Skip to main content

வெனிசுலாவில் அமெரிக்காவின் தலையீட்டுக்கு எதிரான மக்கள் போராட்டங்கள்

 

வெனிசுவேலாவில் ஜூலை 28, 2024 அன்று நடந்த தேர்தலில் நிகோலஸ் மதுரோ மூன்றாவது முறையாக மீண்டும் குடியரசுத் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டார். அமெரிக்க ஏகாதிபத்தியமும் அதன் ஊதுகுழலான முதலிய ஊடகங்களும் அந்தத் தேர்தல் நேர்மையாக நடக்கவில்லை என்று கூறி அந்தத் தேர்தல் முடிவை எதிர்த்துப் பரப்புரைகளில் ஈடுபட்டன. வெனிசுலாவில் உள்ள அமெரிக்க ஏகாதிபத்திய ஆதராவாளர்கள் மதுரோவின் ஆட்சியைக் கவிழ்க்கும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அவரது ஆட்சியைக் கவிழ்க்க வலது சாரியினர் மேற்கொண்ட சதி முயற்சிகளையும் தேர்தலின் போது அவர்கள் அரங்கேற்றிய வன்முறைகளையும், எதிர்த்து உலகம் முழுவதும் ஏராளமான நகரங்களில் மக்கள் இயக்கங்கள், இடதுசாரிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் ஆகியவை ஆகஸ்ட் 17, 2024 அன்று வெனிசுவேலாவுக்குப் பக்கபலமாக சர்வதேச ஒற்றுமைக்கான செயல்பாட்டு தினத்தில் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர். சர்வதேச மக்கள் கூட்டமைப்பு, ALBA இயக்கங்கள், சிமோன் பொலிவார் நிறுவனம் மற்றும் கரீபிய மக்கள் கூட்டமைப்பு ஆகியவை ஒன்றிணைந்து, ஆகஸ்ட் 9, 2024 அன்று தொடங்கப்பட்ட சர்வதேச ஒற்றுமையின் ஒரு பகுதியான இந்த சர்வதேச செயல் தினம், "ஜனநாயகத்தையும் இறையாண்மையையும் பாதுகாப்போம்! வெனிசுவேலாவின் மீதிருந்து கையை எடு!" என்னும் வெனிசுவேலாவுடனான ஒற்றுமை / ஆதரவு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். 

கினியா மற்றும் கேப் வெர்டேவின் சுதந்திரத்திற்கான ஆப்பிரிக்க கட்சியும் அமில்கார் கேப்ரல் அரசியல் மற்றும் சித்தாந்தத்திற்கான பயிற்சிப் பள்ளியும் 10.8.2024 அன்று உலகின் பலபகுதிகளில் இருக்கும் கினிய மாணவர்களுடன் காணொலிக் காட்சி வழியாக ஒரு மாநாட்டை நடத்தி பொலிவேரியப் புரட்சிக்கு ஒன்றுபட்ட உறுதியான ஆதரவைத் தெரிவித்தனர்.

கினியா- பிஸ்ஸாவில், கினியா மற்றும் கேப் வெர்டேவின் சுதந்திரத்துக்காகப் போராடும் ஆப்பிரிக்கக் கட்சி 10.8.2024 அன்று மாநாடு ஒன்றை நடத்தியது. அதில் கினிய மாணவர்கள் வெனிசுவேலாவுக்குத் தங்களது உறுதியான ஆதரவைத் தெரிவித்தனர். 

தென்கொரியாவின் சியோல் நகரத்தில், "ஜனநாயகம் மற்றும் இறையாண்மையைப் பாதுகாப்போம்'--- வெனிசுவேலாவின் மீதிருந்து கையை எடு" என்னும் முழக்கத்துடன் சமூக செயல்பாட்டாளர்கள் 'செயல்பாட்டுக்கான சர்வதேச தினம்' என்ற முழக்கத்துடன் போராட்டங்களை நடத்தினார்கள். ஜூலை 28, 2024 அன்று குடியரசுத் தலைவரின் தேர்தல் முடிவுகளை உலகம் மதிக்க வேண்டும் என்பதோடு வெனிசுவேலாவின் மீதான அமெரிக்காவின் தலையீட்டையும் கண்டித்தனர்.

ஏராளமான நாடுகளில் மக்கள் திரள் இயக்கங்கள் அவர்களுடைய நாட்டில் உள்ள வெனிசுவேலாவின் தூதரகங்கள் முன் திரண்டு, பொலிவரியாவின் புரட்சி மற்றும் ஜனநாயகத்துக்குத் தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர் கலீசியாவின் வீகோ , தென் ஆப்பிரிக்காவின் பிரிட்டோரியா, அங்கோலாவின் லுவாண்டா , நார்வேயின் ஆஸ்லோ, செர்பியா, எகிப்து, மாலி மற்றும் செனெகல் ஆகிய நாடுகளில் இருந்த மக்களமைப்புகள் அவர்கள் நாட்டிலுள்ள வெனிசுவேலாவின் தூதரகங்களில் தங்களின் ஒற்றுமையை அறிவித்த கூட்டங்களை நடத்தின. கங்கோ ஜனநாயகக் குடியரசு நாட்டில் நாட்டின் கின்ஷாசா நகரில் இளம் விவசாயிகளின் அமைப்பினர் [The League of Young Peasants of the DRC (Ljp-RDC), "வெனிசுவேலாவின் மீதிருந்து கையை எடு" என்ற பதாகைகளுடன், முழக்கத்துடன் போராட்டங்கள் நடத்தினார்கள். தென் கொரியாவின் சியோலில், "உலகப் போர்களைத் தூண்ட வேண்டாம்! அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக!" என்று பொறிக்கப்பட்ட பதாகைகளுடன் சமூகச் செயல்பாட்டாளர்கள் போராட்டங்கள் நடத்தினார்கள். இத்தாலியில் ரோமில் சமூக செயல்பாட்டாளர்கள் வெனிசுவேலா குடியரசுத் தலைவர் நிகோலஸ் மதுரோவுக்கும், "சாவிஷ்ட்டா மக்கள்" என்று அன்புடன் அழைக்கப்படும் பொலிவரியாவின் புரட்சியாளர்களுக்கும் தங்களது ஆதரவு முழக்கங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்திப் போராட்டங்கள் நடத்தினார்கள்.

கடந்த 20-ஆம் நூற்றாண்டு முழுவதும் லத்தின் அமெரிக்க நாடுகளில் ஜனநாயக விரோதமான சதித் திட்டங்கள் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஈடுபட்டது. அதைப் போலவே இப்பொழுதும் நிகோலஸ் மதுரோவின் வெற்றிக்குப் பின் ஆட்சி மாற்றத்தை அது வலியுறுத்தியது. அதற்கு எதிராக ஆகஸ்ட் 9, 2024 அன்று அமெரிக்காவின் செயல்பாட்டாளர்கள் நியூயார்க் நகரத்திலுள்ள நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கை அலுவலகத்துக்கு முன் பெருந்திரளாகக் கூடினார்கள்; வெனிசுவேலாவில் மதுரோவை வீழ்த்திவிட்டு புதிய ஆட்சி அமைக்க வலியுறுத்தி ஆதரவு தெரிவித்ததாக ---- அது தயார் செய்த போலித் தரவுகளை கடுமையாக விமர்சித்தனர்; ஆகஸ்ட் 17, 2024 அன்று "பாக்ஸ் நியூஸ் தலைமை அலுவலகத்தில்' பேரணி நடத்தினார்கள. சோசலிசம் மற்றும் விடுதலை கட்சியின் உறுப்பினர்கள் [PSL-- Party for Socialism and Liberation] பாஸ்டன் நகரத்தில் 'பாஸ்டன் குளோபின்தலைமை அலுவலகத்தின் வெளியே பேரணி நடத்தினார்கள். சான் பிரான்சிஸ்கோவில், PSL கட்சியின் செயல்பாட்டாளர்கள், உலகின் பெரும் பணக்காரரான இலான் மஸ்கின் உலகின் மிகப்பெரிய சமூக வலைதளமான X -ன் தலைமை அலுவலகத்தின் வெளியே மக்கள் மத்தியில் வெறுப்பைத் தூண்டுவது மற்றும் தவறான தகவல்களைச் சமூக வலைதளத்தில் பரப்பும் இலானுடைய செயலைக் கண்டித்துப் போராட்டங்களை நடத்தினார்கள்.

ஆகஸ்ட் 17,2024 வெனிசுவேலாவில் வலதுசாரிகளை எதிர்த்தும், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த சாவோவின் ஆதரவாளர்களான இடது சாரிகள் வழிகாட்டுதலில் கராகசிலும் மற்றும் பிற நகரங்களிலும் மதுரோவுக்கு ஆதரவான போராட்டங்கள் நடந்தன. 

இதற்கிடையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் நிகோலஸ் மதுரோ தலைமையிலான போராட்டங்களில் கராகசின் மத்திய பகுதியில் பெருந்திரளாக பங்கு கொண்டார்கள்; குறிப்பிடத்தக்கதாக சமூக அரசியல் இயக்கங்களும், சாவோவின் ஆதரவாளர்களான இடதுசாரி அமைப்புகளும் நடத்திய போராட்டங்களில் உறுதியான பங்கு கொண்டனர்.

வெனிசுலாவில் மதுரோவின் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதியை முறியடிக்க இன்று உலகெங்கும் மக்கள் ஒன்று திரண்டு தங்கள் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளனர். உலகின் “பழமையான ஜனநாயக நாடு” என்ற வேடம் கலைந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கோர முகம் இன்று உலகம் முழுவதும் அம்பலப்பட்டு நிற்கிறது.

 - கவிதா

(ஆதாரம்:Monthly Review Online ஆகஸ்ட் 24. 2024 ல் வந்த கட்டுரை)

Comments

Popular posts from this blog

ஒடுக்கு முறைக்கு எதிரான எம்ஆர்எப் (MRF) தொழிலாளர்களின் போராட்டம் வெல்லட்டும்!

  மெட்ராஸ் ரப்பர் ஃபேக்டரி என்ற பெயரில் 1946 இல் இருந்து இயங்கி வரும் MRF நிறுவனம் சென்னையில் உள்ள திருவெற்றியூர் பகுதியில் சுமார் 79 ஆண்டுகளாக இயங்கி வருகிறது . நிறுவனம் பெரும் லாபம் அடைந்து வந்தாலும் தொழிலாளர்களின் நலன்கள், ஊதியம், பணிப் பாதுகாப்பு, நிரந்தர வேலை போன்ற அடிப்படை உரிமைகளை மறுத்து வந்தது. நிர்வாகத்தின் எதேச்சதிகாரப் போக்கிற்கு எதிராக, தொழிலாளர்கள் தங்களின் உரிமைகளைப் பாதுகாக்க சங்கம் அமைத்துப் பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர் . சென்னையை தலைமையிடமாக கொண்டு 1946 இல் துவங்கபட்ட எம்ஆர்எப் ( MRF) நிறுவனம் திருச்சி , பாண்டிச்சேரி ஆகிய இடங்களிலும், பல மாநிலங்களிலும் கிளைகளை அமைத்து டயர் மற்றும் இரப்பர் பொருட்கள், பெயிண்ட், பொம்மைகள் ஆகியவற்றை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியா முழுவதும் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர் . திருவெற்றியூர் கிளையில் 1970, 1980, 1990 ஆகிய காலகட்டங்களில் தொழிலாளர்கள் தங்களுடைய நீண்ட நெடிய வீரமிக்க போராட்டத்தின் மூலமாக நிர்வாகத்தை அட...

தொழிலாளி வர்க்க ஒற்றுமையை பறைசாற்றும் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்புக்கு வாழ்த்துகள்!

  தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் ஒன்றாகிய ஒசூரில் தொழிலாளர்களின் ஐக்கியத்தை உருவாக்கவும் வலுப்படுத்தவும், பாட்டாளி வர்க்க அரசியலை அவர்களிடம் கொண்டு செல்லவும் பல்வேறு தொழிற்சங்கங்களின் முன்முயற்சியில் ஒசூர் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (Hosur Trade Union Federation -HTUF) தொடங்கப்பட்டுள்ளது. அதன் உருவாக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஒசூர் தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பாக துவக்க மாநாடு ஏப்ரல் 6 ஆம் தேதி மிகச் சிறப்பாக நடைபெற்றது ஒசூர் பகுதியில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்து பாட்டாளி வர்க்க அணியை வலுபடுத்துவது, பல்வேறு அரசியல் கருத்துகளால் பிளவுபட்டு இருக்கும் தொழிலாளர்கள் பாட்டாளி வர்க்கத்தின் சரியான அரசியலைப் பற்றிக் கொண்டு, வர்க்க உணர்வு பெற்று ஐக்கியப்பட்டு ஓரணியில் திரளும் வகையில் அவர்களிடம் தொடர்ந்து உரையாடுவது, முதலாளித்துவத்தின் கொடும் சுரண்டலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கும், தொழிற்சங்கங்களுக்கும் உதவுவது ஆகியவற்றை நோக்கமாக கொண்டு தொடங்கப்பட்ட இந்தக் கூட்டமைப்பில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து பாட்டாளி வர்க்கத்தின் கரத்தினை வலுபடுத்...

விஜய்யின் சினிமாவும் சினிமா அரசியலும்!

  கரூரில் செப்டம்பர் 27-ந் தேதி நடந்த விஜயின் அரசியல் பொதுக்கூட்டம் 10 இளம் குழந்தைகள், 18 பெண்கள் உட்பட 41 உயிர்களைப் பலி கொண்டு பெரும் துயரத்திற்குக் காரணமாகியுள்ளது. ஓர் அரசியல் பொதுக்கூட்ட நெரிசலில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மக்கள் இறந்தது தமிழ்நாட்டின் கடந்த எழுபத்தைந்து ஆண்டு வரலாற்றில் இல்லை என்றே கூறலாம். இந்த நிகழ்ச்சி மனதில் ஆழ்ந்த துயரத்தை உண்டாக்கும் அதே நேரத்தில், இன்னொரு பக்கம் இதற்குக் காரணமாக அமைந்துள்ள அரசியல், கலாச்சாரக் கூறுகள் நமது மனதில் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துகின்றன.   சினிமாவும் சினிமா அரசியலும்   எதிரிகள் எத்தனை பேர் வந்தாலும் தனி ஒருவராக விஜய் அவர்களைப் பந்தாடுவார். கார்களிலும் விமானங்களிலும் பறந்து எதிரிகளைச் சாடுவார். எதிரிகளின் துப்பாக்கிக் குண்டுகள் அவரைத் தொடக்கூட செய்யாது. அரசியல்வாதிகளின் ஊழலை எதிர்த்துப் போராடுவார். ரவடிகளைத் துவம்சம் செய்வார். இப்படித்தான் விஜய் நடித்த திரைப்படங்கள் அவரை பெரும் துணிச்சலும் வீரமும் கொண்டவராக, சாகசக்காரராக, நல்லவராக, நேர்மையானவராக, நீதிக்காகப் போராடுபவராக சித்தரித்து உள்ளன. இவ்வாறு பிரம்மாண...