Skip to main content

Posts

எரிமலையின் மீது ஓர் அடிக்கல் நாட்டு விழா

  பார்ப்பனர்கள் வேதங்கள் ஓத , சங்கப் பரிவாரங்கள் மகிழ்ச்சியில் திளைக்க , முப்பத்து முக்கோடி தேவர்களும் தேவலோகத்திலிருந்து பூ மாரி பொழிய , ஆகஸ்ட் 5 அன்று இந்த நாட்டின் பிரதமர் மோடி தனது திருக்கரங்களால் வெள்ளியாலான செங்கல்லை எடுத்துத் தர அயோத்தியில் இராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது .      முப்பத்து முக்கோடி தேவர்களும் பூ மாரி பொழிந்ததை நீ கண்டாயா ? என்று சிலர் கோபமாகக் கேட்கலாம் . அதை நம்ப மறுக்கலாம் . ஆனால் சங்கப் பரிவாரங்களும் பா . ஜ . கட்சியினரும் அவர்களுடைய ஊதுகுழல்களான முதலாளிய ஊடகங்களும் இந்த நிகழ்ச்சியை “ இந்திய மக்கள் நூற்று முப்பது கோடிப் பேரின் கனவு இன்று நிறைவேறியது . இது இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நிகழ்ச்சி ” என்று திரும்பத்திரும்ப பரப்புரை செய்து கொண்டிருந்தபோது அதை எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டோம் .    இராமர் கோயில் நூற்று முப்பது கோடி மக்களின் கனவாக இருந்தது எனக் கூறியபோது அந்தக் கூற்றின் மீது ...