Skip to main content

Posts

மரண பயத்தில் இருக்கும் மக்களை உயிரோடு விழுங்கும் பிணந்தின்னிகள்!

கொரோனா என்னும் பெரும் தொற்றுப் பூதம் மரண பயத்தை எங்கும் விதைத்துள்ளது. தந்தையை, தாயை, கணவனை, மனைவியை, சகோதரனை, சகோதரனை, குழந்தைகளை, நண்பர்களை என இலட்சக் கணக்கில் கொரொனோ பூதம் பலி கொண்டு வருகிறது. நாடெங்கும் மக்கள் மரண பயத்தில் மூழ்கியுள்ளனர். உலக நாடுகளின் உதவிகளும்   இங்குள்ள முதலாளிகளின் பகற்கொள்ளைகளும் ! இந்திய ஒன்றியத்தில் கோர தாண்டவமாடும் கொரானாவிலிருந்து மக்களைக் காப்பாற்ற   உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல்வேறு நாடுகளும், நிறுவனங்களும், மக்கள் அமைப்புகளும், தனி நபர்களும் மருந்துகளையும், ஆக்சிஜன் செறிவூட்டிகளையும், ஆக்சிஜன் உருளைகளையும், நிதியையும் அனுப்பி வருகின்றன. ஆனால் இந்த நாட்டில் உள்ள தனியார் மருத்துவமனை முதலாளிகளும்  மருந்துகளையும் மருத்துவ உதவிக் கருவிகளையும்   தயாரிக்கும் நிறுவனங்களும், அவற்றை விநியோகிக்கும் வணிக நிறுவனங்களும் நிலவும் மரண பயத்தைப் பயன்படுத்திக் கொண்டு சொந்த நாட்டு மக்களையே ஈவு இரக்கமின்றிக் கொள்ளையடித்து வருகின்றன. தனியார் மருத்துவமனைகளும் கார்பொரேட் மருத்துவமனைகளும் கொரொனோ சிகிச்சைக்கு என்று   ரூபாய் மூன்று இலட்சத...