Skip to main content

Posts

மக்கள் விரோத அரசை எதிர்ப்பது தேசத்துரோகம் ஆகுமா? கருத்துரிமையை முடக்கும் ( IPC -124 A) சட்டத்தை உடனே அகற்று.

  அண்மைக் காலங்களில் அறிவுஜீவிகள் , மனித உரிமைச் செயல்வீரர்கள் , திரைப்படத் தயாரிப்பாளர் , பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் , மாணவர்கள் , மற்றும் இதழியலாளர்கள் ஆகியோருக்கு எதிராகத் தேசத் துரோகக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படுவதும் , சிறைப்படுத்தப்படுவதும் , பிணை மறுக்கப்படுவதும் , மருத்துவ உதவிகள் நிராகரிக்கப்படுவதும் , சிறையில் அடிப்படை வசதிகள் கூட அளிக்கப்படாமல் உடல்ரீதியாகவும் உளவியல்ரீதியாகவும் துன்புறுத்தப்படுவதும் அதிகரித்து வருகின்றன .  இந்தத் தேசத் துரோகச் சட்டம் என்பது என்ன? இதன் பின்னணி என்ன?   இந்தியத் தண்டனைச் சட்டத்தின் ( இ.த.ச. ) நான்காவது பிரிவில் அரசுக்கு எதிரான குற்றங்களின் கீழ் பிரிவு 124 அ அரசெதிர் குற்றம் என்பதைப் பின்வருமாறு வரையறுக்கிறது:  ‘ இந்தியாவில் சட்டப்படி நிறுவப்பெற்ற அரசினை எழுத்து , சொல் , சைகை , அல்லது பார்க்கக்கூடிய சாதனங்கள் மூலமாக , அல்லது வேறுவகையில் , வெறுப்புக்கு அல்லது அவமதிப்புக்கு உள்ளாக்குகிற , அல்லது அரசுக்கு எதிராக அதிருப்தியைக் கிளறுகிற ஒருவர் ஆயுள் தண்டனையுடன் அபராதமும் சேர்த்து விதிக்கப்படுவார் அல்லது மூன்று ஆண்டுகள...

தொழிலாளர் போராட்டங்களை ஒடுக்குவதில் முதலாளிகளின் கைத்தடியாக அரசு!

     கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் நரசபுரத்தில் , தைவான் நாட்டை சேர்ந்த விஸ்ட்ரான் எனும் நிறுவனம் அமைந்துள்ளது . இந்த நிறுவனமானது அமெரிக்காவைச்   சேர்ந்த ஆப்பிள் செல்போன் நிறுவனத்திற்கான பாகங்களை உற்பத்தி செய்து வருகிறது . இதில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு ஊதியக் குறைப்பு செய்ததாலும், ஊதியம் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததாலும் , மிகைப்பணி நேரத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தொடர்ந்து 12 மணி நேரம் வேலை செய்யத் தொழிலாளர்கள் நிர் ப்பந்தம் செய்யப்பட்டதாலும் டிசம்பர் 12 அன்று தொழிலாளர்கள் நிறுவனத்திற்கு எதிராகப் போராட்டங்களில் ஈடுபட்டனர் . அந்தப் போராட்டமானது ஆலையை நொறுக்குமளவிற்குத் தீவிரமானது . இதனையடுத்து தொழிற்சாலை மூடப்பட்டதோடு பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டதற்காக   160 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .      ஐபோன் உற்பத்தியில் முதன்மையாக விளங்கும் ஆப்பிள் நிறுவனமானது தானே நேரடி உற...