் அறுபதாண்டுகளாக மாறி மாறி தமிழ் நாட்டை ஆண்டு வந்த நிலையில், அண்மையில் நடந்து முடிந்த பதினேழாவது சட்டமன்றத் தேர்தலில், அந்த இரண்டு கட்சிகளும் அமைத்திருந்த கூட்டணிகளை தனி ஒரு கட்சியாக எதிர்த்து நின்று அவற்றை வீழ்த்தியுள்ளது விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம். தனிக் கட்சியாக ஆட்சி அமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை இடங்களைப் பெறாவிட்டாலும், 107 இடங்களைப் பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக இருக்கின்றது. பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் திமுக கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்று கணித்திருந்த நிலையில், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி எதிர்பாராத ஒன்றாகவும் பெரும் வியப்பை அளிக்கக் கூடியதாகவும் அமைந்துள்ளது. விஜய்யின் தவெக அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நம்பி மக்கள் வாக்களித்திருப்பார்கள் என்றும் சொல்வதற்கில்லை. ஏனென்றால் திமுக தனது ஆட்சிக் காலத்தில் மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண், தவப் புதல்வன் போன்ற திட்டங்களின் மூலம் மாதம்தோறும் பெண்களுக்கும், மாணவர்களுக்கும் நிதி வழங்கி வருகிறது. மீண்டும் ஆட்சிக்...

தொழிலாளர் சட்டத் திருத்தங்களும் தொழிலாளர் வர்க்கமும்!

  இன்போசிஸ் நாராயணமூர்த்தி 19-11-2025 அன்று தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் இந்தியத் தொழிலாளர்கள் வாரத்திற்கு 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியதோடு, மோடி அவர்கள் வாரத்திற்கு 100 மணி நேரம் வேலை செய்வதாகவும் கூறினார். இதற்காக 9 -9 – 6 என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார், சீனாவில் சட்டவிரோதமானது என்று அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை மனமுவந்து பாராட்டியதோடு இந்தியாவில் சட்டப்படியாக இதனை அமல்படுத்த வேண்டும் என்றார். அதன்படி தொழிலாளர்கள் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை நாள் ஒன்றுக்கு 12 மணி நேரம் வீதம், வாரத்திற்கு 6 நாள் என 72 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற திட்டத்தை அவர் முன்மொழிந்துள்ளார். 2021இல் சீன அரசு 12 மணி நேர வேலையை சட்டவிரோதம் என அறிவித்தது. வேலை நேர அதிகரிப்பால் தொழிலாளர்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், பணிச்சுமை காரணமாக தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்துள்ளதாகவும் சீன அரசு தெரிவித்தது. ஆனால், சீனாவில் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து படிப்பினைகளை எடுத்துக் கொள்ளாத இன்போசிஸ் நாராயண மூர்த்தி வேலை நேரத்தை ...

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ரவுடித்தனம்!

  வெனிசுலாவின் தலைவர் நிக்கோலாஸ் மது ரோ  போதைப் பொருளை அமெரிக்காவிற்குக் கடத்தும் கும்பலின் தலைவராக உள்ளார் எனக் கூறியும் அவர் பயங்கரவாதக் கும்பலுக்குத் தலைவராக உள்ளார் எனக் கூறியும் கடந்த சில மாதங்களாகவே அமெரிக்காவின் ட்ரம்ப் வெனிசுலாவைத் தம் கப்பற்படையைக் கொண்டு முற்றுகை இட்டிருந்தார். வெனிசுலாவிலிருந்து வெளியேறும் படகுகளைப் போதைப் பொருட்களைக் கடத்துவதாகக் கூறி விமானப் படைகளைக் கொண்டு தகர்த்து அப்பாவி மக்களைக் கொன்று குவித்து வந்தார். வெனிசுலாவிலிருந்து வெளி நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றிக்கொண்டு செல்லும் கப்பல்களைக் கடற்கொள்ளைக்காரனைப் போலக் கைப்பற்றித் தன் நாட்டிற்குக் கொண்டு சென்றார். இந்த நிலையில் ஜனவரி 3 ந்தேதி அதிகாலை சர்வதேச சட்டங்களையும், ஐக்கிய நாடுகளின் சபையின் விதிகளையும் மீறி, வெனிசுலாவின் இறையாண்மையையும் மீறி அமெரிக்க விமானப்படை அந்த நாட்டுத் தலைநகர் காரகஸ் மீது திடீர்த் தாக்குதலைத் தொடுத்து மதுரோவையும் அவரது மனைவி சிலியா ஃப்ளோரசையும் கைது செய்து அமெரிக்காவிற்குக் கொண்டு சென்றுள்ளது. இந்த அநீதியான செயலை அனைத்து நாடுகளும் கண்டித்துள்ளன. உண்மையில் மதுரோ போதைப் பொரு...